விசுவாமித்திரி நதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வடோதரா நகருக்கு வெளியே விசுவாமித்திரி நதி
வடோதரா நகருக்கு அருகில் விசுவாமித்திரி நதி

விசுவாமித்திரி நதி (Vishwamitri River) என்பது இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பாய்கின்ற ஒரு பருவகால ஆறு ஆகும். இந்நதி பவாகாத் குன்றிலிருந்து உற்பத்தியாகி, மாகி மற்றும் நருமதை ஆறுகளுக்கு இடையில் பாய்கிறது.

விசுவாமித்திரி நதி வடோதரா நகர் வழியாக மேற்கு நோக்கி பாய்ந்து, கான்பூர் கிராமத்திலுள்ள காம்பத் வளைகுடாவில் கலப்பதற்கு முன்பாக தாதர் மற்றும் கான்பூர் நதிகளுடன் இணைகிறது[1]. அச்வா நீர்த் தேக்கத்திற்கு அருகில் விசுவாமித்திரி நதியின் மீது சாயாசி சரோவரும், தாதர் கிளையாற்றின் மீது கட்டப்பட்டுள்ள தேவ் அணையும் இவ்வாற்று அமைப்பில் உள்ளடங்கியுள்ளன. வடோதரா வழியாக பாய்வதால் இந்நகரின் கழிவுகள் மற்றும் அருகில் உள்ள தொழிற்சாலைகளின் நீர்மக் கழிவுகள் முதலியன விசுவாமித்திரி நதியில் கலக்கின்றன. இத்தகைய மாசுக்கள் கலந்திருந்த போதிலும் வடோதரா நகர் வழியாக செல்லும் 25 கிலோமீட்டர் தொலைவு நீட்சியில் சதுப்புநில முதலைகள் காணப்படுவதாக 2002 ஆம் ஆண்டில் நடைபெற்ற முதலை ஆய்வு சிறப்புக்குழுவின் அறிக்கை தெரிவித்தது[2][3]. விசுவாமித்திரி நதி மற்றும் அதன் கிளையாறுகள் மீது பல அணைகள் கட்டப்பட்டிருந்தாலும் தொடர்ந்து இந்நதியில் வெள்ளப் பெருக்கும் ஏற்படுகிறது.[4][5]

விசுவாமித்திரி நதியின் வளர்ச்சிக்காக வடோதரா நகராட்சி நிர்வாகம் ஒரு அமைப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளது. எதிர்பார்க்கும் இலக்கை அடைய 20 முதல் 25 ஆண்டுகள் வரை ஆகலாம் என்றாலும், சபர்மதி ஆற்றுக்கு முன்புறமுள்ள பாதைகளை அபிவிருத்தி செய்ய முயற்சிகள் மேற்கொள்வது இவ்வமைப்பின் நோக்கமாகும்.[5][6][7][8]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Riverfront Development for Vishwamitri". Vadodara Property Centre (15 March 2010). மூல முகவரியிலிருந்து 20 April 2010 அன்று பரணிடப்பட்டது.
  2. "VMC to rehabilitate Vishwamitri crocodiles in Ajwa Sarovar". Indian Express. 3 November 2008. Archived from the original on 19 ஏப்ரல் 2015. https://www.webcitation.org/6XuW2uLcV?url=http://archive.indianexpress.com/news/vmc-to-rehabilitate-vishwamitri-crocodiles-i/380704. 
  3. Raja, Aditi and Saiyed, Kamal (17 June 2014). "Narmada or Vishwamitri, crocodiles on the offensive in Gujarat". Indian Express. Archived from the original on 19 ஏப்ரல் 2015. https://www.webcitation.org/6XuWNLLWW?url=http://indianexpress.com/article/india/india-others/narmada-or-vishwamitri-crocodiles-on-the-offensive-in-gujarat/. 
  4. "After J&K heavy rainfall wreaks havoc in Gujarat, 5,300 people evacuated to safer places". Daily Bhaskar. 10 September 2014. Archived from the original on 19 ஏப்ரல் 2015. https://www.webcitation.org/6XuVZGphu?url=http://daily.bhaskar.com/news/NAT-TOP-after-jk-heavy-rainfall-wreaks-havoc-in-gujarat-5300-people-evacuated-to-safer-p-4740233-PHO.html. 
  5. 5.0 5.1 "Vishwamitri Riverfront: MP seeks Centre’s push". Indian Express. 18 December 2014. Archived from the original on 19 ஏப்ரல் 2015. https://www.webcitation.org/6XuX3iscC?url=http://indianexpress.com/article/cities/ahmedabad/vishwamitri-riverfront-mp-seeks-centres-push/. 
  6. "‘Vishwamitri’s revival can be a model for rivers in India’". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 21 March 2015. Archived from the original on 19 ஏப்ரல் 2015. https://www.webcitation.org/6XuYTt3sg?url=http://timesofindia.indiatimes.com/city/vadodara/Vishwamitris-revival-can-be-a-model-for-rivers-in-India/articleshow/46643022.cms. 
  7. Sharma, Sachin (15 March 2010). "VMC keen on riverfront development corporation for Vishwamitri". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 19 ஏப்ரல் 2015. https://www.webcitation.org/6XuY96YxZ?url=http://timesofindia.indiatimes.com/city/vadodara/VMC-keen-on-riverfront-development-corporation-for-Vishwamitri/articleshow/5680841.cms. 
  8. "Vishwamitri riverfront : Irrigation dept to submit report next week". Indian Express. 6 December 2009. Archived from the original on 19 ஏப்ரல் 2015. https://www.webcitation.org/6XuXViWWo?url=http://archive.indianexpress.com/news/vishwamitri-riverfront--irrigation-dept-to-submit-report-next-week/550447/. 

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விசுவாமித்திரி_நதி&oldid=3228519" இருந்து மீள்விக்கப்பட்டது