வித்திலை இல்லா தாவரங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வித்திலை இல்லா தாவரங்கள் (Acotyledon) என்பது பொதுவாக விதை தாவரங்களை குறிப்பதாகும். இந்த தாவரங்களில் வித்திலைகள் இல்லை. உதாரணமாக ஆர்க்கிட், தூத்துமக் கொத்தான் போன்ற வகைத் தாவரங்களை குறிப்பிடலாம். ஆர்கிட் தாவர விதைகள் மிகச்சிறியதாகவும், முழுமையாக வளர்ச்சி அடையாத கருவையும் கொண்டிருக்கும். எனவே இவை ஆரம்ப கால உணவுக்கு வேரகப்பூஞ்சைகளை சார்ந்து இருக்கும். இவை பூஞ்சை சார்பூட்ட உயிரிகள் என அழைக்கப்படுகின்றன.

பத்தொன்பதாம் ஆம் நூற்றாண்டு மற்றும் அதற்கு முன்னர் சில ஆசிரியர்கள் பெரணி, மாஸ்,[1][2][3] போன்ற விதைகள் இல்லாத தாவரங்களை வித்திலை இல்லாத தாவர வகையில் சேர்த்தனர், வேறுசில ஆசிரியர்கள் வித்திலை இல்லாத, விதைகள் உடைய தாவரங்களை வித்திலை இல்லா தாவர வகையில் சேர்த்தனர்.[4]

பூக்கும் தாவரங்கள் இரு பெரும் பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளன, அவை, ஒருவித்திலைத்தாவரங்கள், இருவித்திலைத்தாவரங்கள் ஆகும். ஒருவித்திலைத்தாவரங்களில் ஒரு வித்திலை மட்டும் காணப்படும். அது விதையில் சேமிக்கப்பட்டுள்ள உணவை உறிஞ்சி கொடுக்கும் பணியை மட்டும் செய்கிறது, மேலும் வளர்ச்சி அடைவதில்லை. இருவித்திலைத்தாவரங்களில் உள்ள இரு வித்திலைகளும் இலை போல வளர்ச்சி அடைகின்றன. ஊசியிலை மரங்கள், விதைமூடியிலி தாவரங்களில் மலர்கள் தோன்றுவதில்லை, அனால் அவற்றின் விதைகளில் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட வித்திலைகள் காணப்படுகின்றன.

சான்றுகள்[தொகு]