விண்வெளிக் காலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விண்வெளிக் காலம் (Space Age) என்பது விண்வெளிப் போட்டி, விண்வெளிக் கண்டுபிடிப்புகள், விண்வெளித் தொழில்நுட்பம் சார்ந்த நிகழ்வுகளின் காலத்தையும் இந்நிகழ்வுகளாலமுருவாகிய கலாச்சார வளர்ச்சியையும் குறிக்கிறது. விண்வெளிக் காலம் பொதுவாக உருசியா 1957 இல் விண்வெளிய்ல் ஏவிய சுபுட்நிக்-1 என்ற செயற்கைக்கோளுடன் தொடங்கியதாகக் கருதப்படுகிறது.

தொடக்கம்[தொகு]

பல்வேறு தொழில்நுட்பங்களின் வளர்ச்சிகளின் தொடர்ச்சியாக 1957, அக்தோபர் 4 அன்று சுபுட்நிக்-1 என்ற செயற்கைக்கோள், சோவியத் ஒன்றியத்தால் விண்ணில் செலுத்தப்பட்டபோது விண்வெளி காலம் தொடக்கநிலையை அடைந்தது. இது தான் உலகின் முதல் செயற்கைக்கோள் ஆகும். இது 98.1 மணித்துள்யில், 83 கிலோ எடையுடன் புவியை சுற்றிவந்தது. ஸ்புட்நிக்-1 ஏவப்பட்ட போது அரசியல், அறிவியல், தொழில்நுட்ப முன்னேற்றத்தில் ஒரு புத்தூழியை உருவாக்கியது. இது தான் விண்வெளி காலத்தின் தொடக்கம் எனப்படுகிறது[1].

விண்வெளி காலம் என்பது புதிய தொழில்நுட்பங்களின் வேகமான வளர்ச்சியையும் குறிப்பாக நெருங்கிய போட்டியையும் கொண்டது. இப்போட்டி,பெரும்பாலும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் சோவியத் ஒன்றியதுக்கும் நடுவே நடந்ததாகும்கும். ஏவுகணையியல், பொருள் அறிவியல் கணினி, பல்வேறு தொழில்நுட்பப் புலங்களில் வேகமான முன்னேற்றம் காணப்பட்டது. பெரும்பாலான தொழில்நுட்ப வளர்ச்சி, குறிப்பாக விண்வெளி பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டவை தற்பொழுது பெருகிய்தால் இவற்றுக்கான வேறு கூடுதல் பயன்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

உலக மக்கள் தொகையில் பெருபான்மையானவர்களின் கற்பனையை கவர்ந்த அப்பல்லோ திட்டதின் வழியாக விண்வெளி காலம் தன் கொடுமுடியை அடைந்தது. அப்பல்லோ-11 விண்கலத்தின் நிலாத் தரையிறக்கத்தை 500 மில்லியன் மக்கள் பார்த்தனர். இது20 ஆம் நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளில் முதன்மையானதாக கருதப்படுகிறது. அப்பொழுதிலிருந்து மக்கள் கவனம் வேறு பகுதிகளுக்கு நகர்ந்துள்ளது[2].

1990 களில் விண்வெளி சார்ந்த நிகழ்வுகளுக்கு செலவிடப்படும் தொகை மிகவும் குறைந்தது. எனென்றால் எஞ்சியிருந்த சோவியத் ஒன்றியம் சிதைந்து போனது. நாசா-[3] விற்கு இனிமேல் நேரிடையான போட்டி இல்லாமல் போனது.

இதிலிருந்து விண்வெளி வெளியீடுகளில் பங்கேற்பு மற்ற நாடுகளிலும் வணிக விருப்பங்களிலும் பெரிதும் பரந்து விரிந்தது. 1990 களிலிருந்து விண்வெளி ஆய்வுகளும் விண்வெளி சார்ந்த தொழில்நுட்பங்களும் மக்களால் இயல்வானதாக கருதப்பட்டது.

தற்காலம்[தொகு]

21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அன்சாரி X பரிசு போட்டிகள் தனியார் விண்வெளிப் பயணத்தை விரைவுப்படுத்த உருவாக்கப்பட்டது, இதில் 2004 இல் வென்ற விண்கலம்-1(ஸ்பேஸ் ஷிப் ஒன்) என்பது அரசு நிதியளிக்காத முதல் தனியார் விண்கலம் ஆகும்.[4].

இப்பொழுது பல நாடுகளிடம் விண்வெளி திட்டங்கள், தொழில்நுட்பம் சார்ந்த முயற்சிகளில் இருந்து முழுநேரத் திட்டமான விண்வெளி புறப்பாடு வரை இருக்கின்றன.[5]. இன்று எண்ணற்ற அறிவியல், வணிகச் செயற்கைக்கோள்கள் பயன்பாட்டில் உள்ளன, அதில் பல்லாயிரக்கணக்கான செயற்கைக்கோள்கள் பல புவி வட்டணைகளில் உள்ளன[6] மற்றும் பல நாடுகள் மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டதில் உள்ளன[7][8].

முந்தைய விண்வெளிக் கலங்கள்[தொகு]

விண்வெளி காலம் அக்டோபர் 4, 1945-திற்கு முன்பே தொடங்கிவிட்டது என்றே கருதவும் வாய்ப்புள்ளது. ஏனென்றால் 1944 ஆம் ஆண்டு சூனில் செருமனியின் வி-2 ஏவூர்தி தான் முதன்முதலில் விண்வெளியில் நுழைந்த மனிதனால் உருவாக்கப்பட்ட பொருளென்றாலும்னது மிகக் குறுகிய காலம் தான் செயல்பட்டது. 1926 ஆம் ஆண்டு மார்ச்சில் இராபெர்ட் எச். கொடார்டு செலுத்திய உலகின் முதல் நீர்ம எரிபொருள் ஏவூர்தி, விண்வெளியை அடையாவிட்டாலும், அப்பொழுதே விண்வெளி காலம் தொடங்கிவிட்டதாக சிலர் கருதிகிறார்கள்.[9].

மேலே குறிபிடப்பட்ட வி-2 ஏவூர்தி கமுக்கமாக மேற்கொள்ளப்பட்டதால், பல ஆண்டுகள் கழித்தே மக்களது காதுகளுக்கு எட்டியது. மேலும், செருமனியின் செலுத்துகைகளும், அடுத்தடுத்து 1940, 1950 களில் சோதிக்கப்பட்ட ஐக்கிய அமெரிக்க இராச்சியம், சோவியத் ஒன்றியத்தின் ஆழங்காண் ஏவூர்தி, இவை முதன்மை வாய்ந்ததாக கருதப்படவில்லை எனென்றால் இவை புவி வட்டணையை அடையவில்லை. புவி வட்டணையை அடையக் கூடிய ஆற்றலுடைய ஏவூர்தியை வைத்திருப்பதென்பது, அந்நாடு வெடிகுண்டை நம் புவியில் எங்கே வேண்டுமென்றாலும் செலுத்தும் ஆற்றலையுடையது அல்லது வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை பெற்றுள்ளது என்றாகும். இம்முன்னேற்றத்திற்குப் பிறகு விண்வெளி காலத்தில் புவி வட்டணையில் நிலைநிறுத்தும் நிலைப்பாட்டால், புவியில் எந்த இடமும் பாதுகாப்பானது இல்லை என்ற நிலையை உணைர்த்தும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Garber, Steve. "Sputnik and The Dawn of the Space Age". History. NASA. Archived from the original on 30 ஏப்ரல் 2019. பார்க்கப்பட்ட நாள் 6 May 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "National Aeronautics and Space Administration". NASA. பார்க்கப்பட்ட நாள் 2015-11-20.
  3. https://en.wikipedia.org/wiki/NASA
  4. "SpaceShipOne: The First Private Spacecraft | The Most Amazing Flying Machines Ever". Space.com. பார்க்கப்பட்ட நாள் 2015-11-27.
  5. "Global Space Programs | Space Foundation". www.spacefoundation.org. பார்க்கப்பட்ட நாள் 2015-11-27.
  6. "Satellites - Active Satellites in Earth's Orbit". satellites.findthedata.com. Archived from the original on 2016-10-23. பார்க்கப்பட்ட நாள் 2015-11-27.
  7. "Japan Wants Space Plane or Capsule by 2022". Space.com. பார்க்கப்பட்ட நாள் 2015-11-27.
  8. "India takes giant step to manned space mission". Telegraph.co.uk. பார்க்கப்பட்ட நாள் 2015-11-27.
  9. "Goddard launches space age with historic first 85 years ago today". பார்க்கப்பட்ட நாள் 2016-04-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விண்வெளிக்_காலம்&oldid=3871276" இலிருந்து மீள்விக்கப்பட்டது