உள்ளடக்கத்துக்குச் செல்

விடிலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விடிலி என்பது ஒருவகை குடிசையாகும். குடிசையானது ஓலை மரம், மண் போன்ற பொருட்களைக் கொண்டு அமைக்கப்படுவது. ஆனால் விடிலியானது முழுக்க முழுக்க பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பனை ஓலைகளையும் மட்டைகளையும் பனந்தடிகள் என்று முழுவதும் பனை சார்ந்த பொருட்களாலேயே கொண்டு சுரில்லாமல் கட்டப்படும் ஒரு எளிய கட்டுமானமாகும்.[1] இது பனை ஏறிகள் தாங்கள் பணி செய்யும் இடத்தில் தங்குவதற்கு ஏற்ற வகையில் தாழ்ந்த அளவில் உருவாக்கப்படும். இந்த விடிலி இரவில் உறங்கவும், பனையேறிகளின் தளவாடங்களை வைத்துக்கொள்ளும் ஒரு அறையாகவும் பயன்படுத்தப்படுகிறது.[2] இங்கேதான் பதனீர் காய்ச்சி கருப்பட்டி தயாரிப்பர்கள்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. சு.சமுத்திரம். "பாலைப்புறா". நூல். விக்கி மூலம். பார்க்கப்பட்ட நாள் 30 ஆகத்து 2018.
  2. காட்சன் சாமுவேல் (18 ஆகத்து 2018). "விடிலி". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 30 ஆகத்து 2018.
  3. "வீழ்ச்சிப் பாதையில் பனைத் தொழில்.. காணாமல் போகும்"கருப்பட்டி".. தவிப்பில் பனைத் தொழிலாளர்கள்!". செய்தி. ஒன் இந்தியா. 6 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 30 ஆகத்து 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விடிலி&oldid=3578257" இலிருந்து மீள்விக்கப்பட்டது