உள்ளடக்கத்துக்குச் செல்

விஜய் சிங் கோண்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விஜய் சிங் கோண்ட்
18-ஆவது உத்தரபிரதேச சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
4 சூன் 2024 – 8 சனவரி 2026
முன்னையவர்ராம்துலார் கவுர்
தொகுதிதுத்தி
உத்தரபிரதேச சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1980–2007
முன்னையவர்ஈசுவர் பிரசாத்
பின்னவர்சந்திர மணி பிரசாத்
தொகுதிதுத்தி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1957-03-10)10 மார்ச்சு 1957
ஃபரூக்காபாத், உத்தரப் பிரதேசம், இந்தியா
இறப்பு8 சனவரி 2026(2026-01-08) (அகவை 68)
லக்னோ, உத்தரப் பிரதேசம், இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிசமாஜ்வாதி கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
இந்திய தேசிய காங்கிரஸ்
ஜனதா தளம்
சுயேச்சை
துணைவர்தமயந்தி சிங்
பிள்ளைகள்2
தொழில்அரசியல்வாதி

விஜய் சிங் கோண்ட் (Vijay Singh Gond) (10 மார்ச் 1957 – 8 சனவரி 2026) ஒரு இந்திய அரசியல்வாதி. இவர் துத்தி சட்டமன்றத் தொகுதியிலிருந்து உத்தரபிரதேச சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். முலாயம் சிங் யாதவ் தலைமையிலான அரசில் மாநில அமைச்சராகவும் செயல்பட்டார். 1980ஆம் ஆண்டிலிருந்து தொடங்கி, எட்டு முறை உத்தரப் பிரதேச சட்டமன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் சமாஜ்வாதி கட்சியின் உறுப்பினராக இருந்தார்.[1][2][3]

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

விஜய் சிங் கோண்ட் உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஃபரூக்காபாத்தில், 1970ஆம் ஆண்டு மார்ச் 10 அன்று இந்து குடும்பம் ஒன்றில் பிறந்தார்.

அரசியல் வாழ்க்கை

[தொகு]

1980ஆம் ஆண்டு, இவர் முதன்முறையாக இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக உத்தரப் பிரதேச சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 1985ஆம் ஆண்டில் மீண்டும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார். 1989ஆம் ஆண்டு, இவர் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு மூன்றாவது முறையாக தனது இடத்தைத் தக்க வைத்தார்.

1991 மற்றும் 1993ஆம் ஆண்டுகளில், ஜனதா தளத்தின் உறுப்பினராக சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்றார். இதன் பின்னர் இவர் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார். 1996 மற்றும் 2002ஆம் ஆண்டுகளில் துத்தி சட்டமன்றத் தொகுதியிலிருந்து தொடர்ச்சியாக நடைபெற்றச் சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்றார்.

சமாஜ்வாதி கட்சியின் உறுப்பினராக, 2007ஆம் ஆண்டு ஃபரூக்காபாத் சட்டமன்றத் தேர்தலிலும், 2012ஆம் ஆண்டு மிலாக் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும் நடைபெற்றச் சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்றார்.[3]

இறப்பு

[தொகு]

சிறுநீரக செயலிழப்பால் ஏற்பட்ட நீண்ட கால உடல்நலப் போராட்டத்திற்குப் பிறகு, விஜய் சிங் கோண்ட் 2026 ஆம் ஆண்டு சனவரி 8 அன்று, 68 வயதில் காலமானார்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Candidate affidavit". My neta.info. http://myneta.info/up2012/candidate.php?candidate_id=1988. பார்த்த நாள்: September 24, 2015. 
  2. "All MLAs from constituency". elections.in. http://www.elections.in/uttar-pradesh/assembly-constituencies/milak.html. பார்த்த நாள்: September 24, 2015. 
  3. 3.0 3.1 "विजय सिंह गोंड दुद्धी उपचुनाव में सपा के प्रत्याशी:एक बार फिर अखिलेश ने पूर्व मंत्री पर जताया भरोसा, मुलायम सिंह यादव की सरकार में राज्यमंत्री रह चुके". Dainik Bhaskar.
  4. "Veteran SP Leader, Eight-Time MLA Vijay Singh Gond Passes Away at 68". The News Agency. 8 January 2026. https://www.thenewsagency.in/uttar-pradesh/veteran-sp-leader-eight-time-mla-vijay-singh-gond-passes-away-at-68. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜய்_சிங்_கோண்ட்&oldid=4453675" இலிருந்து மீள்விக்கப்பட்டது