விதைப்பந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
   விதைகளை செம்மண் மற்றம் சாணம் கலந்த உருண்டையில் வைத்து சாலையோரங்களில் வீசுவதுதான் விதைப்பந்து முறை ஆகும். களி மண்ணையும், மாட்டு சானத்தையும் சம அளவில் எடுத்து பிசைந்து அதை உருண்டை வடிவில் உருட்டி அதனுள் ஒன்றிரண்டு விதைகளை வைத்து மண்ணாலேயே மூடிவிட வேண்டும். தயாரிக்கப்பட்ட விதைப் பந்துகள் முதலில் நிழலில் உலர வைக்கப்பட்டு பின்னர் வெயிலில் காய வைத்து வீசப்படும்.

விதைப்பந்துகளை எந்த பகுதியில் வீச வேண்டும்.

   எங்கெல்லாம் மரக்கன்றுகள் வைத்து தினசரி பராமரிக்க முடியாதோ அங்கெல்லாம் விதைப் பந்துகளாக வீசி மரங்களை விளர்ப்பதாகும். வனப் பகுதிகளில் இந்த விதைப் பந்துகளை வீசுவதன் மூலம் வனப்பகுதிகளில் மரங்களின் எண்ணிக்கை அதிகமாகி அடர்ந்த காடுகளை உருவாக்க முடியும். 
   வெளிநாடுகளில் கேம்ளியுல் வடிவில் விதைப்பந்துகளை உருவாக்கி அதை விமானம் மூலம் காடுகளில் தூவுகின்றனர். ஆனால் கிராமங்களில் தூவப்பம் விதைப்பந்துகளில் இருந்து முளைக்கும் செடிகளை கால்நடைகள் கடித்து விடுவதற்கு வாய்ப்புகள் அதிகம். எனவே வனப் பகுதிகளில் இது குறைவு. இடம் பார்த்து விதைப்பந்துகளை தூவ வேண்டும்.

எண்ணெய் வித்துக்கள்

   புங்கை, வேங்கை, மகிழம், இலவம், வாகை, கொய்யா, புளி போன்ற நாட்டு மர விதைகளை விதைப் பந்துகளாக தூவலாம்.
  விதைப் பந்துகள் மற்றும் கன்றுகள் வளர்ப்பதற்கு நாட்டு மர விதைகளே சிறந்தது. விதைப்பந்துகள் உருவாக்க தேவையான சான எரு மற்றம் செம்மன் ஆகியவற்றை அந்தந்த இடத்திலேயே தேர்வு செய்து கொள்ளலாம். 
  விதைப் பந்துக்களில் நாட்டு விதைகளே பயன்படுத்தப்படுகின்றன. எனவே விதைப்பந்தில் உள்ள 99 சதவித விதைகள் முளைத்து விடும். கோடை காலத்தில் விதைப் பந்துகளை போட்டாலும் ஒரு மழை கிடைத்தால் கூட அவை முளைத்து விடும்.

[1]

  1. தமிழக விவசாய உலகம் - ஜீன் 2012
"https://ta.wikipedia.org/w/index.php?title=விதைப்பந்து&oldid=2723921" இருந்து மீள்விக்கப்பட்டது