வித்யாதரன் (சந்தேல வம்சம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வித்யாதரன்
பரமபட்டாரக மகாராசாதிராச பரமேசுவரன்
சந்தேல மன்னன்
ஆட்சிக்காலம்ஆட்சிக் காலம் சுமார் பொ.ச. 1003-1035
முன்னையவர்காந்தன்
பின்னையவர்விசயபாலன்
அரசமரபுசந்தேலர்கள்
வித்யாதரனால் கட்டப்பட்ட கந்தாரிய மகாதேவர் கோயில்.

வித்யாதரன் (Vidyadhara) (ஆட்சிக்காலம் பொ.ச.1003-1035) இந்தியாவை ஆண்ட சந்தேல வம்சத்தின் அரசனாவான். செகசபுக்தி பிராந்தியத்தின் (இன்றைய மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் உள்ள புந்தேல்கண்ட் ஆட்சியாளராக இருந்தான். வித்யாதரன், சந்தேல அரசன் காந்தனின் வாரிசாவான். மேலும் வடமேற்கில் சம்பல் ஆற்றுக்கும் தெற்கில் நருமதைக்கும் இடையே சந்தேல அதிகாரத்தை விரிவுபடுத்தினான்.

ஆட்சி[தொகு]

1970கள் வரை, ஆர். கே. தீக்சித் போன்ற வரலாற்று அறிஞர்கள் வித்யாதரனின் ஆட்சியின் தொடக்கத்தை பொ.ச. 1018 என்று கருதினர். [1] இருப்பினும், பின்னர், வித்யாதரனின் இராணி சத்யபாமாவின் செப்புத் தகடு குண்டேசுவரில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கல்வெட்டு பொ.ச.1004 தேதியிட்டது. இது வித்யாதரன் ஏற்கனவே 1004இல் ஆட்சி செய்ததை நிரூபிக்கிறது. இதன் அடிப்படையில் அறிஞர் எஸ். கே. சுல்லேரி வித்யாதரனின் ஆட்சிக்காலம் பொ.ச. 1003-1035 எனக் குறிப்பிடுகிறார்.. [2] [3]

கன்னோசி படையெடுப்பு[தொகு]

பொ.ச. 1018இல் கசினியின் மகுமூது கன்னோசி மீது படையெடுத்தான். அந்த நேரத்தில் ஆட்சியிலிருந்த பிரதிகார மன்னன் (ஒருவேளை இராஜ்யபாலன்) நகரத்தை விட்டு வெளியேற்றப்பட்டான். 12 ஆம் நூற்றாண்டின் முஸ்லிம் வரலாற்றாசிரியர் அலி இபின் அல்-ஆதிரின் கூற்றுப்படி, கஜுராஹோவின் பிடா என்ற மன்னன் இந்த கோழைத்தனத்திற்கு தண்டனையாக கன்னோசி மன்னரைக் கொன்றான். பிடா என்பது "வித்யா" (அதாவது வித்யாதரன்) என்பதன் மாறுபாடு என்று நம்பப்படுகிறது. சில பிற்கால முஸ்லிம் வரலாற்றாசிரியர்கள் இந்த பெயரை "நந்தா" என்று தவறாகப் படித்தனர். இதன் அடிப்படையில் பிரித்தானிய இந்திய அறிஞர்கள் கன்னோசி மன்னரைக் கொன்றவரை வித்யாதரனின் முன்னோடி காந்தன் என்று அடையாளம் கண்டனர். இருப்பினும், மகோபாவில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு, கன்னோசி ஆட்சியாளனை தோற்கடித்தவன் வித்யாதரன் என்பதை உறுதிப்படுத்துகிறது. [4] [1] கச்சபகத குடும்பத்தைச் சேர்ந்த அர்ச்சுனனின் துப்குண்ட் கல்வெட்டு, அர்ச்சுனன் இராச்சியபாலனைக் கொன்றதாகக் கூறுகிறது. கச்சபகதர்கள் ந்தேலர்களின் நிலப்பிரபுக்களாக இருந்தனர். எனவே அர்ச்சுனன் வித்யாதரனின் பிரதிநிதியாக செயல்பட்டதாகத் தெரிகிறது. [5]

கசுனவித்துகளுக்கு எதிரான போராட்டம்[தொகு]

வித்யாதரன் கஜுராஹோவில் உள்ள கந்தாரியா மகாதேவா கோயிலைக் கட்டினான். [6]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 Dikshit 1976.
  2. Sullerey 2004.
  3. Indian Archaeology: A Review. Archaeological Survey of India. 1975. பக். 55. https://books.google.com/books?id=jW1DAAAAYAAJ. 
  4. Mitra 1977, ப. 72-73.
  5. Mitra 1977, ப. 74-75.
  6. Sullerey 2004, ப. 26.

உசாத்துணை[தொகு]