விண்வெளிப் பந்தயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

விண்வெளிப் பந்தயம் (Space Race) என்பது அமெரிக்காவிற்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் ஏற்பட்ட ஒரு போட்டியினை குறிக்கின்றது. பனிப்போர் நிலவிய காலத்தில் இவ்விரு நாடுகளும் விண்வெளியில் தங்களது மேலாதிக்கத்தினை நிலைநாட்ட செய்த நடவடிக்கைகள் உலக அறிவியல் வரலாற்றில் ஒரு முக்கியமான காலகட்டமாகும். இதன் முக்கியமான ஒரு மைல் கல்லாக சோவியத் ஒன்றியம் முதல் முதலாக ஒரு செயற்கைக் கோளினை விண்ணிற்கு அனுப்பியது, இன்னொரு மைல் கல்லாக அமெரிக்கா நிலவுக்கு ஒரு மனிதனை அனுப்பி சாதனை படைத்தது. இந்த பந்தயம் 1975இல் அப்பல்லோ-சோயூஸ் கூட்டுமுயற்சியுடன் முடிவுக்கு வந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=விண்வெளிப்_பந்தயம்&oldid=2764602" இருந்து மீள்விக்கப்பட்டது