உள்ளடக்கத்துக்குச் செல்

விஜி சந்திரசேகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விஜி
பிறப்புவிஜி அஸ்வத்[1]
1966
இந்தியா
இறப்பு2000 நவம்பர் 27[2]
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியன்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1982 முதல் 2000 வரை

விஜி சந்திரசேகர் (Viji Chandrasekhar) தென்னிந்திய நடிகை ஆவார். திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ள இவர் நடிகை சரிதாவின் தங்கை ஆவார்.[3] பாலசந்தரின் இயக்கத்தில் வெளிவந்த தில்லு முல்லு திரைப்படத்தில் ரஜினிகாந்தின் தங்கையாக நடித்து திரையுலகிற்கு அறிமுகமானார்.[4] இவர் 40க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.[5]

வாழ்க்கை

[தொகு]

கங்கை அமரனின் கோழி கூவுது என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படத்திற்கு பிறகு இவர் "கோழி கூவுது" விஜி என அழைக்கப்பட்டார்.[6][7][8]

பூவே உனக்காக படப்பிடிப்பின் போது இவருக்கு இடுப்பு மற்றும் முதுகு வலி ஏற்பட்டது.[9] 1996இல் இவருக்கு முள்ளந்தண்டு வட அறுவை சிகிச்சை அப்போலோ மருத்துவமனையில் நடந்தது. அறுவை சிகிச்சை பலனளிக்காமல், அறுவை சிகிச்சையினால் ஏற்பட்ட காயத்தில் நோய்த்தொற்று ஏற்பட்டதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.[10] மேலும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு,[9] விஜி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார்.[8][11] அப்போலோ மருத்துவமனைகளுக்கு எதிராக ஒரு வழக்கை இவர் தாக்கல் செய்தார். மருத்துவமனை நிர்வாகம் இவருக்கு ரூ. 30,000த்தை திரும்ப வழங்கியது.[10] விஜி ஒரு சரியான அறுவை சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் தனது பழைய நிலைக்குத் திரும்பினார்.[12] 2000இல் சிம்மாசனம் என்றத் திரைப்படத்தின் மூலம் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார்.[13] விஜியை பல படங்களில் நடிக்க வைத்த நடிகர் விஜயகாந்த். தனது அடுத்த படமான வாஞ்சிநாதன் படத்தில் இவருக்கு ஒரு பாத்திரத்தை வழங்குவதாக உறுதியளித்திருந்தார்.[14] ஆனால் "சிம்மாசனம்" இறுதியில் இவரது கடைசி படமானது.

2000 நவம்பர் 27 அன்று சென்னையில் தனது வீட்டிலேயே விஜி தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலைக்கு காரணமென ஏற்கனவே திருமணம் செய்து கொண்ட இயக்குநர் ஏ. ஆர். ரமேஷ் என்பவரை குற்றம் சாட்டினர்.[5][15] ரமேஷ் இவரைத் திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்தார். ஆனால் பின்னர் மறுத்துவிட்டார். இறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு ரமேஷ் விஜியை ஒரு விழாவில் சந்தித்தார் என தி இந்து நாளிதழ் எழுதியது.[2] ரமேஷ், அவரது மனைவி ஏ. ஆர். சுமதி மற்றும் அவரது நண்பர் சின்னசாமி ஆகியோர் விஜியின் தற்கொலையை தூண்டியதாக காரணம் காட்டி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.[2]

திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டு திரைப்படம் பாத்திரம் மொழி குறிப்புகள்
1981 தில்லு முல்லு உமா தமிழ்
1991 கலியுகம் பிரியா தெலுங்கு
1992 தேவி ஐ ஏ எஸ் தேவி மலையாளம்
1993 கிழக்குச்சீமையிலே கௌதாரி தமிழ்
1994 பிரியங்கா காமினி தமிழ்
1995 இந்திரா தமிழ்
1999 படையப்பா தமிழ்
2001 பார்த்தாலே பரவசம் தமிழ்
2002 சமஸ்தானம் தமிழ்
2004 ஆய்த எழுத்து அங்கம்மா தமிழ்
2012 ஆரோகணம் நிர்மலா தமிழ்
2013 மதயானைக் கூட்டம் செவனம்மா தமிழ்
2014 நெருங்கி வா முத்தமிடாதே சீதா தமிழ்
2015 பாதெமாறி (''Pathemari'') நாராயணனின் தாய் மலையாளம்
2015 திங்கள் முதல் வெள்ளி வரே ஜயதேவாவின் தாய் மலையாளம்

2019ல் வெளிவந்த குயின் வெப் சீரியலில் இவர் வி.கே.சசிகலாவாக நடித்துள்ளார்.

சான்றுகள்

[தொகு]
  1. "Newspaper Article – Why do Tamil actresses keep committing suicide?". Newspapers.nl.sg. பார்க்கப்பட்ட நாள் 8 April 2013.
  2. 2.0 2.1 2.2 "Tamil Nadu / Chennai News : Three absolved in actress' suicide case". The Hindu. Archived from the original on 14 ஜூலை 2005. பார்க்கப்பட்ட நாள் 8 April 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. 'Aarohanam' was challenging, didn't do homework: Viji பரணிடப்பட்டது 2013-09-12 at Archive.today. Deccan Chronicle (2012-10-26). Retrieved on 2013-11-21.
  4. Viji hopes for a dream run in films. The New Indian Express. Retrieved on 2013-11-21.
  5. 5.0 5.1 "Telugu cinema – Story of Viji". Idlebrain.com. பார்க்கப்பட்ட நாள் 8 April 2013.
  6. http://www.mid-day.com/entertainment/2002/apr/23474.htm
  7. "rediff.com, Movies: For whom death tolls". Rediff.com. 16 April 2002. பார்க்கப்பட்ட நாள் 8 April 2013.
  8. 8.0 8.1 Lata Srinivasan, TNN 23 June 2012, 12.00 AM IST (23 June 2012). "Kollywood turns to suicide – Times of India". Articles.timesofindia.indiatimes.com. Archived from the original on 25 செப்டம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 8 April 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)CS1 maint: multiple names: authors list (link) CS1 maint: numeric names: authors list (link)
  9. 9.0 9.1 "Tamil Movie News – Gentleman-in pala kashtangal". Archived from the original on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2019-03-15.
  10. 10.0 10.1 "Messiahs Turn Mercenaries". Thesundayindian.com. 29 April 2007. Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 8 April 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  11. "Rediff on the Net Business Interview: Apollo Hospitals chief says India can earn $30 bn in health care". Rediff.com. பார்க்கப்பட்ட நாள் 8 April 2013.
  12. "It's a heavy price to pay". The Hindu. 3 May 2002. Archived from the original on 14 ஜனவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 8 April 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  13. "rediff.com, Movies: Gossip from the southern film industry". Rediff.com. 21 June 2000. பார்க்கப்பட்ட நாள் 8 April 2013.
  14. "Actresses may come and actresses may go but Devayani goes on forever". Cinematoday2.itgo.com. பார்க்கப்பட்ட நாள் 8 April 2013.
  15. http://archives.digitaltoday.in/indiatoday/20021223/living.html


வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜி_சந்திரசேகர்&oldid=4114437" இலிருந்து மீள்விக்கப்பட்டது