விஜயா தாப்பே
விஜயா தாப்பே | |
---|---|
![]() | |
பிறப்பு | விஜயா 1 சூன் 1951 தாப்பே, பேளூர், கருநாடகம், இந்தியா |
இறப்பு | 23 பெப்ரவரி 2018 மைசூர், கருநாடகம், இந்தியா | (அகவை 66)
தொழில் |
|
மொழி | கன்னடம் |
வகை |
|
கருப்பொருள் |
|
இலக்கிய இயக்கம் | கருநாடகாவில் பெண்ணிய இயக்கம் |
பெற்றோர் | சீதாலட்சுமி (தாயார்) கிருஷ்ணமூர்த்தி (தந்தை) |
விஜயா தாப்பே (Vijaya Dabbe) (1 ஜூன் 1951-23 பிப்ரவரி 2018) ஓர் இந்திய எழுத்தாளரும், பெண்ணியவாதியும், அறிஞரும் மற்றும் கன்னட மொழி விமர்சகரும் ஆவார்.[1] நவீன கன்னட மொழியில் முதல் பெண்ணிய எழுத்தாளராகப் பாராட்டப்பட்ட விஜயா தாப்பே, கருநாடகாவில் பெண்ணிய இயக்கத்தின் முக்கிய நபர்களில் ஒருவராக இருந்தார்.[2][3][4]
சொந்த வாழ்க்கை
[தொகு]விஜயா 1951 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி கருநாடகாவின் பேளூர் வட்டத்தின் தப்பே கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி மற்றும் சீதாலட்சுமி ஆகியோருக்கு பிறந்தார்.[5] கலசபுரா மற்றும் ஜவகல் ஆகிய இடங்களில் தனது பள்ளிப்படிப்பை முடித்த அவர், பின்னர் உயர் கல்விக்காக ஹாசன் மற்றும் மைசூருக்குச் சென்றார். சிலகாலம் மைசூர் பல்கலைக்கழகத்தில் கன்னட ஆசிரிய உறுப்பினராக பணியாற்றினார்.[5]
தொழில் வாழ்க்கை
[தொகு]- எழுத்தாளராக
1975இல் வெளியிடப்பட்ட கவிதைத் தொகுப்பான 'இருதவே' தாப்பேயின் முதல் குறிப்பிடத்தக்க இலக்கியப் படைப்பாகும். 'நீரு லோகதா சிந்தே' (1985), 'நாரி தாரி திகந்தா' உள்ளிட்டவையும் இவரது பிற முக்கிய படைப்புகள். இவரது பெரும்பாலான படைப்புகள் பெண்களை மையமாகக் கொண்டவை.
- பெண்ணிய இயக்கம்
1978 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட 'சமதா வேதிகே' என்ற பெண் எழுத்தாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் குழுவின் நிறுவனர்களில் ஒருவரான விஜயா தாப்பே பாலின சமத்துவமின்மை, பெண்கள் மீதான குடும்ப வன்முறை, வரதட்சணை, சிறுவர் திருமணம், பிற சாதி அடிப்படையிலான பாகுபாடு மற்றும் சமூக அநீதி பற்றிய விழிப்புணர்வை பரப்புவதற்காக பணியாற்றி வருகிறார். கருநாடகம் முழுவதும் தனது கவிதைகள், கட்டுரைகள், பட்டறைகள், இலக்கியக் கூட்டங்கள் மற்றும் சமூகப் பணிகள் மூலம் இந்த நடவடிக்கைகளை வழிநடத்துவதில் தப்பே முன்னணியில் இருந்தார்.[6]
விருதுகள்
[தொகு]- 2008-கருநாடக அரசால் வழங்கப்பட்ட ‘இராஜ்யோத்சவ பிரசஸ்தி விருது’ [7]
- 2008-கருநாடக அரசின் ‘தானா சிந்தாமணி அட்டீமாப்பே விருது’ [8]
- கருநாடக லெககியாரா சங்கத்தின் ‘அனுமாபாமா விருது’ [9]
- வர்தமான விருது[3]
விஜயா தாப்பே 1999 ஜனவரி 6 அன்று சாலை விபத்தை சந்தித்த பின்னர் செயலற்றவராக இருந்தார்.[6] பின்னர், 2018 பிப்ரவரி 23 அன்று மைசூரில் மாரடைப்பால் இறந்தார்.[10][11]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Writer Vijaya Dabbe passes away". Times of India. 24 Feb 2018. https://timesofindia.indiatimes.com/city/mysuru/writer-vijaya-dabbe-passes-away/articleshow/63049610.cms.
- ↑ "ಹಿರಿಯ ಸಾಹಿತಿ ವಿಜಯಾ ದಬ್ಬೆ ನಿಧನ". Vijayakarnataka. 23 Feb 2018. https://vijaykarnataka.com/news/karnataka/kannada-writer-vijaya-dabbe-no-more/articleshow/63047676.cms.
- ↑ 3.0 3.1 "Kannada writer Vijaya Dabbe dies after cardiac arrest". The New Indian Express. 24 Feb 2018. https://www.newindianexpress.com/states/karnataka/2018/feb/24/kannada-writer-vijaya-dabbe-dies-after-cardiac-arrest-1778155.html.
- ↑ "ಮಹಿಳಾ ಚಳುವಳಿಗೆ ಗಟ್ಟಿ ನೆಲೆ ಒದಗಿಸಿದ ದಬ್ಬೆ". Prajavani. 26 Mar 2018. https://www.prajavani.net/news/article/2018/03/26/561843.html.
- ↑ 5.0 5.1 G. N. Ranganatha Rao (4 Mar 2018). "ಸ್ತ್ರೀವಾದಿ ಸಾಹಿತ್ಯದ ವಿಜಯಾ 'ದಬ್ಬೆ'" (in Kannada). Varthabharati. https://m.varthabharati.in/article/2018_03_04/121922. பார்த்த நாள்: 22 Oct 2020.
- ↑ 6.0 6.1 N. Gayatri (8 Mar 2018). "ಮಹಿಳಾ ಹೋರಾಟಕ್ಕೆ ದಾರಿದೀವಿಗೆ" (in Kannada). Prajavani. https://www.prajavani.net/news/article/2018/03/07/558175.html. பார்த்த நாள்: 23 Oct 2020.
- ↑ "Rajyotsava Awards". Karnataka Government Official Website. Retrieved 23 Oct 2020.
- ↑ "Daana Chintamani Attimabbe Award". Karnataka Government Official Website. Retrieved 23 Oct 2020.
- ↑ "Women writers in Kannada get noticed". https://www.newindianexpress.com/cities/bengaluru/2014/jul/01/women-writers-in-kannada-get-noticed-630596.html. பார்த்த நாள்: 23 Oct 2020.
- ↑ . 24 Feb 2018.
- ↑ . 24 Feb 2018.