விசித்திர வனிதா
விசித்ர வனிதா | |
---|---|
இயக்கம் | கே. சுப்பிரமணியம் |
தயாரிப்பு | கே. சுப்பிரமணியம் எம். யு. ஏ. சி |
கதை | கதை பிரதர் லக்ஸ்மணன் |
இசை | பிரதர் லக்ஸ்மணன் |
நடிப்பு | எஸ். கிருஷ்ணசாமி கே. குமாரசாமி கே. எஸ். மணி ஏ. எம். சோமசுந்தரம் பி. எஸ். சரோஜா பி. ஏ. பெரியநாயகி கே. லக்ஸ்மி காந்தம் அங்கமுத்து |
வெளியீடு | அக்டோபர் 10, 1947 |
ஓட்டம் | . |
நீளம் | 14653 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
விசித்ர வனிதா 1947-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தை கே. சுப்பிரமணியம் தயாரித்து இயக்கினார்.[1] இதில் எஸ். கிருஷ்ணசாமி, கே. குமாரசாமி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[2]
கதை
[தொகு]தவறான அடையாளங்கள் மக்களிடையே வேடிக்கைக்கும், தவறான புரிதலுக்கும் வழி வகுக்கிறது என்பதை கதை சொல்கிறது. ஒரு பணக்கார இளைஞனைக் காதலிக்கும் ஒரு பெண் அவன் கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் ஈடுபடுவது கதையின் முக்கிய பகுதியாகும்.[2]
நடிகர்கள்
[தொகு]பிலிம் நியூஸ் ஆனந்தனின் தரவுத்தளத்திலிருந்தும்,[3] தி இந்து நாளிதழில் வந்த ஆய்வுக் கட்டுரையிலிருந்தும் இந்தப் பட்டியல் தொகுக்கப்பட்டுள்ளது.[2]
- பி. எஸ். சரோஜா
- சித்ரா எஸ். கிருஷ்ணசுவாமி
- பி. ஏ. பெரியநாயகி
- புளிமூட்டை இராமசாமி
- கே. எஸ். அங்கமுத்து
- கே. குமரசாமி
- கே. எஸ். மணி
- கே. இலட்சுமிகாந்தன்
- ஏ. எம். சோமசுந்தரம்
தயாரிப்பு
[தொகு]இப்படத்தின் இயக்குநரான கே. சுப்பிரமணியமே படத்தைத் தயாரித்தர். படத்தின் ஒரு பகுதி மதுரையின் புறநகர் பகுதியான திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ள சித்ரகலா மூவிடோன் ஸ்டுடியோவில் எடுக்கப்பட்டது. மீதமுள்ளவை மதராசில் உள்ள நெப்டியூன் ஸ்டுடியோவில் படமாக்கபட்டன. அன்றைய பிரபல பாடகியும் நட்சத்திரமுமாக இருந்த பி. ஏ. பெரியநாயகி துணை வேடத்தில் நடித்தார்.
இக்கதை ஆலிவர் கோல்ட்ஸ்மித்தின் ஆங்கில நாடகமான 'ஷி ஸ்டூப்ஸ் டு கான்குயர்' என்ற நகைச்சுவை நாடகத்தை அடிப்படையாகக் கொண்டது.[2]
இசை
[தொகு]படத்திற்கு பிரதர் லட்சுமணன் (திரைக்கதை மற்றும் வசனம் எழுதியவர்) இசையமைத்தார். படத்தில் பல தேசபக்தி பாடல்கள் இருந்தன. பி. ஏ. பெரியநாயகி பல பாடல்களைப் பாடினார்.[2]
வரவேற்பு
[தொகு]இப்படம் வெற்றி பெற்று கல்லாகட்டியது. பி. எஸ். சரோஜா மற்றும் 'புளிமூட்டை' ராமசாமி ஆகியோரின் நகைச்சுவை மற்றும் நடிப்புக்காக இது நன்றாக நினைவுகூறப்படுகிறது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Ashish Rajadhyaksha; Paul Willemen. Encyclopedia of Indian Cinema. Oxford University Press, New Delhi, 1998. p. 654.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 Guy, Randor (20 June 2008). "Vichitra Vanitha 1947". தி இந்து. Archived from the original on 29 May 2017. பார்க்கப்பட்ட நாள் 29 May 2017.
- ↑ Film News Anandan (23 அக்டோபர் 2004). Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru [History of Landmark Tamil Films] (in Tamil). Chennai: Sivakami Publishers. Archived from the original on 29 மே 2017. பார்க்கப்பட்ட நாள் 29 மே 2017.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link)