உள்ளடக்கத்துக்குச் செல்

விண்டோசு 10

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(விண்டோஸ் 10 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
விண்டோசு 10
மைக்ரோசாப்ட் விண்டோசு இயங்கு தளத்தின் ஒரு வெளியிடு
விண்டோசு 10 இன் திரைக்காட்சியில் அதன் திரைப்புலம், பணிப்பட்டி, தொடக்கப் பட்டியல் & செயல் மையம்
விருத்தியாளர்மைக்ரோசாப்ட்
எழுதப்பட்ட நிரல் மொழிசி, சி++, சி#
பொது பயன்பாடுசூலை 29, 2015; 9 ஆண்டுகள் முன்னர் (2015-07-29)
இற்றை முறைவிண்டோசு இற்றை, விண்டோசு சேமிப்பு, விண்டோசு வழங்கி இற்றை சேவைகள்
ஆதரிக்கும் தளங்கள்IA-32, x86-64, ARMv7, ARM64 (பதிப்பு 1709 இலிருந்து)
கருனி வகைகலப்புக் கருவகம்
Userlandபொதுவான விண்டோஸ் பயன்பாட்டு மேடை (Universal Windows Platform)
முன்னையதுவிண்டோசு 8.1 (2013)
அதிகாரப்பூர்வ
வலைத்தளம்
windows.com

விண்டோசு 10 (விண்டோஸ் 10, Windows 10; குறியீட்டுப் பெயர்: Threshold[1]) என்பது விண்டோஸ் NT இயக்க முறைமைகள் குடும்பத்தின் ஒரு பாகமாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தினால் வெளியிட்ட ஒரு இயக்கு தளம் ஆகும். இதன் அதிகாரப்பூர்வ முன்னோட்டம் 2014 செப்டம்பர் இல் வெளியிடப்பட்டது. முன்னணி நுகர்வோர் வெளியீடு 2015 சூலை 29ம் திகதி வெளியிடப்பட்டது. விண்டோசு 7 அல்லது விண்டோசு 8.1 இன் தகுதியுள்ள உண்மையான பதிப்புகளை முதல் ஆண்டில் இலவசமாக விண்டோசு 10 இற்கு மேம்படுத்த முடியும் என மைக்ரோசாப்ட் அறிவித்தது. இந்த இலவச மேம்படுத்தல் வசதி சூலை 29, 2016 அன்று (விண்டோசு 10 வெளியிட்டு சரியாக ஒரு ஆண்டுகாலத்திற்கு பின்) முடிந்தது.[2]

விண்டோசு 8 இல் அறிமுகப்படுத்திய பயனர் இடைமுகம் குறைபாடுகளை கருத்திற்கொண்டு கொண்டு, தொடுதிரையற்ற சாதனங்களில் (மேசைக் கணினி, மடிக்கணினி) பயனர் அனுபவத்தை மேம்படுத்தலை குறியாகக் கொண்ட விண்டோசு 10 பற்றி ஏப்ரல் 2014 வருடாந்தக் கூட்டத்தில் முதலாவதாககக் குறிப்பிடப்பட்டது. மேலும் விண்டோசு 10 இயங்குதளம் ஒரு சேவையாக வழங்கப்படும் என மைக்ரோசாப்ட் அறிவித்தது. [3]

முதல் மூன்று ஆண்டுகளுக்குள் 100 கோடி சாதனங்கள் Windows 10 இல் இயக்கும் என்ற Microsoft இன் கனவு நினைவாகவில்லை.[4] ஆனால் 2020 இல் அது உண்மையானது[5].

வரலாறு

[தொகு]

2011 இல் நடந்த Microsoft Worldwide Partner Conference இல் ஆண்ட்ரூலீ, மைக்ரோசாப்ட் மொபைல் தொழில்நுட்பத்தின் தலைவர் மைக்ரோசாப்ட் எல்லாச் சாதனத்திற்கு ஒரே இயங்கு தளம் உருவாக்குவோம் என்று சொன்னார்.

"கைபேசிக்கு ஓர் இயங்கு தளம், கணினிகளுக்கு ஓர் இயங்கு தளம், டேப்ளடுக்கு ஓர் இயங்கு தளம் என்று தனி இயங்கு தளங்களை உருவாக்க மாட்டோம். அவை அனைத்தும் ஒன்றாக வரும்."

ஏப்ரல் 2014 இல் நடந்த பில்டு மாநாட்டில், டெரி மயர்சன் விண்டோஸ் 8.1 இன் ஒரு புதுப்பித்த பதிப்பை அறிமுகப்படுத்தினார்.

வெளியீடுகள்

[தொகு]

பொது வெளியீடு

[தொகு]

விண்டோசு 10 பொதுப்பயன்பாட்டிற்காக சூலை 29 ஆம் தேதி கணினிகளுக்கு வெளியிடப்பட்டது. கைபேசிகளுக்கான விண்டோசு 10 கைபேசி தொகுப்பு மார்ச்சு 17 ஆம் திகதி உபயோகத்தில் உள்ள விண்டோசு 8 கைபேசிகளுக்கு (இயங்க கூடியவற்றில் மட்டும்) வெளியிடப்பட்டது. [6]

உள்ளாளர்கள்

[தொகு]

இதையும் பார்க்கவும்: விண்டோஸ் இன்சைடர்

விண்டோசு 10 ஐ பொதுப்பயனர்களுக்கு வெளியிடும் முன்பே பல சோதனை பதிப்புகளை உள்ளாளர்களுக்கு வெளியிட்டது. இந்த பதிப்புகளை விண்டோசு உள்ளரராக பதிவு செய்தவர்களுக்கு வழங்கப்பட்டது.[7] உள்ளளர்களுக்கு வேக வளையம், மெது வளையம் மற்றும் வெளியீட்டு வளையம் என மூன்று வளையங்களாக பதிப்புகள் விநியோகிக்கப்பட்டன. விண்டோஸ் 10 இன் வெளியீட்டிற்கு பிறகு, உள்ளாளர்களுக்குப் புதிய அம்ச புதுப்பிப்புகளின் முன்னோட்டங்கள் கிடைக்கின்றன.

இற்றை பதிப்புகள்

[தொகு]

விண்டோசு 10 இன் முக்கிய இற்றை பதிப்பு (ஆண்டு நிறைவு இற்றை பதிப்பு) ஆகத்து 2, 2016 அன்று பொதுப்பயனர்களுக்கு வெளியிடப்பட்டது. [8] இது முதலில் ரெட்ஸ்டோன் (Redstone) என்னும் குறிப்பு பெயரால் அறியப்பட்டது. இதற்குப் பிறகு மைக்ரோசாஃப்ட் ஒவ்வொரு ஆண்டும் புதிய பதிப்புகளை வெளியிடத் தொடங்கியது.

புதுப்பிப்பு வரலாறு
பதிப்பு குறிப்பு பெயர் பில்டு எண் பெயர் வெளியிடு தேதி
1507 திரெசொல்ட் 1 10240 - சூலை 29, 2015
1511 திரெசொல்ட் 2 10586 நவம்பர் புதுப்பி நவம்பர் 10, 2015
1607 ரெட்ஸ்டோன் 1 14393 ஆன்வசரி புதுப்பி ஆகஸ்ட் 2, 2016
1703 ரெட்ஸ்டோன் 2 15063 கிரியேட்டர்ஸ் புதுப்பி ஏப்ரல் 5, 2017
1709 ரெட்ஸ்டோன் 3 16299 பால் கிரியேட்டர்ஸ் புதுப்பி அக்டோபர் 17, 2017
1803 ரெட்ஸ்டோன் 4 17134 ஏப்ரல் 2018 புதுப்பு ஏப்ரல் 30, 2018
1809 ரெட்ஸ்டோன் 5 17763 அக்டோபர் 2018 புதுப்பி அக்டோபர் 2, 2018

(நவம்பர் 13, 2018 அன்று மறுவெளியிடப்பட்டது)

1903 19H1 (ரெட்ஸ்டோன் 6) 18362 மே 2019 புதுப்பி மே 21, 2019
1909 19H2 18363 நவம்பர் 2019 புதுப்பி நவம்பர் 13, 2019
2004 20H1 19041 மே 2020 புதுப்பி மே 27, 2019
2009 20H2 19042 அக்டோபர் 2020 புதுப்பி அக்டோபர் 20, 2020

எழுத்துருக்கள்

[தொகு]

விண்டோசு 10 மூன்று புதிய எழுத்துருக்களை அறிமுகப்படுத்தியது.

இயல்புநிலை எழுத்துருக்கள்
[தொகு]

இந்த எழுத்துருக்கள் எல்லா விண்டோஸ் 10 கணினிகளிலும் நிறுவப்படுகின்றது:

  • இலத்தின் எழுத்துக்கள்: Arial v. 7.00, Arial Black v. 5.23, *Bahnschrift v. 2.01, Calibri v. 6.22, Cambria v. 6.99, Cambria Math v. 6.99, Candara v. 5.63, Comic Sans MS v. 5.14, Consolas v. 7.00, Constantia v. 5.93, Corbel v. 5.90, Courier New v. 6.92, Franklin Gothic Medium v. 5.02, Gabriola v. 5.93, Georgia v. 5.59, Impact v. 5.11, *Ink Free v. 1.00, Lucida Console v. 5.01, Lucida Sans Unicode v. 5.01, Marlett v. 5.01, Microsoft Sans Serif v. 7.00, Palatino Linotype v. 5.03, *Segoe MDL2 Assets v. 1.68, Segoe Print v. 5.04, Segoe Script v. 5.02, Segoe UI v. 5.60, Segoe UI Emoji v. 1.27, Sitka v. 1.12, Tahoma v. 7.00, Times New Roman v. 7.00, Trebuchet MS v. 5.15, Verdana v. 5.33
  • ஆப்ரிக்க எழுத்துக்கள் (பல மொழிகள்): Ebrima v. 5.12
  • பண்டைய எழுத்துக்கள் (பல மொழிகள்): Segoe UI Historic v. 1.03
  • அருமேனிய, Georgian & Ethiopic: Sylfaen v. 5.06
  • பருமிய எழுத்துக்கள்: Myanmar Text v. 1.18
  • செரோக்கி எழுத்துக்கள்: Gadugi v. 1.12
  • சீனம்: Microsoft YaHei v. 6.23, SimSun v. 5.16, SimSun-ExtB v. 5.03, Microsoft JhengHei v. 6.14
  • இந்திய எழுத்துக்கள் (பல மொழிகள்): Nirmala UI v. 1.37
  • சப்பானிய எழுத்துக்கள்: Yu Gothic v. 1.90
  • சாவக எழுத்துக்கள்: Javanese Text v. 1.09
  • கொரிய எழுத்துக்கள்: Malgun Gothic v. 6.68
  • திவெயி எழுத்துக்கள்: MV Boli v. 6.84
  • மொங்கோலிய எழுத்துக்கள்: Mongolian Baiti v. 5.53
  • Phagspa: Microsoft PhagsPa v. 6.00
  • திபெத்திய எழுத்துக்கள்: Microsoft Himalaya v. 5.23
  • Tai scripts: *Microsoft New Tai Lue v. 5.99, Microsoft Tai Le v. 6.00
  • Yi (Lolo): Microsoft Yi Baiti v. 6.00
  • சின்னங்கள்: Segoe UI Symbol v. 6.23, Symbol v. 5.01, Webdings v. 5.01, Wingdings v. 5.01

மேற்கோள்கள்

[தொகு]
  1. Foley, Mary Jo (2 December 2013). "Microsoft codename 'Threshold': The next major Windows wave takes shape". ZDNet. CBS Interactive.
  2. "வின்டோஸ் 10 ஐ இலவசமாக அப்கிரேடு செய்து கொள்ள இன்றுதான் கடைசி வாய்ப்பு!". vikatan.com. ச.ஹரிஹரசுதன். பார்க்கப்பட்ட நாள் 7 August 2016.
  3. "பரம்பொருளாய் விண்டோஸ் 10". தினமலர். பார்க்கப்பட்ட நாள் 7 August 2016.
  4. Bott, Ed. "Microsoft's big Windows 10 goal: one billion or bust". ZDNet (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-01-12.
  5. Warren, Tom (2020-03-16). "Microsoft hits its goal of 1 billion devices running Windows 10". The Verge (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-27.
  6. "When will my Lumia get Windows 10 Mobile? Everything you need to know". digitaltrends.com. Malarie Gokey. பார்க்கப்பட்ட நாள் 9 August 2016.
  7. "How to join the Windows 10 Insider preview program". pcworld.com. Jared Newman. பார்க்கப்பட்ட நாள் 9 August 2016.
  8. "Windows 10's Anniversary Update is now available". theverge.com. Tom Warren. பார்க்கப்பட்ட நாள் 7 August 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விண்டோசு_10&oldid=4060585" இலிருந்து மீள்விக்கப்பட்டது