விதைத்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மண்ணில் விதைகளை ஊன்றும் செயலுக்கு விதைத்தல் (Sowing) என்று பெயர். விதைத்தல் மூலம் பயிரிடப்படும் தாவரங்கள் ஓட்ஸ், கோதுமை, ராசி புல்வகைகள், பயறு வகைகள், சோளம் மற்றும் சோயா பீன்ஸ் போன்றவை ஆகும்.

விதைத்தலுக்கு முன்பு விதையின் தன்மை[தொகு]

விதைகள் தரமானதாகவும், தொற்று நோய்க்கிருமிகள் இல்லாமலும் இருக்க வேண்டும்.

விதைத்தலுக்கு முன்பு பொதுவாக கவனிக்க வேண்டியவை[தொகு]

விதைக்கு விதை சரியான இடைவெளி விட்டு விதைக்க வேண்டும் மேலும், நிலத்தை ஈரப்படுத்த வேண்டும்.

விதைத்தலின் வகைகள்[தொகு]

விதைத்தலில் கை மூலம் விதைத்தல் இயந்திரம் மூலம் விதைத்தல் என இரு பெரு வகைப்பாடுகளாகப் பிரிக்கப்படுகின்றன.

பாராம்பரிய முறைப்படியான விதைத்தல்[தொகு]

பாரம்பரிய முறைப்படியான கைமூலமான விதைப்பானது பின்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றன.[1]

  • முகடு விதைப்பு
  • பரந்த படுக்கை விதைப்பு
  • தள விதைப்பு

எந்திரம் மூலம் விதைத்தல்[தொகு]

விதையானது புனலின் உதவியுடன் அல்லது நான்கு குழல்களுடன் கூடிய ஏர்கலப்பையின் உதவியுடன் விதைத்தல். இம்முறையில் விதைகள் உடனடியாக மூடப்படுவதால் பறவைகளிடமிருந்து பாதுகாக்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விதைத்தல்&oldid=3498996" இருந்து மீள்விக்கப்பட்டது