விஜய்பூர்
தோற்றம்
விஜய்பூர் | |
|---|---|
நகரம் | |
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி)யில் உள்ள சம்பா மாவட்டத்தில் விஜப்பூரின் அமைவிடம் | |
| ஆள்கூறுகள்: 32°35′07″N 75°00′11″E / 32.585331°N 75.00309°E | |
| நாடு | இந்தியா |
| ஒன்றியப் பகுதி | ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி) |
| மாவட்டம் | சம்பா |
| அரசு | |
| • வகை | நகராட்சி |
| • நிர்வாகம் | விஜய்பூர் நகராட்சி |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 21,044 |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| வாகனப் பதிவு | JK 21 |
விஜய்பூர் (Vijay Pur) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி)யில் உள்ள ஜம்மு பிரதேசத்தில் அமைந்த சம்பா மாவட்டத்தில் உள்ள நகராட்சி ஆகும். இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில அமைந்த விஜய்பூர் நகரம் தேவாக் ஆற்றின் கரையில் ஜம்மு அருகே அமைந்துள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, விஜய்பூர் நகரத்தின் மொத்த மக்கள்தொகை 8,044 ஆகும். அதில் ஆண்கள் 4,199 மற்றும் 3,845 பெண்கள் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 916 பெண்கள் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 87.36% ஆக உள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 88.65%, இசுலாமியர் 1.38%, கிறித்தவர்கள் 2.16% மற்றும் பிறர் 0.32% ஆகவுள்ளனர். [1]