விசுவமடு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
விசுவமடு | |
---|---|
நாடு | இலங்கை |
மாகாணம் | வட மாகாணம் |
மாவட்டம் | முல்லைத்தீவு |
பிரதேச செயலாளர் பிரிவு | புதுக்குடியிருப்பு |
விசுவமடு இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது ஏற்றுநீர்ப்பாசனத்திட்டத்தின் மூலம் குடியமர்த்தப்பட்ட ஒரு விவசாயக் கிராமமாகும். இது கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் எல்லைப்பகுதியில் உள்ளது. 9°18'00"வ 80°41'00"கி என்னும் ஆள்கூறுகளைக் கொண்டு அமைந்துள்ளது. இப் பிரதேசத்தின் விவசாய செய்கைக்கு விசுவமடுக்குளம் நீர்ப்பாசன தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகின்றது.[1]
விசுவமடு என்பது ஆரம்பத்தில் ஒரு குடியேற்றதிட்டம் என்பதாக உருவாக்கப்பட்டபோதும் இன்று பல கிராமங்கள் பல கிராம அலுவலர் பிரிவுகள் என்பவற்றை தாங்கிய ஒரு பிரதேசத்தை குறிப்பதாக உள்ளது. விசுவமடு மேற்கு, விசுவமடு கிழக்கு, மாணிக்கபுரம், வள்ளுவர்புரம், தேராவில் ஆகிய முல்லைத்தீவு மாவட்ட கிராம அலுவலர் பிரிவுகளையும் பிரமந்தனாறு, புன்னைநீராவி ஆகிய கிளிநொச்சி மாவட்ட கிராம அலுவலர் பிரிவுகளையும் உள்ளடக்கிய பிரதேசம் விசுவமடு பகுதி என்று அழைக்கப்படுகிறது.
இது ஆரம்பகாலத்தில் படித்த வாலிபர் குடியேற்ற திட்டமாக உருவாக்கப்பட்டது. பின்னர் கிராம விஸ்தரிப்பு திட்டம் என்ற பெயரில் படித்த வாலிபர் குடியேற்ற திட்டத்திற்கு மேலதிகமான காணிகள் அரசால் வழங்கப்பட்டது. அதன் பின்னர் மலையகத்தில் இருந்து தொழில்வாய்ப்பு தேடியும் இலங்கையில் ஏற்பட்ட இனரீதியான மோதல்களை அடுத்தும் பலர் இந்த விசுவமடு பகுதியில் வந்து குடியேறி உள்ளனர். பாரதிபுரம், மாணிக்கபுரம், வள்ளுவர்புரம், இளங்கோபுரம் என்னும் கிராமங்கள் இவ்வாறு குடியேறிய மலையக மக்கள் பெரும்பான்மையாக வாழும் கிராமங்களாகும்.
பாடசாலைகள்
[தொகு]- மு/விசுவமடு மகா வித்தியாலயம்
- மு/றெட்பானா பாரதி வித்தியாலயம்
- மு/விசுவமடு விசுவநாதர் ஆரம்ப பாடசாலை
- மு/நெத்தலியாறு அ.த.க.பாடசாலை
- கிளி/பிரமந்தனாறு மகா வித்தியாலயம்
- கிளி/புன்னைநீராவி அ.த.க.பாடசாலை
கோவில்கள்
[தொகு]இந்துக் கோவில்கள்
[தொகு]- தொட்டியடி பிள்ளையார் கோவில்
- அதிசயவிநாயகர் ஆலயம்
- புத்தடி பிள்ளையார் கோவில்
- மாணிக்கப்பிள்ளையார் கோவில்
- குளத்தடி வீரபத்திரர் கோவில்
- தொட்டியடி ஆஞ்சநேயர் ஆலயம்
- பாரதிபுரம் முத்துமாரி அம்மன் ஆலயம்
- வள்ளுவர்புரம் முத்துமாரி அம்மன் ஆலயம்
- வள்ளுவர்புரம் காட்டு விநாயகர் கோவில்
- தேராவில் செல்வவிநாயகர் ஆலயம்
- தேராவில் முனியப்பர் கோயில்
- தேராவில் ஐயனர் கோயில்
- மாணிக்கபுரம் முத்துமாரி அம்மன் ஆலயம்
- விசுவமடு குளத்தடி பிள்ளையார் கோயில்
- விசுவமடு கிழக்கு பத்திரகாளி கோயில்
- தேராவில் கருப்பசாமி கோவில்
கிறித்தவ ஆலயங்கள்
[தொகு]- றெட்பானா புனித இராயப்பர் ஆலயம்
- பிரமந்தனாறு இறைஇரக்க யேசு ஆலயம்
- தென்னிந்திய திருச்சபை
- இலங்கை பெந்தகொஸ்தே திருச்சபை
சமூக அமைப்புகள்
[தொகு]- விசுவமடு மத்திய சனசமூக நிலையம் 1993 இல் ஆரம்பிக்கப்பட்டு நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளினால் அதன் செயற்பாடுகள் சிறிதுகாலம் தடைப்பட்டிருந்தன. இது இவ்வூர் மக்களின் கல்வி, கலை, கலாச்சார, பண்பாடு, விளையாட்டு மற்றும் பாரம்பரிய விழுமியங்களை மேம்படுத்தும் நோக்குடன் அதன் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
விளையாட்டுக் கழகங்கள்
[தொகு]- விசுவமடு மத்திய விளையாட்டுக்கழகம்
- விசுவமடு தோழர்கள் விளையாட்டுக்கழகம்
- நாச்சிக்குடா இளந்தென்றல் விளையாட்டுக்கழகம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Paalai-meen-madu, Min-neariya". TamilNet. February 2, 2015. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=37624.