விண்வெளிக் குடியிருப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டொன் டேவிஸ் என்னும் ஓவியரின் கற்பனையில் உதித்த ஸ்டன்ஃபோட் டோரஸ் (Stanford torus) விண்வெளிக் குடியிருப்பின் தோற்றம்.

விண்வெளிக் குடியிருப்பு என்பது, புவிக்கு வெளியில் அமையக்கூடிய தன்நிறைவான மனிதர் வாழிடங்களைக் குறிக்கும் ஒரு கருத்துரு ஆகும். இது அறிவியற் புனைகதைகளில் அதிகமாக இடம் பெறுவதுடன், பல நாடுகளின் விண்வெளித் திட்டங்களின் நீண்டகால இலக்காகவும் இருந்து வருகின்றது.

தொழில் நுட்ப முன்னேற்றத்தால் விண்வெளி செல்வதும், வெளிக் கிரகங்களில் அல்லது பறக்கும் கலங்களில் வாழ்வதும் சாத்தியம் ஆகி வருகின்றது. விண்வெளி ஆய்வுகளை மேற்கொள்வதற்காகவும், வேற்றுக் கிரகங்களில் கிடைக்க கூடிய கனிம வளங்களைப் பெறுவதற்காகவும் நீண்ட காலங்கள் மனிதர் விண்வெளியில் வாழ வேண்டி வரும். மேலும், எதிர்காலத்தில் உலகம் மனித வாழ்க்கைக்கு ஏற்றதற்றதாக மாறினால் விண்வெளியை அல்லது வேற்றுக் கிரங்களை மனிதர் நாட வேண்டி வரும். வேற்றுக் கிரகங்களில் அல்லது விண்வெளிக் கலங்களில் மனித வாழ்வுக்கு ஏற்ற முறையில் அமைக்கப்படும் சூழமைப்பை விண்வெளிக் குடியிருப்புக்கள் எனலாம்.