விசுவநாதபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விஸ்வநாதபுரம் என்று அழைக்கப்படும் இந்த இடம் தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டத்தில் திருப்பனந்தாள், ஆடுதுறை மார்க்கத்தில் அமைந்துள்ள உள்ள ஒரு கிராமம் .இங்குள்ள மக்கள் காவிரி ஆற்று பாசனத்தை சார்ந்து நெல், கரும்பு, வாழை, பருத்தி போன்ற பயிர் வகைகளை விவசாயம் செய்து வருகின்றனர் .

சுற்றியுள்ள இடங்கள்[தொகு]

சுற்றுள்ள கிராமங்களாக இடையானல்லூர். இலங்காநல்லூர், கார்பிரியன் குறிச்சி ,நெடுந்திடல் மற்றும் திருலோக்கி ஆகிய இடங்கள் அமைந்துள்ளன. நவகிரகக் கடவுளான சூரியனுக்கு கோவில் இருக்கும் இடம் சூரியனார் கோவில், சுக்கிரன் கோவில் கஞ்சனூர், மற்றும் ஏழு லோக கொண்ட திரி லோக நாயகி ஆகிய சுற்றமைந்த இடங்களால் இந்தக் கிராமத்திற்கு பெருமை சேர்கின்றன.

இந்தக் கிராமம் திருவிடைமருதூர் சட்ட மன்ற தொகுதியிலும் , மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியிலும் வருகிறது .சுமாராக 250 மக்கள் 0.5 கிலோ மீட்டர் பரப்பளவில் வாழ்கிறார்கள்.ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை 30 விழுக்காடு அதிகமாக உள்ளது . போக்குவரத்து வசதிகள் இன்னும் சரிவர பெருகாமல் இருக்கிறது . வணிக வர்த்தகம் செய்யக்கூடிய இடங்களாக அருகாமையில் உள்ள திருப்பனந்தாள், ஆடுதுறை,மற்றும் கும்பகோணம் போன்ற இடங்கள் விளங்கி வருகின்றன.

கோவில்கள்[தொகு]

அருகினில் அமைந்துள்ள திருலோக்கி என்ற கிராமம், சோழர் கால ஆட்சியின் போது திரைலோக்கி என்ற பெயரால் ஆட்சி செய்யப்பட்டு வரி வசூல் செய்த இடமாக வரலாற்று நூல் தெரிவிக்கிறது {பொன்னியின் செல்வன்} .இதனை சுற்றியுள்ள கோவில்கள் பெரும்பாலும் சைவ சமயத்தை தழுவியனவாகவே உள்ளன. அருகில் உள்ள திருப்பனந்தாள் சைவ மடத்திற்கு சொந்தமான விளைநிலங்களைத்தான் பெரும்பாலான மக்கள் இன்றளவும் பயன்படுத்துகின்றனர்.

பெயர்க் காரணம்[தொகு]

இந்த கிராமத்திற்கு விஸ்வநாதபுரம் என்ற பெயர் வரக் காரணம்,கிராமத்தில் அமைந்து இருக்கும் விசாலாட்சி அம்மன் சிறப்பு, இவற்றையெல்லாம் பார்க்கும்பொழுது கடவுள் விஸ்வநாதருக்கும், அம்மனுக்கும் இயற்கையாகவே அமைந்து விட்ட பொருத்தத்தால்,பண்டையக் காலத்து முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது .இங்குள்ள மக்கள், இதனை "காசியின் வீசம் விஸ்வநாதபுரம்" என்று அழைக்கிறார்கள், அதாவது புண்ணியம் நிறைந்த வாரணாசியின் ஒரு சிறு பகுதி இந்த விஸ்வநாதபுரம் என்று தொன்று தொட்டு வழங்கி வருகிறார்கள். அதன் பொருட்டாக சைவ மதத்தை ஒட்டிய, சோமவாரம் என்ற நிகழ்ச்சியை, கார்த்திகை மாதத்தில் இன்றளவும் கடைபிடிக்கின்றனர்.

கல்வி[தொகு]

தொடக்கக் கல்விக்கு இடையானல்லூர், சிற்றிடையானல்லூர் பகுதிகளுக்கும், உயர் கல்விக்கு திருப்பனந்தாள், ஆடுதுறை பகுதிகளுக்கும் சென்று கல்வி பயிலுகிறார்கள். கல்வி அறிவு 40 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இது தேசிய சராசரியை விடவும் குறைவு.

சூழல்[தொகு]

தட்ப வெப்ப நிலை 20 லிருந்து 32 டிகிரி செல்சியசு ஆகவும், கடல் மட்டத்திலிருந்து 58 அடி உயரத்திலும் அமைந்த இந்த கிராமம் , கருப்பும் பழுப்பிலும் ஆன களிமண் படலத்தை கொண்டுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=விசுவநாதபுரம்&oldid=3480626" இலிருந்து மீள்விக்கப்பட்டது