உள்ளடக்கத்துக்குச் செல்

வித்யாபதி தாம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வித்யாபதி தாம் மந்திர்
Vidyapati Dham Mandir
கவிஞர் வித்யாபதிக்கும் கட்டப்பட்ட ஒரு இந்து புனித தலம் மற்றும் கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:பீகார்
மாவட்டம்:சமசுதிபூர்
அமைவு:பிலாசுவர், வித்யாபதி நகர்
ஆள்கூறுகள்:25°36′06″N 85°48′03″E / 25.6015316°N 85.8007872°E / 25.6015316; 85.8007872
கோயில் தகவல்கள்
கவிஞர் வித்யாபதி முக்தியடைந்த இடம்

வித்யாபதி தாம் (Vidyapati Dham) என்பது சிவபெருமானுக்கும் மைதிலி கவிஞர் வித்யாபதிக்கும் கட்டப்பட்ட ஒரு இந்து புனித தலம் மற்றும் கோயிலாகும். மைதிலி கவிஞர் வித்யாபதியின் நினைவிடமாகவும் இருந்து வருகின்கிறது. இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள மிதிலா பிராந்தியத்தில் உள்ள சமசுத்திபூர் மாவட்டத்தின் வித்யாபதி நகர் கிராமத்தில் மந்திர் அமைந்துள்ளது. இதன் வளாகத்தில் உள்ள கோவிலில் புனிதமான சிவலிங்கத்திற்கு அபிசேகம் செய்யப்பட்டு வருகின்றது.[1] இது பாலேசுவர் சுதான் என்றும் அழைக்கப்படுகிறது.[1][2][3][4]

கோயில் திருவிழா

[தொகு]

வித்யாபதி தாம் என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் மிதிலா பகுதியில் அமைந்துள்ள மைதிலி கவிஞர் வித்யாபதியுடன் தொடர்புடைய ஒரு வரலாற்று மற்றும் புராண இடமாகும். மைதிலி கவிஞர் வித்யாபதி தனது வாழ்வின் கடைசித் தருணங்களைக் கழித்த வந்த இடம் இதுவாகும்.[1] ஒவ்வொரு ஆண்டும் பீகார் அரசால் மைதிலி கவிஞர் வித்யாபதிக்கு, வித்யாபதி ராச்கியே மகாத்சவ் என்றழைக்கப்படும் ஒரு பிரம்மாண்டமான மூன்று நாள் திருவிழா நடத்தப்படுகின்றது. இவ்விழா இந்த ஆலய வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு கொண்டாடப்படுகிறது. திருவிழா கொண்டாட்டத்தின் போது, ​​இப்பகுதியில் உள்ளவர்கள், பீகார் மாநிலத்தின் முக்கிய அமைச்சர்கள் ம்ற்றும் அரசியல் தலைவர்கள், வெளிபகுதியில் உள்ளவர்கள் இவ்விழாவில் பங்கேற்க வருகிறார்கள். இது பீகார் அரசால் ஒரு மாநில விழாவாக அங்கீகரிக்கப்பட்டு கொண்டடப்பட்டு வருகின்றது.[5]

புராணங்களின்படி, இந்த இடம் சிவபெருமானின் புகழ்பெற்ற பக்தரான வித்யாபதி மற்றும் கங்கை தேவி ஆகியோருடன் தொடர்புடையது ஆகும். கவிஞர் வித்யாபதி கங்கை தேவியைச் சந்திக்கச் சென்ற பயணத்தில், இந்த இடத்தில் களைப்படைந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, ​​கங்கை தேவி தனது பக்தரான வித்யாபதியைச் சந்திக்க இதே இடத்திற்கு வந்தாகவும் கூறப்படுகின்றது.[1]

மைதிலி கவிஞர் வித்யாபதி தனது இறுதி தருணங்களில் கங்கை நதியை நோக்கி நடந்தார் என கோயில் நிர்வாகத்தில் உள்ளவர்களால் தெரிவிக்கப்படுகின்றது. இவர் இந்த இடத்தை அடைந்ததும் மிகவும் சோர்வடைந்து இங்கே அமர்ந்தார். பின்னர் அருகில் இருந்த ஓர் இடையனிடம் கங்கை நதி இங்கிருந்து எவ்வளவு தூரத்தில் உள்ளது என்று கேட்டார். அதற்கு அந்த இடையன், தூரம் இரண்டரை முதல் மூன்று கோசு என்று பதிலளித்தான். இந்தப் பதிலைக் கேட்ட வித்யாபதி, கங்கை தேவிக்காக இவ்வளவு தூரம் வர முடியுமென்றால், கங்கை அன்னை ஏன் இங்கு வர முடியாது என்று கூறி அங்கேயே நின்றார். புராணத்தின்படி, இதன் பிறகு கங்கை நதியின் ஒரு நீரோட்டம் அங்கு வந்து வித்யாபதியை தன்னுடன் இழுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த இடத்தில் கவிஞர் வித்யாபதி தனது உயிரை துறந்தார். மேலும் இவ்விடம் கவிஞரின் நினைவிடமாக பிரபலமாக இருந்து வருகின்றது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 3 4 5 "हिन्दुस्तान स्पेशल: समस्तीपुर का वो धाम, जहां सावन में सूख जाता है कुआं, जानें क्या है मान्यता?". www.livehindustan.com (in இந்தி). 2023-07-07. Retrieved 2025-11-19.
  2. "महाकवि विद्यापति के बुलावे पर पहुंची थीं गंगा और शिव हुए विराजमान - Ganga and Shiva were seated on the call of Mahakavi Vidyapati". Jagran (in இந்தி). Retrieved 2025-11-19.
  3. "Vidyapati Dham: यहां सावन में सुख जाता है कुआं, विद्यापति के बुलावे पर पहुंची थीं मां गंगा…". Prabhat Khabar (in இந்தி). 2024-06-18. Retrieved 2025-11-19.
  4. "बम बम के जयकारे से गूंज उठा समस्तीपुर का विद्यापति धाम, दर्शन के लिए उमड़ा श्रद्धालुओं का जनसैलाब". News18. https://hindi.news18.com/photogallery/dharm/second-monday-of-sawan-heavy-crowd-at-vidyapati-dham-samastipur-news-local18-ws-l-9424349.html.
  5. "3 दिवसीय विद्यापति राजकीय महोत्सव शुरू: मंत्री विजय चौधरी ने किया कार्यक्रम का उद्घाटन, बोले- विद्यापति भक्ति और श्रृंगार रस के कवि थे - Samastipur News" (in hi). Dainik Bhaskar. 2024-11-13 இம் மூலத்தில் இருந்து 2024-11-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20241114040554/https://www.bhaskar.com/local/bihar/samastipur/news/three-day-vidyapati-state-festival-begins-at-vidyapati-dham-133954117.html.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வித்யாபதி_தாம்&oldid=4499799" இலிருந்து மீள்விக்கப்பட்டது