உள்ளடக்கத்துக்குச் செல்

விண்டோஸ் மெயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விண்டோஸ் மெயில் (Windows Mail) மைக்ரோசாப்டினால் விண்டோஸ் விஸ்டா இயங்கு தளத்திற்காக உருவாக்கப்பட்டு சோதனையிலிருக்கும் ஒரு மென்பொருளாகும். இது அவுட்லுக் எக்ஸ்பிரஸ் வழிவந்த மென்பொருளாகும். எனினும் அவுட்லுக் எக்ஸ்பிரஸ் போன்றல்லாது இது இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் உலாவியில் ஓர் அங்கமாகக் கருதப்படவில்லை. இது வரவிருக்கும் விண்டோஸ் வழங்கி இயங்கு தளமான லாங்ஹாண் (Long Horn) உள்ளடக்கப்படவில்லை. விண்டோஸ் லைவ்மெயில் டெஸ்க்டாப் ஐ (Windows LiveMail Desktop) உருவாக்கிய அதே குழுவே இதையும் உருவாக்கியது. இது மைக்ரோசாப்ட் அவுட்லுக் எக்ஸ்பிரஸை மேம்படுத்திய பதிப்பாகவும் மாற்றீடு செய்யவும் பயன்படும்.

வசதிகள்

[தொகு]

மைக்ரோசாப்ட் அவுட்லுக் 2003இலிருந்து சில இடைமுக மாற்றங்களை மாத்திரமே இப்பதிப்புக் கொண்டுள்ளது.

  • மின்னஞ்சல் செய்திகள் ஒரே கோப்பிலில்லாமல் பல கோப்புக்களாகச் சேமிக்கப்படும். சேமிக்கப்பட்ட தகவலின் நிலைத்தன்மையையும் நம்பகத்தன்மையும் மேம்படுத்தி செயற்பாட்டு குறியீடு தரவுத்தளம் (transactional index database) மூலமான நிகழ்நேரத் தேடல்கள்
  • பயனர் கணக்கு விபரங்கள் பதிவகத்தில் சேமிக்கப்படாமல் மின்னஞ்சற் கோப்புடனேயே சேமிக்கப்படும். இதனால் லோட்டஸ் நோட்ஸ் போன்ற மின்னஞ்சல்கள் போல ஒரு கணினியிலிருந்து படியெடுத்து பிறிதோர் கணினிக்கு இலகுவாக மாற்றமுடியும்.
  • பேசியன் குப்பை அஞ்சல்களை வடிகட்டும் முறை. இதன் மூலமாக திரளம் குறியேற்ற தடுத்தல்களைச் செய்ய இயலும்.
  • மைக்ரோசாப்ட் இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 7இல் உள்ளதைப் போலவே போலிப்பக்க (phishing) வடிகட்டல்கள்.
  • மைக்ரோசாப்ட்டின் உதவிக் குழுக்கள் இதனுடனேயே வருகின்றது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விண்டோஸ்_மெயில்&oldid=1343388" இலிருந்து மீள்விக்கப்பட்டது