உள்ளடக்கத்துக்குச் செல்

விடுதலை மணி

ஆள்கூறுகள்: 39°56′58″N 75°9′1″W / 39.94944°N 75.15028°W / 39.94944; -75.15028
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விடுதலை மணி
Liberty Bell
விடுதலை மணி - ஒரு பெரிய வெண்கல மணி
ஆள்கூறுகள்39°56′58″N 75°9′1″W / 39.94944°N 75.15028°W / 39.94944; -75.15028
இடம்லிபர்ட்டி பெல் மையம்
பிலடெல்பியா, பென்சில்வேனியா, அமெரிக்கா
வடிவமைப்பாளர்வைட்சப்பல் பெல் பௌண்ட்ரி
வகைகோபுர மணி
கட்டுமானப் பொருள்70% செப்பு, 20% வெள்ளீயம், 10% ஏனைய உலோகங்கள்
அகலம்3.82 அடி (1.16 மீ)
(சுற்றளவு 12 அடி (3.7 மீ), கிரீடத்தைச் சுற்றி 7.5 அடி (2.3 மீ)
உயரம்அண். 4 அடி (1.2 மீ)
முடிவுற்ற நாள்1752
இணையதளம்Liberty Bell Center
நிறை2,080 இறாத்தல் (940 கிகி)

விடுதலை மணி (Liberty Bell) என்பது ஐக்கிய அமெரிக்காவின் விடுதலையின் உருவகச் சின்னமாக பென்சில்வேனியா மாநிலத்தில் பிலடெல்பியா நகரில் அமைந்துள்ளது. பென்சில்வேனியா மாநில மாளிகையில் வைக்கப்பட்டிருந்த இந்த மணி, தற்போது பென்சில்வேனியா தேசிய வரலாற்றுப் பூங்காவில் வைக்கப்பட்டுள்ளது. இந்த மணி இலண்டன் லெசுட்டர், பாக் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டு,[1] "அனைத்து நிலங்களிலும் அதன் அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் விடுதலையை அறிவிக்கவும்" (லேவியராகமம் புத்தகத்திலிருந்து ஒரு விவிலியக் குறிப்பு 25:10) என்ற வரிகள் பொறிக்கப்பட்டு 1752 ஆம் ஆண்டில் பென்சில்வேனிய மாகாண சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டது.[2] பிலடெல்பியாவுக்கு வந்தபின் மணி முதலில் ஒலித்த பின்னர் வெடிப்புகள் ஏற்பட்டன. உள்ளூர் தொழிலாளர்களான ஜான் பாஸ் மற்றும் ஜான் ஸ்டோ ஆகியோரால் இரண்டு முறை மறுசீரமைக்கப்பட்டது. இவர்களின் கடைசிப் பெயரக்ள் மணியில் பொறிக்கப்பட்டுள்ளன. மணியில் ஆரம்ப ஆண்டுகளில், சட்டமன்ற உறுப்பினர்களை சட்டமன்ற அமர்வுகளுக்கு வரவழைக்கவும், பொதுக் கூட்டங்கள் மற்றும் பிரகடனங்கள் குறித்து குடிமக்களை எச்சரிக்கவும் இந்த மணி பயன்படுத்தப்பட்டது.[3]

குறிப்புகள்

[தொகு]
  1. Purchasing power of British Pounds from 1264 to present. measuringworth.com. Archived from the original on மார்ச்சு 5, 2012. பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 26, 2010. The same site indicates that the pound sterling was worth $1.85 in 2008.
  2. Paige, pp. 2–3
  3. Nash, பக். 1–2

உசாத்துணைகள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
விடுதலை மணி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விடுதலை_மணி&oldid=3806848" இலிருந்து மீள்விக்கப்பட்டது