விசால்பூர்
தோற்றம்
விசால்பூர் கிராமம் Visalpur Village | |
|---|---|
கிராமம் | |
| அடைபெயர்(கள்): Visalpur Gam | |
| ஆள்கூறுகள்: 22°54′49″N 72°29′39″E / 22.9134754°N 72.494093°E | |
| நாடு | |
| மாநிலம் | குசராத் |
| மாவட்டம் | அகமதாபாத் |
| அரசு | |
| • வகை | கிராம ஊராட்சி |
| • நிர்வாகம் | கிராம ஊராட்சி |
| மக்கள்தொகை (2011)[1] | |
| • மொத்தம் | 4,508 |
| மொழிகள் | |
| • அலுவல் | குசராத்தி, இந்தி, ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| PIN | 382210 |
| வாகனப் பதிவு | GJ-1,GJ-27 |
| இணையதளம் | gujaratindia |
விசால்பூர் (Visalpur) என்பது இந்தியாவின் குசராத் மாநிலத்தின் அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள தசக்ராய் வட்டத்தில் உள்ள கிராமமாகும்.[2] சபர்மதி ஆற்றின் கரைக்கு அருகில் இக்கிராமம் அமைந்துள்ளது. மாவட்ட தலைமையகமான அகமதாபாத்திற்கு மேற்கே 17 கி.மீ தொலைவிலும், தசக்ராயில் இருந்து 2. கி.மீ தொலைவிலும் மாநில தலைநகரான காந்திநகரிலிருந்து 43 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. விசால்பூரின் அஞ்சல் குறியீடு 382210 ஆகும். அஞ்சல் தலைமையகம் சர்கேசு ஆகும். இந்திய அரசியலமைப்பு மற்றும் பஞ்சாயத்து இராச்சிய சட்டத்தின் படி விசால்பூர் கிராமம் கிராம பிரதிநிதியால் தேர்ந்தெடுக்கப்பட்ட சர்பஞ்சால் (கிராமத் தலைவர்) நிர்வகிக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Census Organization of India: Data from the Population Census 2011, including cities, villages and towns (Provisional)". Census Organization of India. Retrieved 2015-04-17.
- ↑ "Ahmedabad District Panchayat: Data from the Ahmedabad District Panchayat, including Villages of Daskroi Taluka (Provisional)". Ahmedabad District Panchayat. Retrieved 2015-04-22.