விசிறியுடன் ஒரு பெண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
விசிறியுடன் ஒரு பெண்
பிரெஞ்சு: La Femme à l'Éventail
Jean Metzinger, 1913, La Femme à l'Éventail, Woman with a Fan, oil on canvas, 92.8 x 65.2 cm, Art Institute of Chicago..jpg
ஓவியர்யோன் மெட்சிங்கெர்
ஆண்டுஅண். 1913
வகைகன்வசில் எண்ணெய் வண்ணம்
பரிமாணம்92.7 சமீ × 65.7 சமீ (36.5 அங் × 25.85 அங்)
இடம்சிக்காகோ கலை நிறுவனம்

விசிறியுடன் ஒரு பெண் என்பது, பிரான்சைச் சேர்ந்த ஓவியர் யோன் மெட்சிங்கர் என்பவர் வரைந்த ஓவியம் ஆகும். இந்த ஓவியம் 1914ம் ஆண்டு, பிராக் நகரில் காட்சிக்கு வைக்கப்பட்டது. இந்தக் கண்காட்சியில் எடுக்கப்பட்ட ஒளிப்படம் ஒன்று சியாத்தா பிராகா என்னும் சஞ்சிகையில் வெளியிடப்பட்டது. அந்த ஒளிப்படத்தில், மெட்சிங்கரின் 1913ம் ஆண்டைச் சேர்ந்த "வள்ளம்" (The Boat) எனத் தலைப்பிடப்பட்ட இன்னொரு ஓவியத்தின் அருகில் "விசிறியுடன் ஒரு பெண்" சுவரில் மாட்டப்பட்டிருக்கக் காணப்படுகிறது.[1][2] 1959ல் சிக்மன்ட் குன்சுட்டாட்டர் தம்பதியரால் நன்கொடையாக வழங்கப்பட்ட இவ்வோவியம் இப்போது, சிக்காகோ கலை நிறுவனத்தின், மத்தியகாலம் முதல் நவீன காலம் வரையான ஐரோப்பிய ஓவியங்களும் சிற்பங்களும் என்னும் தலைப்பிலான காட்சிச்சாலையில் நிரந்தரச் சேமிப்பில் உள்ளது.[3]

விபரங்கள்[தொகு]

கன்வசில் வரையப்பட்ட ஒரு எண்ணெய் வண்ண ஓவியமான இது, 92.7 x 65.7 சமீ (36 1/2 x 25 7/8 அங்.) அளவு கொண்டது. இடது கீழ் மூலையில் JMetzinger என ஓவியர் கையொப்பம் இட்டுள்ளார். இதில் அழகாக உடுத்திய ஒரு பாரிசு நகரப் பெண்ணின் உருவம் உள்ளது. இது மெட்சிங்கெர் 1909 ஆம் ஆண்டில் மணம்புரிந்த லூசி சோபிரன் என்பவரது தோற்றமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.[4] வடிவவியல் அடிப்படையில் கியூபிசப் பாணியில் வரையப்பட்ட இப்பெண் உருவத்தின் தலையில் இறகுடன் கூடிய ஒரு தொப்பியும் கையில் ஒரு விசிறியும் (வலது கீழ்ப் பகுதியில் காணப்படுகிறது) உள்ளது. மேசை மீது ஒரு சாடியும், அலங்கார சுவர்த்தாளும் பின்னணியில் காணப்படுகின்றன.

விசிறியுடன் இருக்கும் பெண்ணின் தோற்றத்தை ஒரு புள்ளியிலிருந்து பார்ப்பதுபோல் காட்டாமல் ஒரு அசைவுத் தோற்றமாகப் பல்வேறு புள்ளிகளிலிருந்தும், வேறுபட்ட கோணங்களிலிருந்தும் மெட்சிங்கெர் காட்டியுள்ளார். பெண்ணின் முகம், கழுத்து, தொப்பி என்பன தொடர்ச்சியான கோணங்கள் அல்லது அமைவிடங்களில் இருந்து நீடித்த காலத்தினூடாகக் கவனிக்கப்பட்ட தோற்றங்களை ஒரு சிக்கலான தொடரான பக்கத் தோற்றங்களாகவும், முன் தோற்றங்களாகவும் ஒரே நேரத்தில் பார்க்கும் வகையில் தருகிறது.[4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Tsjechisch kubistische schilderkunst (Czech cubist painting), Kubisme (in Dutch)
  2. Alex Mittelmann, 2012, Jean Metzinger, Divisionism, Cubism, Neoclassicism and Post-Cubism
  3. Art Institute of Chicago, Jean Metzinger, La Femme à l'Éventail (Woman with a Fan)
  4. 4.0 4.1 Joann Moser, 1985, Jean Metzinger in Retrospect, Cubist Works, 1910–1921, The University of Iowa Museum of Art, J. Paul Getty Trust, University of Washington Press
  5. Daniel Robbins, Jean Metzinger: At the Center of Cubism, 1985, Jean Metzinger in Retrospect, The University of Iowa Museum of Art, J. Paul Getty Trust, University of Washington Press
"https://ta.wikipedia.org/w/index.php?title=விசிறியுடன்_ஒரு_பெண்&oldid=1917770" இருந்து மீள்விக்கப்பட்டது