விட்பீல்டு டிஃபீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விட்பீல்டு டிஃபீ
Whitfield Diffie
2007இல் விட்பீல்டு டிஃபீ
பிறப்புபெய்லி விட்பீல்டு டிஃபீ
சூன் 5, 1944 (1944-06-05) (அகவை 78)
வாசிங்டன், டி. சி., ஐக்கிய அமெரிக்கா
தேசியம்ஐக்கிய அமெரிக்கா
துறைமறையீட்டியல்
பணியிடங்கள்இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம் அல் ஆய்வகம்
கல்வி கற்ற இடங்கள்மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகம் (பி.எஸ்., 1965)
அறியப்படுவதுடிஃபீ–எல்மேன் திறவிப் பரிமாற்றம்
விருதுகள்கானெல்லகிசு விருது(1996)
மார்க்கோனி பரிசு (2000)
ஹாம்மிங் பதக்கம்(2010)
கணினி வரலாற்று அருங்காட்சியக ஆய்தகையர் (2011) [1]
தூரிங்கு விருது (2015)

பெய்லி விட்ஃபீல்டு "விட்" டிஃபீ (Bailey Whitfield 'Whit' Diffie, பிறப்பு: சூன் 5, 1944) அமெரிக்க மறையீட்டாளரும் பொதுத்திறவி மறையீட்டியலின் முன்னோடிகளில் ஒருவரும் ஆவார்.

டிஃபீயும் மார்ட்டின் எல்மேனும் இணைந்து ஆக்கிய "மறையீட்டியலுக்கானப் புது திசைகள்" என்ற ஆய்வுரை 1976இல் வெளியானது. இதில் மறையீட்டுத் திறவிகள் பரப்புகைக்கு புதிய நெறிமுறை விவரிக்கப்பட்டிருந்தது. இது மறையீட்டியலில் அடிப்படைச் சிக்கலாக இருந்த திறவிப் பரப்புகைக்கு தீர்வு கண்டது. இது டிஃபீ–எல்மேன் திறவிப் பரிமாற்றம் எனப்படுகின்றது. இந்த ஆய்வுரையைத் தொடர்ந்து புதிய வகை மறையாக்க நெறிமுறைகளான சமச்சீர்மையிலாத் திறவிப் படிமுறைகள் உருவாயின.[2]

சன் மைக்ரோசிஸ்டசில் பல்லாண்டுகள் பணிபுரிந்த டிஃபீக்கு சன் ஆய்தகையர் வழங்கப்பட்டது. பின்னர் வழங்கப்பட்ட பெயர், எண்களுக்கான இணைய நிறுவனத்தில் (ICANN) இரண்டரையாண்டுகள் (2010–2012) தகவல் பாதுகாப்பு மற்றும் மறையீட்டியல் துணைத் தலைவராகப் பணியாற்றினார். இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் பிரீமேன் இசுப்போக்லி கழகத்தின் பன்னாட்டு பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு மையத்தில் வருகை அறிஞராகவும் (2009–2010) இணை ஆய்வாளராகவும் (2010–2012)[3] பணியாறியுள்ளார்.

மேற்சான்றுகள்[தொகு]

  1. "Whitfield Diffie 2011 Fellow". 2016-07-03 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-03-05 அன்று பார்க்கப்பட்டது.
  2. Levy, 2001, p. 90ff
  3. "Whitfield Diffie - CISAC". 2013-02-19 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விட்பீல்டு_டிஃபீ&oldid=3571601" இருந்து மீள்விக்கப்பட்டது