விதைகளின் சேமிப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விதைகளின் சேமிப்பு இந்தியாவில் உற்பத்தியாகும் மொத்த உற்பத்தியில் 70% நுகர்தலுக்காகவும், விதை,தீவனம் ம்ற்றும் கூலி கொடுப்பதற்காக என்று சேமித்து வைக்கப்படுகிறது.[1] 30% மட்டுமே வணிகத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. வேளாண் தொழில்நுட்ப மேம்பாட்டினால், தானியங்கள் மற்றும் எண்ணெய் வித்துக்களை கூடுதல் காலம் சேமித்து வைக்கலாம். அரசு மற்றும் அரசு சார்ந்த சேமிப்புக் கிடங்குகளை ஒப்பிட்டுப்பார்க்கும் போது விவசாயிகள் மற்றும் வணிகர்களின் சேமிப்பு முறைகளால் ஏற்படும் இழப்பு அதிகமாக உள்ளது. ஆனால், அரசுக் கிடங்குகளின் கொள்ளளவு மிகக் குறைவாகவே உள்ளது( மொத்த உற்பத்தியில் 3-5%).

சேமிப்பு[தொகு]

கிராமப்புறங்களில், தேவைகேற்ப மூன்று மாதங்கள் முதல் இரண்டு வருடங்கள் வரை விதைகளை சேமிக்கிறார்கள். அறுவடைக்குப்பின் ஏற்படும் இழப்பு அளவு மற்றும் தரங்களிலும் நிகழ்கிறது.பூச்சிகள், எலிகள், பறவைகள், நுண்ணுயிரிகள் போன்றவை சேமிப்பின் போது தாக்குகின்றன. இதைத் தவிர, பூச்சிகளின் கழிவு, எலிகளின் புழுக்கை மற்றும் முடி போன்றவை தானியங்களை அசுத்தப்படுத்துகின்றன.நுண்ணுயிரிகள் புற்றுநோய் ஏற்படுத்தும் நச்சுகளை உற்பத்தி செய்கின்றன. சேமிப்பில் ஏற்படும் இழப்பைக் குறைத்தால், நாம் பசுமைப் புரட்சியின் நன்மைகளை அனுபவிக்க முடியும்.

பூச்சிகள்[தொகு]

பூச்சிகள் அறுவடையின்போது வயலில் இருந்து சேமிப்புக் கிடங்கிற்கு வருகின்றன; விதைகளின் ஈரத்தின் மூலமாக பூசணங்கள் வருகின்றன. பூச்சிகளும் பூசணங்களும் ஒண்றோடொன்று தொடர்புடையவை. தானியங்களும் எண்ணெய்வித்துக்களும் நன்முறையில் சேமிக்கப்பட வேண்டும் என்றால், சுத்தப்படுத்தப்பட்டு, தரம் பிரிக்கப்பட்டு, உலரவைக்கப்பட வேண்டும். 6-12 மாதங்கள் சேமிக்க வேண்டுமென்றால், தானியங்களில் 10-12% ஈரமும், எண்ணெய்வித்துக்களில் 7-9% ஈரமும் இருக்க வேண்டும். சுத்தம் செய்து உலர வைக்கப்பட்ட விதைகளை சுத்தமான, பழுது பார்க்கப்பட்ட, கிருமி நீக்கம் செய்யப்பட்ட சேமிப்புக் கிடங்குகளில் சேமிக்க வேண்டும். சேமிக்கும் அமைப்புகள் தானியங்களின் எடையைத் தாங்கக் கூடியதாகவும், வெளியில் உள்ள ஈரமான காற்றோடு தொடர்பற்றதாக இருக்க வேண்டும். குளிர்ந்த இடத்தில் இருக்க வேண்டும்.

சேமிப்பின் போது மிக முக்கியமானது, விதைகளின் ஈரத்தை சேமிக்காலம் முழுவதும் பாதுகாப்பான அளவில் பராமரிப்பதுதான்.உணவு தானியங்கள் ஈரத்தை உறிஞ்சிக் கொள்ளும் தன்மை உள்ளதால், மழையின் மூலமாகவும், வெளிக்காற்றின் ஈரத்தின் மூலமாகவும் ஈரமாகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.65 - 70 % ஈரப்பதத்தில் பூசணங்கள் வளரும். காற்றிலுள்ள ஒப்பு ஈரப்பதம் 60 சதத்துக்கும் குறைவாக இருந்தால்,உணவு தானியங்களை காற்றோட்டமாக வைக்கலாம்.

சான்றுகள்[தொகு]

  1. Rural-Level Storage of Foodgrains and Oilseeds (1991). Improved Rural Storage Technology. New Delhi: ICAR Publications. பக். 1-3. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=விதைகளின்_சேமிப்பு&oldid=3602528" இலிருந்து மீள்விக்கப்பட்டது