விடாது கறுப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

விடாது கறுப்பு ராஜ் தொலைக்காட்சியில் 1997-98ல் ஒளிபரப்பப்பட்ட ஒரு தமிழ்த் தொலைக்காட்சித் தொடராகும். இத்தொடரை இந்திரா சௌந்திரராஜன் எழுத, நாகா என்பவர் இயக்கினார். மர்ம தேசம் தொடர் வரிசையில் இரண்டாவதான இது திகில்/உளவியல் கதைக்களத்தைக் கொண்டிருந்தது. ஒரு ஊரில் காவல் தெய்வமான கருப்புசாமி குற்றவாளிகளைத் தண்டிக்கிறது என்ற நம்பிக்கையின் பின்னணியில் கதை அமைக்கப்பட்டிருந்தது.

சேத்தன், தேவதர்ஷினி, மோகன் வி. ராமன், மற்றும் பலர் நடித்த இந்தத் தொடர் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இத் தொடரில் கற்பனை மட்டும் இன்றைய அறிவியல்பூர்வ அணுகுமுறையும் இருந்தது குறிப்பிடத்தக்கது. நம்பிக்கையும், அறிவியலும் ஒன்றே எனக் கதை முடிக்கப்பட்டது.[[பகுப்பு:]]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விடாது_கறுப்பு&oldid=1640884" இருந்து மீள்விக்கப்பட்டது