விசித்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
விசித்ரா
பிறப்புவிசித்ரா வில்லியம்ஸ்
பணிநடிகை
செயல்பட்ட 
ஆண்டுகள்
1991–2002

விசித்ரா என்பவர் இந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நடித்துள்ளார்.

தலைவாசல் திரைப்படத்தில் 1992ல் கவர்ச்சியான கதாப்பாத்திரத்தில் அறிமுகம் ஆனார். இவர் முத்து, ரசிகன், சுயம்வரம் போன்ற எண்ணற்றத் தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.[1]

மாமி சின்ன மாமி என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்துள்ளார். இவருக்கு திருமணம் ஆனதும், நடிப்பதை விட்டு புனேவில் தங்கிவிட்டார்.[2]

நடிகரான வில்லியம்ஸ் என்பவரின் மகளாவார். இவருக்கு இரு சகோதரிகளும், ஒரு சகோதரனும் உள்ளார்கள். 2011ல் இவரது தந்தை ஒரு கொள்ளை சம்பவத்தில் கொலைசெய்யப்பட்டார்.[3]

ஆதாரங்கள்[தொகு]

  1. "Rasigan". indolink.com. மூல முகவரியிலிருந்து 8 May 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 11 July 2018.
  2. "Vichitras father murdered". indiaglitz.com (14 September 2011). மூல முகவரியிலிருந்து 1 June 2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 11 July 2018.
  3. Mahalingam Ponnusamy (14 September 2011). "Hooded robbers kill actor's father". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. http://timesofindia.indiatimes.com/city/chennai/Hooded-robbers-kill-actors-father/articleshow/9973899.cms?referral=PM. பார்த்த நாள்: 12 February 2014. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=விசித்ரா&oldid=2717410" இருந்து மீள்விக்கப்பட்டது