விசைக்குவை (குறியாக்கவியல்)
Appearance
மேற்கோள்கள்
[தொகு]குறியாக்கவியல் புலத்தில் ஒரு விசைக்குவை (key) என்பது தரவுகளின் ஒரு பகுதியாகும். இதைத் தரவுக்குவை எனவும் கூறலாம்பொதுவாக ஒரு கோப்பில் தேக்கப்படும் எண்கள் அல்லது எழுத்துக்களின் சரம். இது ஒரு குறியாக்க வழிமுறையின் மூலம் செயலாக்கப்படும்போது குறியாக்கத் தரவை குறியாக்கம் அல்லது குறியிறக்கம் செய்ய முடியும். பயன்படுத்தப்படும் முறையின் அடிப்படையில் விசைக்குவை வெவ்வேறு அளவுகள், வகைகளாக இருக்கலாம். ஆனால் எல்லா சூழலிலும் குறியாக்கத்தின் வலிமை, பேணப்படும் விசைக்குவையின் பாதுகாப்பை நம்பியுள்ளது. ஒரு விசைக்குவையின் பாதுகாப்பு வலிமை அதன் வழிமுறையைப் பொறுத்தது. இது விசைக்குவையின் அளவு, விசைக்குவையின் தலைமுறை, விசைக்குவைப் பரிமாற்றச் செயல்முறை ஆகியவற்றைச் சார்ந்ததாகும்.