விட்டாச்சு
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
விட்டாச்சு என்பது மழலைகளிடம், பெரியவர்கள் விளையாடும் குறும்பு விளையாட்டு.
முறை
[தொகு]மழலையின் கண்பார்வையில் இருந்து பெரியவர், மறைவார் அல்லது மறைய முற்படுவார். மழலை, பெரியவரோடு கண் தொடர்பை ஏற்படுத்த, தன் தலையோ, உடலையோ அசைத்துத் தொடர்பை ஏற்படுத்தும். இம்முறை தொடர்பு ஏற்படுத்தப்பட்ட பின்பு மீண்டும், பெரியவர் கண்தொடர்பைத் துண்டிக்க தலையை/உடலை இடப்பெயர்ச்சி செய்வார்.
விளைவு
[தொகு]இக்குறும்பு விளையாட்டில், குழந்தை ஒவ்வொரு முறை கண்தொடர்பை ஏற்படுத்தும் பொழுதும், குதூகலிக்கும்.