விடை இலச்சினை இட்ட படலம்
![]() | இந்தக் கட்டுரை கலைக்களஞ்சியத்தில் எழுதும் அளவு குறிப்பிடத்தக்கதா?
இத்தலைப்பைப் பற்றிய நம்பத்தக்க வேறு கூடுதல் மேற்கோள்களை இணைத்து இதனை "குறிப்பிடத்தக்கதாக" நிறுவிட உதவுங்கள். இவ்வாறு குறிப்பிடத்தக்க தன்மை நிறுவப்படாவிடின் இந்தக் கட்டுரை வேறு கட்டுரையுடன் இணைக்கப்படவோ, வழிமாற்றப்படவோ, நீக்கப்படவோ கூடும். (மே 2025 நாளில் இருந்து மூன்று மாதங்களுக்குள், எவரும் இதன் குறிப்பிடத்தகுநிலையினை நிறுவாத நிலையில், இக்கட்டுரைப் பக்கம் அழிக்கப்படும்) |
விடை இலச்சினை இட்ட படலம் என்பது சைவ சமய நூலான திருவிளையாடல் புராணத்தின் 34ஆம் படலமாகும் இது கூடல் காண்டத்தில் இடம்பெற்றுள்ளது, இதில் 1789 முதல் 1818 வரை பாடல்கள் உள்ளன [1]
கதை
[தொகு]குலபூஷண பாண்டியன் மதுரையை ஆண்டு வந்த வேளையில் காஞ்சிபுரத்தை தலைநகராகக் கொண்டு காடுவெட்டி என்னும் சோழ மன்னன் ஆண்டு வந்தான், காட்டை திருத்தி நாடாக்கியதால் இப்பெயர் பெற்றான், சோழ மன்னனுக்கு மதுரை சொக்கநாதரை வழிபட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது ஆனால் அப்போது இரு நாடுகளுக்கும் இடையே நிலவிய சூழலை எண்ணி கவலையடைந்த மன்னன் இது பற்றி இறைவனிடம் முறையிட்டார் [2]
சித்தராக வந்த இறைவன்
[தொகு]ஒரு நாள் சோழ மன்னனின் கனவில் தோன்றிய இறைவன் மன்னா! கவலைப்படாதே உனக்கு மதுரையில் வழிபட நானே ஏற்பாடு செய்கிறேன், நீ என்னை வந்து வழிபடும் காலம் வந்துவிட்டது நீ மாறுவேடத்தில் மதுரையை நோக்கி செல் மற்றவை தானாக நிகழும் என்றார் திக்கிட்டு எழுந்த மன்னனுக்கு பெரும் மகிழ்ச்சியடைந்தான், இக்கனவுப் பற்றி தலைமை அமைச்சரிடம் மட்டும் கூறிவிட்டு சிவனடியார் வேடத்தில் மதுரையை நோக்கி நடந்தான் சோழ மன்னன், சில நாட்களுக்கு பிறகு மதுரையின் வடபகுதியை சென்றடைந்தான் மன்னன், குறுக்கே வைகையாற்றில் பெரும் வெள்ளம் ஓடிக் கொண்டிருந்தது, இதனால் தான் இறைவனை வழிபட முடியாமல் போய்விடுமோ என புலம்பினான், அப்போது ஒரு குரல் கேட்டது, அடியவரே! ஏன் இங்கே நின்று கொண் டிருக்கிறீர்கள். ஆற்றைக் கடக்கும் வழி தேடுகிறீர்களோ? என்றது அக்குரல், அக்குரல் வந்த திசையை நோக்கினான் மன்னன், அங்கே ஒரு சித்தர் நின்றுக் கொணாடிருந்தார் அவரின் காலில் விழுந்து வணங்கி தான் வந்த விவரத்தை கூறினான் மன்னன், மன்னனுக்கு ஆறுதல் கூறிய சித்தர் கவலைப்படதே இந்த ஆற்று நீரை வற்ற செய்வது என் பணி என்று கூறி ஆற்றை நோக்கி கை ஆட்டியதும் நீர் வற்றியது, பின் சோழ மன்னன் சித்தருடன் ஆற்றின் மூட்டளவு நீரில் இறங்கி தென்கரையை அடைந்தான் அப்போது இரவாகி இருந்தது மேலும் கோவில் நடை அடைக்கப்பட்டிருந்தது, காலை வரை காத்திருந்தால் யார் கண்ணிலும் படாமல் இருக்க வேண்டுமே என்ற அச்சம் சோழ மன்னனுக்கு ஏற்பட்டது, சோழனின் மனதை அறிந்துக் கொண்ட சித்தர் கவலைப்படாதே நான் எப்படியும் உன்னை கோவிலுக்குள் அழைத்துச் சென்று விடுவேன் என கூறி கோவிலின் வடக்கு வாசலுக்கு அழைத்துச் சென்றார் அவர்கள் கதவை நெருங்க நெருங்க கதவில் மூடி பொருத்தப்பட்டிருந்த மீன் முத்திரை தானாக கழன்று விழுந்தது கதவுகள் தானாக திறந்து மூடிக் கொண்டன சித்தர் மன்னனை சொக்கநாதர் சன்னதிக்கு அழைத்துச் செல்ல சன்னதிக் கதவுகள் தானாக திறந்தன இரவின் விளக்கொளியில் இறைவன் ஒளிரக் கண்டு மகிழ்ந்த மன்னன் பலவித பாடல்களை துதித்து மகிழ்ந்தான், இறைவனை பிரிய மனமில்லாது கருவறையின் வாசலிலே அமர்ந்த மன்னனை அழைத்த சித்தர் மகனே விரைவாக வா காவலர்களின் கண்ணில் படும் முன்னால் சென்று விடுவோம் என்றார், ஒரு வழியாக மன்னனை வெளியே அழைத்து வந்த சித்தர் கதவில் கழன்று விழுந்த மீன் முத்திரைக்குப் பதிலாக விடை முத்திரையை வைத்து மூட செய்தார், மன்னனை வைகையின் வடகரைக்கு அழைந்துச் சென்று வழி அனுப்பி வைத்தார் சித்தர், நன்றி சொல்லி விட்டு புறப்பட்டான் சோழ மன்னன் [2]
உண்மை அறிந்த மன்னன்
[தொகு]மறுநாள் கோவிலில் பெரும் குழப்பம் நிலவியது, மீன் முத்திரையை விடை முத்திரையாக மாற்றியது யார் என்று குழப்பம், தகவல் அறிந்து கோவிலுக்கு வந்த குலபூஷண பாண்டியன் கதவில் விடை முத்திரை பதித்திருப்பதைக் கண்டான், இறைவா! அங்கயற்கண்ணி அருளும் இந்நகருக்கு மீன் முத்திரை தானே பொருந்தும்! இதை மாற்றியது யார்? விடை முத்திரை உனக்குரியது என்றாலும் இங்கு நிகழ்ந்திருப்பது நன்மையா? தீமையா? என்று நீதான் கூற வேண்டும் என கூறி இறைவனிடம் முறையிட்டு விட்டு அரண்மனைக்கு திரும்பினான் மன்னன், அன்றிரவு மன்னன் கனவில் தோன்றிய இறைவன் மன்னனிடம் நடந்தவற்றை கூறினார், திடுக்கிட்டு விழித்து எழுந்த குலபூஷண மன்னன் இறைவன் அனைவருக்கும் பொதுவானவர் என்ற உண்மையை உணர்ந்தான், நடந்தவற்றை அனைவரிடமும் கூறினான், பிறகு ஆட்சியை தன் மகன் இராஜேந்திர பாண்டியனிடம் ஒப்படைத்து விட்டு, சில காலம் சிவத் தொண்டு செய்து விட்டு இறைவனடிச் சேர்ந்தான் [2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "திருவிளையாடல் புராணம் கூடல் காண்டம் பாகம் 1". Project Madurai. Retrieved 14 May 2025.
- ↑ 2.0 2.1 2.2 "விடையிலச்சினையிட்ட படலம்!". தினமலர். Retrieved 14 May 2025.