விண்வெளிப் பயணவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புவிக்கு மேலே அப்பிள் விண்வெளித் தொலைநோக்கி விண்வெளி ஓடம் 109 திட்டத்தில்

விண்வெளிப் பயணவியல் (Astronautics) என்பது புவியின் வளிமண்டலத்திற்கு அப்பால் இருக்கும் புற விண்வெளியில் பயணம் செய்வது பற்றிய கோட்பாடுகள் மற்றும் பறத்தல் செயல்பாடுகள் தொடர்பான அறிவியல் துறையாகும். இத்துறை அண்டப் பயணவியல் என்றும் அழைக்கப்படுகிறது.

வானூர்தியியல் என்ற சொல்லின் ஒப்புமை அடிப்படையில் விண்வெளிப் பயணவியல் என்ற சொற்றொடரும் உருவாக்கப்பட்டது. இவ்விரு துறைகளின் தொழில்நுட்பங்களும் ஒன்றுடன் ஒன்று மேற்படிதல் ஒரு குறிப்பிட்ட அளவுக்குச் சார்ந்துள்ளது. இதனால் விண்வெளி என்ற சொல் பெரும்பாலும் இரண்டு துறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

வானூர்தியியலில் உள்ளது போலவேநிறை, வெப்பநிலை மற்றும் புற சக்திகள் போன்றவற்றினைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்ப பயன்பாடுகள், விண்வெளியில் காணப்படும் உயர்தர வகை வெற்றிடம் அதாவது எடையின்மை நிலை, கதிர்வீச்சு வட்டாரங்களின் கோளிடை விண்வெளித் தாக்குதல்கள், தாழ்புவி காந்தப்பட்டைகள் ஆகியனவற்றை எதிர்கொள்ள அங்கும் அவசியாமாகின்றன.விண்வெளி செலுத்து வாகனங்கள் பெரும்பலம் வாய்ந்த சக்திகளை எதிர்த்து நிற்கவேண்டியுள்ளது.[1] செயற்கைக்கோள்கள் மிகவும் குறுகிய கால இடைவெளியில் பெரும் வெப்பநிலை வேறுபாடுகளைச் சந்திக்க வேண்டியுள்ளது.

இதனால் விண்வெளிப் பயணவியல் பொறியாளர்கள் மீது தீவிர கட்டுப்பாடுகள் சுமத்தப்படுகின்றன. விண்கலங்கள் சுற்றுப்பாதையை அடைய நிறை முக்கியத்துவம் பெறுவதால் விண்கலச் சுமையைக் குறைத்து வடிவமைத்தலும் முக்கியத்துவம் பெறுகிறது. வடிவமைப்பில் நிறையைச் சேமித்தால் விண்கலத்தின் பயணம் புவியின் நிறை ஈர்ப்பு விசையில் இருந்து விடுபட்டு சுற்றுப்பாதையை அடைதல் எளிதாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Understanding Space: An Introduction to Astronautics, Sellers. 2nd Ed. McGraw-Hill (2000)
"https://ta.wikipedia.org/w/index.php?title=விண்வெளிப்_பயணவியல்&oldid=2747505" இருந்து மீள்விக்கப்பட்டது