விட்ணுகிராந்தி
விட்ணுகிராந்தி | |
---|---|
![]() | |
Evolvulus alsinoides | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
தொகுதி: | பூக்கும் தாவரம் |
வகுப்பு: | Magnoliopsida |
வரிசை: | Solanales |
குடும்பம்: | Convolvulaceae |
பேரினம்: | Evolvulus |
இனம்: | E. alsinoides |
இருசொற் பெயரீடு | |
Evolvulus alsinoides (Linn.) Linn. | |
|
விட்ணுகிராந்தி, அபராசி, பராசிதம் அல்லது விஷ்ணுகிரந்தி (Evolvulus alsinoides) என்பது கொன்வோவுலாசியா குடும்பத்தைச் சேர்ந்த பூக்கும் தாவரம். தென் அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்ட இச்செடி இந்தியா, இலங்கை உட்பட உலகின் பல இடங்களில் காணப்படும் இது வயல்வெளி, ஆற்றங்கரை ஆகிய இடங்களில் வளர்கிறது. விட்ணுவின் கையிலுள்ள சக்கரம் போல இதன் பூக்கள் காணப்படுவதால், இதில் விட்ணு இருப்பதாக நம்பிக்கை உள்ளது.[1]
இது கேரளத்தின் புனிதப் பூக்களாகக் கருதப்படும் பஞ்சப் பூக்களில் ஒன்று. இது காய்ச்சல் போன்ற நோய்களுக்கு மூலிகையாகப் பயன்படுத்தப்படுகின்றது.[2]