விடுதலைச் சிலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
விடுதலைச் சிலை
Statue of Liberty 7.jpg
அமைவிடம்விடுதலைத்தீவு
மன்ஹாட்டன், நியூ யோர்க் மாநிலம், ஐ. அ.[1]
ஆள்கூற்றுகள்40°41′21″N 74°2′40″W / 40.68917°N 74.04444°W / 40.68917; -74.04444ஆள்கூற்று: 40°41′21″N 74°2′40″W / 40.68917°N 74.04444°W / 40.68917; -74.04444
உயரம்
  • 46 மீட்டர்கள்
  • தரையில் இருந்து 93 மீட்டர்கள்
அர்ப்பணிக்கப்பட்டதுஅக்டோபர் 28, 1886
Restored1938, 1984–1986, 2011–2012
சிற்பிFrédéric Auguste Bartholdi
பார்வையாளர்களின் எண்ணிக்கை3.2 மில்லியன் (இல் 2009)[2]
நிர்வகிக்கும் அமைப்புஐ. அ. தேசிய பூங்கா சேவையகம்
வகைகலாச்சாரம்
தேர்வளவைi, vi
அளிக்கப்பட்டது1984 (8 ஆம் அமர்வு)
மேற்கோள் எண்307
நாடுஐக்கிய அமெரிக்கா
பகுதிஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா
Official name: விடுதலைச் சிலை தேசிய நினைவுச்சின்னம், இலிஸ் தீவு மற்றும் விடுதலைத்தீவு (Statue of Liberty National Monument, Ellis Island and Liberty Island)
அறிவிக்கப்பட்டதுஅக்டோபர் 15, 1966[3]
மேற்கோள் எண்.66000058
Designatedஅக்டோபர் 15, 1924
அளித்தவர்கால்வின் கூலிஜ்[4]
Typeதனித்துவம் உடையது
Designatedசெப்டம்பர் 14, 1976
Lua error in Module:Location_map at line 502: Unable to find the specified location map definition: "Module:Location map/data/New York City" does not exist.

சுதந்திர தேவி சிலை (Statue of Liberty அல்லது Liberty Enlightening the World) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நியூயார்க் துறைமுகத்தில் உள்ள ஒரு புகழ்பெற்ற சிலையாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் இச்சிலையை பிரான்ஸ் நாடு அமெரிக்காவிற்கு அன்பளிப்பாக வழங்கியது. இச் சிலையை வடிவமைத்தவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரடெரிக் ஆகஸ்ட் பார்த்தோல்டி ஆவார். அவர் அக்டோபர் 28, 1886 இல் இதனை வழங்கினார்,

வரலாறு[தொகு]

அமெரிக்கப் புரட்சியின் போது ஐக்கிய அமெரிக்காவிற்கும், பிரான்சிற்கும் இடையே நிலவிய நட்புறவின் வெளிப்பாட்டினை எடுத்தியம்பும் முகமாக பிரான்ஸ் நாட்டினால் ஐக்கிய அமெரிக்காவிற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இந்தச் சுதந்திரதேவி சிலை. இது சர்வதேச ரீதியில் நட்பையும், விடுதலையினையும், மக்களாட்சியினையும் வெளிப்படுத்தும் சின்னமாக விளங்குகின்றது.

ஐக்கிய அமெரிக்காவிற்கு விடுதலை கிடைத்து நூற்றாண்டுகள் நிறைவு பெற்றதை சிறப்பிக்கும் முகமாக அமெரிக்காவும், பிரான்சும் ஒன்றிணைந்து சிலை ஒன்றினை வடிவமைக்க அமெரிக்காவில் நடைபெற்ற மாநாடொன்றில் ஒத்துக்கொண்டன. அதன் அடிப்படையில் பீடத்தினை அமெரிக்க மக்கள் நிர்மாணிப்பதென்றும், பிரான்ஸ் மக்கள் சிலையினை நிர்மாணிப்பதென்றும் முடிவு செய்தனர். அதன்பின் இரு நாட்டவர்களையும் நிதிப்பிரச்சினை பெரிதும் பாதித்தது. அதனால் பிரான்ஸ் நாடு களியாட்டங்கள், அதிர்ஷ்டலாபச் சீட்டிழுப்பு, மூலம் நிதியைத் திரட்டியது. அமெரிக்கா கலை நிகழ்வுகள், கண்காட்சிகள், மற்றும் வேறு நிகழ்வுகள் மூலமும் நிதியை திரட்டினர்.

1875-ஆம் ஆண்டு இந்த சிலையின் கட்டுமானம் தொடங்கியது. 1884-ஆம் ஆண்டு இச்சிலை முழுமை அடைந்தது. பிரான்சில் இருந்து அது கப்பல் மூலம் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 1886-ஆம் ஆண்டு அக்டோபர் 28-ஆம் தேதி அமெரிக்க மக்களுக்குச் சுதந்திர தேவி சிலை அர்ப்பணிக்கப்பட்டது. 1924 ஆம் ஆண்டு இந்தச் சிலை தேசிய நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டது.

சிலையின் அமைப்பு[தொகு]

சுதந்திர தேவியின் வலது கையில் தீப்பந்தம் உள்ளது. இடது கையில் ஜூலை 4, 1776 என்று எழுதப்பட்ட புத்தகம் இருக்கிறது. இது அமெரிக்கா விடுதலைப் போரின் சரித்திரத்தைக் குறிக்கிறது. தலையில் 7 முனைகள் கொண்ட கிரீடம் இருக்கிறது இந்த 7 முனைகள், 7 கண்டங்களையும்,7 கடல்களையும் குறிக்கின்றன. பீடத்திலிருந்து சிலையின் உயரம் 93 மீட்டர். சிலையின் உயரம் மட்டும் 34 மீட்டர் ஆகும். சிலையில் பயன்படுத்தப்பட்ட மொத்தத் தாமிரத்தின் எடை 27.2 டன். இரும்பின் எடை 113.4 டன். சிலையின் மொத்த எடை 204.1 டன் ஆகும். [5]

குறிப்பிடத்தக்க சிலைகளின் அண்ணளவான உயரங்கள்:
1. ஒற்றுமைக்கான சிலை பீடத்துடன் 240 மீட்டர் 2. இளவேனில் கோயிலின் புத்தர் 153 மீ (25மீ பீடம் மற்றும் 20மீ அடிப்பீடம் உட்பட)
3. சுதந்திரச் சிலை 93 மீ (47மீ பீடம் உட்பட)
4. தாய்நாடு அழைக்கிறது (சிலை) 91 மீ (அடிப்பீடம் தவிர்.)
5. மீட்பரான கிறிஸ்து 39.6 மீ (9.5மீ பீடம் உட்பட)
6. தாவீது சிலை 5.17 மீ (2.5மீ அடிப்பீடம் தவிர்.)

உசாத்துணை[தொகு]

  1. Statue of Liberty National Monument
  2. Statue of Liberty-Ellis Island Foundation
  3. Soleia Company Preserved and repurposes artifacts from the centennial restoration of the Statue of Liberty National Monument
  4. Views from the webcams affixed to the Statue of Liberty
  5. தொகுத்தவர் பா. தனுஷ் (16 சூலை 2014). "சுதந்திர தேவி சிலை யார் தந்த பரிசு?". தி இந்து. பார்த்த நாள் 31 அக்டோபர் 2017.

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=விடுதலைச்_சிலை&oldid=2593902" இருந்து மீள்விக்கப்பட்டது