உள்ளடக்கத்துக்குச் செல்

விஜயலட்சுமி சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விஜயலட்சுமி சிங்
தொழில்
துணைவர் ஜெய் ஜெகதீஷ்
பிள்ளைகள் 3
பெற்றோர் டி. சங்கர் சிங்
பிரதிமா தேவி
உறவினர் இராஜேந்திர சிங் பாபு (சகோதரர்)<

விஜயலட்சுமி சிங் (Vijayalakshmi Singh) ஒரு இந்திய நடிகையும், இயக்குநரும், ஆடைகலன் வடிவமைப்பாளரும் ஆவார். குறிப்பாக இவர் கன்னடத் திரைப்படத்துறையில் பணிபுரிந்து வருகிறார்.[1][2] இவர் பல கன்னடப் படங்களில் நடித்துள்ளார். மேலும், தொலைக்காட்சித் திட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.[3]

ஆரம்பகால வாழ்க்கை.

[தொகு]

விஜயலட்சுமி மைசூரில் திரைப்பட பிரபலங்களான டி. சங்கர் சிங் மற்றும் கன்னட நடிகை பிரதிமா தேவி ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார்.[4] திரைப்பட இயக்குனர் ராஜேந்திர சிங் பாபு இவரது அண்ணன் ஆவார்.

தொழில் வாழ்க்கை

[தொகு]

1981 ஆம் ஆண்டில் கதாநாயகியாக அறிமுகமான விஜயலட்சுமி, விஷ்ணுவர்தன், அனந்த் நாக், ரவிச்சந்திரன், ஜெய் ஜெகதீஷ் மற்றும் இராமகிருஷ்ணா போன்ற அக்காலத்தின் முன்னணி கன்னட நடிகர்களுக்கு இணையாக நடித்தார். புட்டண்ணா கனகல், கே. பாலசந்தர், கீதபிரியா, கே. எஸ். எல். சுவாமி மற்றும் நாகத்திஹள்ளி சந்திரசேகர் உள்ளிட்ட பல முன்னணி இயக்குனர்களுடன் பணியாற்றினார்.

விஜயலட்சுமி, இராஜேந்திர சிங் பாபுவின் பாரி பர்ஜாரி பேத்தே, பந்தனா மற்றும் ஹூவு ஹனு போன்ற பல படங்களுக்கு ஆடைகலன் வடிவமைப்பாளராக இருந்தார். ராணி மகாராணி படத்தின் தயாரிப்புக் கட்டுப்பாட்டாளராக பணியாற்றத் தொடங்கினார். பிரபலமான நட்சத்திரங்கள் நடித்த ஈ பந்தனா, மாலே பராலி மஞ்சு இராலி மற்றும் ஸ்வீட்டி நன்னா ஜோடி போன்ற பல வெற்றிகரமான கன்னடத் திரைப்படங்களை இயக்கியுள்ளார். பின்னர், 2020 ஆம் ஆண்டில் ஒளிப்பரப்பான கன்னடத் தொடரான ஜொதே ஜொதியலி மூலம் தொலைக்காட்சியில் நுழைந்தார்.[5]

சொந்த வாழ்க்கை

[தொகு]

விஜயலட்சுமி கன்னட நடிகர் ஜெய் ஜெகதீஷை மணந்தார்.[6] இந்தத் தம்பதியினருக்கு வைசிறீ, வைபவி மற்றும் வைனிதி என்ற மூன்று மகள்கள் உள்ளனர். இவர்கள் யானா (2019) என்ற கன்னடத் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்கள்.[6]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜயலட்சுமி_சிங்&oldid=4396328" இலிருந்து மீள்விக்கப்பட்டது