விண்வெளி அடிப்படை பொருளாதாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விண்வெளி அடிப்படை பொருளாதாரம் (Space-based economy) என்பது விண்வெளியில் மேற்கொள்ளப்படும் பொருளாதார நடவடிக்கைகளைக் குறிக்கும். சிறுகோள்கள் மற்றும் பூமிக்கு அருகிலுள்ள விண்பொருள்கள் உட்பட பிற சிறிய கிரகங்களிலிருந்து மூலப்பொருட்களை எடுப்பது, விண்வெளியில் உற்பத்தி, விண்வெளி வர்த்தகம், விண்வெளி நிலையங்களை உருவாக்குதல், விண்வெளி அடக்கம் மற்றும் விண்வெளி விளம்பரம் போன்ற விண்வெளியில் செய்யப்படும் கட்டுமானஙகள் முதலான அனைத்து நடவடிக்கைகளும் இதில் அடங்கும்.

விண்வெளி அடிப்படையிலான தொழில்துறை முயற்சிகள் தற்போது ஆரம்ப நிலையில் உள்ளன. இதுபோன்ற பெரும்பாலான முயற்சிகளுக்கு விண்வெளியில் கணிசமான நீண்டகால மனித இருப்பும் விண்வெளியை குறைந்த செலவில் அணுகுதலும் தேவைப்படும். எந்திரனியல், சூரிய ஆற்றல் மற்றும் வாழ்க்கை ஆதரவு அமைப்புகள் போன்ற பகுதிகளில் தொழில்நுட்ப அல்லது பொறியியல் மேம்பாடு பெரும்பாலான திட்டங்களுக்கு தேவைப்படும்.

ஆழமான விண்வெளி ஆய்வுக்கு ஆதரவாக ஒரு சர்வதேச வங்கியை உருவாக்க சில ஆய்வாளர்கள் வாதிடுகின்றனர்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

.