உள்ளடக்கத்துக்குச் செல்

விஜய் கோபர்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விஜய் கோபர்கர்
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்வித்யாதர் கோபர்கர்
பிறப்பு14 பெப்ரவரி 1962 (1962-02-14) (அகவை 62)
பிறப்பிடம்புனே, மகாராட்டிரம், இந்தியா
இசை வடிவங்கள்இந்துஸ்தானி இசை, தும்ரி, சங்கீத நாடகம்
தொழில்(கள்)பாடுதல்

வித்யாதர் கோபர்கர் (Vidyadhar Koparkar) (பிறப்பு 1962) இவர் இந்துஸ்தானி இசைப் பாடகராவார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

இவர், புனேவைச் சேர்ந்தவர். இவரது தந்தை புகழ்பெற்ற கீர்த்தங்கர் ஆவார். இவருக்கு ஒரு தோல் மருத்துவராக இருந்த ஒரு சகோதரர் இருந்தார். கோபர்கர் மகாராட்டிரா கல்வி சங்கங்கள், பெருகேட் பாவ் பள்ளியில் பயின்றார். பின்னர் புனே பொறியியல் கல்லூரியில் உலோகவியலில் முதுகலைப் பட்டம் பெற்றா. மேலும், ஒரு சிறிய அளவிலான உற்பத்தி ஆலையை நடத்தி வருகிறார்.

இவர், தனது எட்டு வயதில் தனது இசை பயிற்சியைத் தொடங்கினார். எட்டு ஆண்டுகளாக மதுசூதன் பட்வர்தன் என்பவரை தனது குருவாகக் கொண்டுள்ளார். இதைத் தொடர்ந்து புகழ்பெற்ற கலைஞரான வசந்த்ராவ் தேசுபாண்டேவின் கீழ் ஐந்து ஆண்டுகள் பயிற்சியும், பின்னர் பண்டிட் ஜிதேந்திர அபிசேக்கியின் கீழ் ஏழு ஆண்டுகள் பயிற்சியும் பெற்றார்.

தொழில்[தொகு]

இவருக்கு வெவ்வேறு கரானாக்களைச் சேர்ந்த இசையாசிரியர்கள் பயிற்சி அளித்துள்ளனர். அது இவரது பாடலில் பிரதிபலிக்கிறது. 1983 முதல் 1990 வரை ஆறு ஆண்டுகளாக 'சுரசிறீ பிரதிஷ்டான்' மூலமாகவும், கந்தர்வ மகாமண்டலின் 'பண்டிட் இராம்கிருட்டிண வேழு புரஸ்கார்' மூலமாகவும் சுதிர் பட்கே வழங்கிய உதவித்தொகை உட்பட பல கௌரவங்களைப் பெற்றுள்ளார்.

அமெரிக்கா, கனடா, மத்திய கிழக்கு, பாரிஸ் இங்கிலாந்து உட்பட உலகம் முழுவதும் இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார். [1] [2] [3] ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் புனேவில் நடைபெறும் மதிப்புமிக்க 'சவாய் கந்தர்வ இசை விழாவில்' இவர் இரண்டு முறை நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார். [4] [5]

அகில இந்திய வானொலியிலும், தூர்தர்ஷனிலும் தரப்படுத்தப்பட்ட கலைஞராகவும் இருக்கிறார். 

மாணவர்கள்[தொகு]

இவர், பல ஆண்டுகளாக இசை பாடங்களை மாணவர்களுக்கு அளித்து வருகிறார். இவரது மாணவர்களில் பாடகர்கள், மூத்தக் கலைஞர் சவுரவ் தேசுபாண்டே, இலலித் தேசுபாண்டே, ஈதக், இரிசிகேசு ரனதே, பிரசக்த ரனதே, இவரது மகனான தேஜாசு, மகளான சுருதி ஆகியோர் உள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Archived copy". Archived from the original on 22 March 2009. பார்க்கப்பட்ட நாள் 12 August 2009.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. "Archived copy". Archived from the original on 13 July 2011. பார்க்கப்பட்ட நாள் 3 July 2009.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  3. http://groups.google.com/group/rec.music.indian.classical/browse_thread/thread/e4105dbc98c39791
  4. "Archived copy". Archived from the original on 16 July 2011. பார்க்கப்பட்ட நாள் 12 August 2009.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  5. "Archived copy". Archived from the original on 16 July 2011. பார்க்கப்பட்ட நாள் 12 August 2009.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜய்_கோபர்கர்&oldid=3053769" இலிருந்து மீள்விக்கப்பட்டது