உள்ளடக்கத்துக்குச் செல்

விண்வெளிச் சுற்றுலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விண்வெளிக்கு சுற்றுலா செல்வதை விண்வெளிச் சுற்றுலா எனலாம். மனித விண்வெளிப்பறப்பு 1961 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் நாள் யூரி ககாரின் என்னும் ரஷ்யரை ஏற்றிச் சென்ற வஸ்தோக் 1 என்னும் விண்கலப் பறப்புடன் தொடங்கியது. அதன் பின்னர் ஐக்கிய அமெரிக்காவும் சீனாவும் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி உள்ளன. இந்தப் பயணங்களின் நோக்கம் ஆய்வு; சுற்றுலா அல்ல. ஆனால் விண்வெளிக்கு சுற்றுலா செல்வது பலரின் கனவாக பலகாலமாக இருந்து வந்திருக்கிறது. இதற்கு தேவைப்படும் பெரும் பொருட் செலவு, தொழில்நுட்பம், தகுதி அண்மை வரை இதை எட்டா கனியாகவே நிறுத்தி இருந்தது. எனினும், இத்தகைய அனுமானங்களைப் பெற்றோர் விண்வெளிச்கு சுற்றுலா செல்வது இன்று சாத்தியமே. en:Dennis Tito என்ற அமெரிக்கரை உருசிய விண்கலம் ஒன்று முதல் விண்வெளிச் சுற்றுலாப் பயணியாக ஏப்ரல் 2001 ஏற்றிச் சென்றது.
1967 ஆம் ஆண்டு அமெரிக்கா அனுப்பிய மரினர்-5 எனும் ஆளில்லாத விண் ஓடம் வெள்ளிக் கிரகத்தை ஆராய்ந்தது. 1969 இல் அமெரிக்கா அனுப்பிய அப்பலோ-11 எனும் ஓடம் நீல் ஆம்ஸ்றோங், எட்வின் ஓல்ரின் ஆகியோருடன் சந்திரனில் தரை இறங்கியது. மரினர்-9 அமெரிக்காவினால் 1977 இல் செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட மனிதர்களற்ற விண் ஓடம்.அரிய பல தகவல்களை பூமிக்குஅனுப்பியது.
1980 களில் ரோகினி-1 எனும் ஆளில்லாத விண்வெளி ஓடத்தை அனுப்பியதன் மூலம் செய்மதியை விண்ணுக்கு அனுப்பிய எட்டாவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுக் கொண்டது.1983 இல் அமெரிக்கா அனுப்பிய பயனியர்-10 ஞாயிற்றுத் தொகுதியிலிருந்து விலகிச் சென்ற முதலாவது ஆளில்லாத விண்வெளி ஓடம் எனப் பதிவு செய்யப்பட்டது.[1][2][3]


மேற்கோள்கள்

[தொகு]
  1. Von der Dunk, F. G. (2011). "Space tourism, private spaceflight and the law: Key aspects". Space Policy 27 (3): 146–152. doi:10.1016/j.spacepol.2011.04.015. பன்னாட்டுத் தர தொடர் எண்:0265-9646. Bibcode: 2011SpPol..27..146V. http://digitalcommons.unl.edu/cgi/viewcontent.cgi?article=1059&context=spacelaw. பார்த்த நாள்: June 25, 2019. 
  2. Belfiore, Michael (2007). Rocketeers: how a visionary band of business leaders, engineers, and pilots is boldly privatizing space. New York: Smithsonian Books. p. [1]. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-06-114903-0.
  3. "Russia halts space tours as U.S. retires Shuttle". Reuters. March 3, 2010 இம் மூலத்தில் இருந்து April 30, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130430170837/http://www.reuters.com/article/2010/03/03/us-space-russia-idUSTRE6223VF20100303. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=விண்வெளிச்_சுற்றுலா&oldid=4102964" இலிருந்து மீள்விக்கப்பட்டது