விசாகா சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விசாகா சிங்
Vishakha Singh
சூலை 2017 இல் விசாகா சிங்
பிறப்புஅபு தாபி, ஐக்கிய அரபு அமீரகம்[1]
தேசியம்இந்தியன்
கல்விவணிகம், தில்லி பல்கலைக்கழகம்
பணிநடிகை மற்றும் தயாரிப்பாளர்

விசாகா சிங் (Vishakha Singh) என்பவர் ஓர் இந்தியத் திரைப்பட நடிகை மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் 1986 ஆம் ஆண்டு மே மாதம் 5 அன்று பிறந்தார்.

பாலிவுட் திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பே தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் இவர் தோன்றியுள்ளார். 2010 ஆம் ஆண்டு அசுதோசு குவாரேக்கரின் இயக்கத்தில் கெலெயின் ஊம் சீ சான் சே என்ற திரைப்படத்தில் இவர் அபிசேக் பச்சன் மற்றும் தீபிகா படுகோனேயுடன் இணைந்து நடித்துள்ளார். இந்த படத்தில் நடித்ததற்காக 2010 ஆம் ஆண்டின் சிறந்த திருப்புமுனை நடிப்பிற்காக வழங்கப்படும் சிடார்டசுட்டு விருதுக்கு விசாகா சிங்ஙின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது [2].

இலண்டன் மற்றும் துபாய் நாடுகளை அடிப்படையாகக் கொண்ட இவரது தந்தையின் நிறுவனத்தில் ஒரு பகுதி நேர துணிச்சலான முதலாளியாகவும் விசாகா சிங் பணியாற்றுகிறார். அவரது தந்தையின் பெயர் திரு சிதேந்திர சிங் ஆகும். பிரான்சு கான் நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் கான் திரைப்பட விழாவில் சிகப்பு கம்பள வரவேற்புடன் அடிக்கடி அழைக்கப்படுகிற நபர்களில் இவரும் ஒருவராவார். அங்கு 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற திரைப்படத் திருவிழாவில் தயாரிப்பாளர்களுக்காக நடைபெற்ற பட்டறையில் இவரும் ஒரு பகுதியாக இருந்தார். இத்தாலி மற்றும் ஐரோப்பிய திரைப்படத் தயாரிப்பாளர்களுக்காக மே 2015 இல் ரோமில் நடைபெற்ற மிகப்பெரிய திரைப்பட விழாக்களில் ஒன்றான தனிநபர் திரைப்படத் திருவிழாவிற்கு நடுவராக பணியாற்ற விசாகா சிங் அழைக்கப்பட்டார் [3]. சிருசிட்டி மதுரை குழுவின் உறுப்பினர்களில் ஒருவராகவும் இவர் உள்ளார் [4].

வாழ்க்கைப் பணி[தொகு]

அபுதாபி இந்திய பள்ளியிலும் தில்லி பொதுப் பள்ளியிலும் விசாகா சிங் கல்வி கற்றார் [5]. தில்லி பல்கலைக்கழகத்தில் இவர் தன்னுடைய வணிகக் கல்வியைக் கற்று பட்டம் பெற்றார் [6]. தான் ஒரு ஆசிரியராக வேண்டும் என விரும்பியதாக தெரிவித்த விசாகா சிங் தன்னுடைய பட்டமேற்படிப்பை விளம்பரம் மற்றும் பொதுமக்கள் தொடர்பியல் துறையில் முடித்தார் [7]. 2007 ஆம் ஆண்டிலிருந்து விளம்பர மாதிரியாக வலம் வரத் தொடங்கிய இவர் பல தொலைக்காட்சிகளிலும் அச்சிட்ட வணிக இதழ்களிலும் தோன்றினார் [8]. 2007 ஆம் ஆண்டில் முதன்முதலாக ஞானப்பாக்கம் என்ற தெலுங்குத் திரைப்படத்தில் நடித்து திரை உலகிற்கு அறிமுகமானார். அத்திரைப்படம் அவருக்கு உரிய வெற்றியை பெற்றுத் தரவில்லை [8]. இதன் பின்னர் தமிழ் மொழித் திரைப்படம் ஒன்றிலும் அவுசுபுல், அந்தராத்மா என்ற இரண்டு கன்னட மொழித் திரைப்படங்களிலும் நடித்தார்.

அவர் அம் சே சகான் என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் இந்தி திரை உலகிற்கு அறிமுகமானார். 2008 இல் இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்படவில்லை [8]. இருப்பினும் 2010 ஆம் ஆண்டு அசுதோசு குவாரேக்கரின் இயக்கத்தில் கெலெயின் ஊம் சீ சான் சே என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக இவர் திரும்பிப் பார்க்கப்பட்டார். இந்தத் திரைப் படத்தில் நடித்ததற்காக 2010 ஆம் ஆண்டின் சிறந்த திருப்புமுனை நடிப்பிற்காக வழங்கப்படும் சிடார்டசுட்டு விருதுக்கு விசாகா சிங்ஙின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டு இவ்விருது இவருக்கு வழங்கப்பட்டது[9][10][11][12][13]. அபிசித் சென் குப்தாவின் தோ அவுர் தோ பாஞ்ச் என்ற திரைப்படத்தில் நடித்தார் ஆனால் அத்திரைப்படமும் வெளியாகவில்லை.

2012 ஆம் ஆண்டில் விசாகா துணிச்சலாக ஒரு பட தயாரிப்பாளராகவும் முதலீடு செய்ய ஆரம்பித்தார். பெட்லர்சு என்ற வாசன் பாலா இயக்கிய திரைப்படத்திற்கு இணை தயாரிப்பாளராக இருந்தார். குனீத் மோங்காவும் அனுராக் காசியப்பும் இத்திரைபடத்தின் மற்ற தயாரிப்பாளர்கள் ஆவர். கான் திரைப்பட விழாவின் விமர்சகர் வாரத்திற்காக இத்திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டது [14][15]. சிலோக் சர்மா இயக்கிய அராம்கோர் என்ற திரைப்படத்திற்கும் இவர் இணை தயாரிப்பாளராக இருந்துள்ளார் [16]. 2015 இல் இத்திரைப்படம் திரைக்கு வந்தது. மூன்றாண்டுகளுக்குப் பின்னர் விசாகா மீண்டும் தமிழ்த் திரைப்படங்களில் தோன்ற ஆரம்பித்தார். கண்ணா லட்டு தின்ன ஆசையா இவருடைய இரண்டாவது தமிழ் திரைப்படமாகும். 2013 ஆம் ஆண்டு பொங்கல் திருநாளில் இத்திரைப்படம் வெளியானது. அந்த ஆண்டு வெளியான தமிழ்ப்படங்களில் இப்படம் ஒரு வெற்றிப் படமாக அமைந்தது. மீண்டும் பாலிவுட்டுக்குச் சென்ற விசாகா சிங் மூன்று படங்களுக்கு ஒப்பந்தமானர். அவை அடுத்தடுத்து 2013 இல் வெளியாகின. அங்குர் அரோரா மர்டர் கேசு, புகரி, பசதே ரகோ என்பன அம்மூன்று படங்களாகும். புகரி படம் பல்வேறு வித்தியாசங்களைக் கொடுத்தது என்றும் அப்படம் மக்களின் மனநிலையை மாற்றியது என்றும் விசாகா கூறியுள்ளார்.

ராச்சேசு பிள்ளையின் மோட்டார்சைக்கிள் டையரீசு என்ற மலையாள மொழிப் படத்தின் மூலம் இவர் மலையாள திரை உலகில் அடியெடுத்து வைத்தார். இதை அடுத்த வாலிப ராசா என்ற தமிழ்ப் படத்தில் நடித்தார். கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தில் நடித்த அனுபவம் இவருக்கு உதவியது[17]. மீண்டும் தெலுங்கிற்கு சென்ற இவ்ர் ரௌடி பெல்லோ என்ற படத்தில் நடித்தார். ஒரு பத்திரிகையாளராக மாயா டேப் என்ற இந்திப்படத்திலும் ஒரு ஊரில் இரண்டு ராசா என்ற தமிழ்படத்திலும் முக்கிய வேடங்களில் நடித்தார்.

இளம் சமூக சேவகர்களுக்கான காமன்வெல்த் நாடுகளின் விருது பெற்ற பாலின சமத்துவ போராளியான கோபி சங்கருடன் இணைந்து ஒரு சமூக செயல்பாட்டாளராகவும் விசாகா சிங் இயங்கி வருகிறார் [18][19][20][21][22][23][24].

திரைப்படங்கள்[தொகு]

ஆன்டு படம் பங்கு மொழி குறிப்புகள்
2007 ஞானபகம் சாரங்கி தெலுங்கு
2008 பிடிச்சிருக்கு மஞ்சு மரியதாஸ் தமிழ்
2008 ஹும்சே ஹை ஜஹான் ஈசா சிங் இந்தி
2009 ஹவுஸ்புல் ஐசுவரியா கன்னடம்
2010 அந்தராத்மா மகி சியாம் கன்னடம்
2010 தி ஜீனியஸ் ஆஃப் பியூட்டி ஆங்கிலம்
2010 கெலெயின் ஹும் ஜீ ஜான் சே பிரித்திலதா இந்தி
2013 கண்ணா லட்டு தின்ன ஆசையா சவுமியா தமிழ்
2013 அங்குர் அரோரா மர்டர் கேஸ் ரியா இந்தி
2013 புகரி நீத்து இந்தி
2013 பஜதே ரஹோ மன்பிரீத் இந்தி
2013 தி மாயா டேப் இந்தி படப்பிடிப்பில் [25]
2013 மோட்டார்சைக்கிள் டையரிஸ் மலையாளம் படப்பிடிப்பில்[26]
2013 வாலிப ராஜா தமிழ் படப்பிடிப்பில்[27]
2013 துரம் தெலுங்கு படப்பிடிப்பில்[28]
2013 ரவுடி பெல்லோ தெலுங்கு படப்பிடிப்பில்

மேற்கோள்கள்[தொகு]

 1. https://m.timesofindia.com/entertainment/bollywood/news-interviews/Film-pedigree-doesnt-ensure-BO-success-Vishaka/articleshow/24203607.cms?referral=PM
 2. "Bollywood's Best Actresses, 2010 – Rediff.com Movies". Rediff.com. 31 December 2010. பார்க்கப்பட்ட நாள் 5 November 2013.
 3. "Vishakha on the jury of film festival in Rome". The Times of India.
 4. "Committee Members - Srishti Madurai". srishtimadurai.org. Archived from the original on 2016-10-27. பார்க்கப்பட்ட நாள் 2018-04-26.
 5. "Film pedigree doesn't ensure BO success: Vishaka – Times Of India". Articles.timesofindia.indiatimes.com. 16 October 2013. Archived from the original on 5 நவம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 5 November 2013.
 6. "Vishakha Singh returns to Telugu movies – The Times of India". Timesofindia.indiatimes.com. 1 January 1970. பார்க்கப்பட்ட நாள் 5 November 2013.
 7. "Film pedigree doesn't ensure BO success: Vishaka – Times Of India". Articles.timesofindia.indiatimes.com. 16 October 2013. Archived from the original on 5 நவம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 5 November 2013.
 8. 8.0 8.1 8.2 "|". Deccanchronicle.com. 26 October 2013. Archived from the original on 5 நவம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 5 November 2013.
 9. "Vishakha Singh is a complete natural. She catches one's attention instantly.,". Taran Adarsh, Oneindia.com. 2 December 2010. Archived from the original on 30 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 26 ஏப்ரல் 2018. {{cite web}}: Check date values in: |access-date= (help)
 10. "Vishakha create a smouldering,". Nikhat Kazmi, Times of India. 2 December 2010.
 11. "Vishakha Singh does very well as Pritilata Waddedar,". Raja Sen Rediff.com. 3 December 2010.
 12. "Vishakha Singh are superb". Sarita Tanwar, Mid Day. 4 December 2010.
 13. "Vishakha Singh has her moments; she has an expressive face and equally expressive eyes". Komal Nahta, koimoi.com. 3 December 2010. Archived from the original on 8 டிசம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 26 ஏப்ரல் 2018. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
 14. "Vishakha Singh ventured into film production with Peddlers". The Times of India.
 15. sudhish kamath (26 May 2013). "Cup runneth over". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 5 November 2013.
 16. "I am not your typical actress: Vishakha Singh – Times Of India". Articles.timesofindia.indiatimes.com. Archived from the original on 2013-10-13. பார்க்கப்பட்ட நாள் 5 November 2013.
 17. "Vishakha is game for a motorcycle ride – Times of India". Articles.timesofindia.indiatimes.com. 7 October 2013. Archived from the original on 5 நவம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 5 November 2013.
 18. Gopi Shankar Madurai. "Why India Must Not Fail Santhi Soundarajan". Swarajya (,India). http://swarajyamag.com/sports/why-india-must-not-fail-santhi-soundarajan. பார்த்த நாள்: 2017-05-22. 
 19. "Human rights body rejects Santhi Soundarajan's complaint, claims it's too late to accept it". The News Minute. பார்க்கப்பட்ட நாள் 2017-05-22.
 20. "Santhi Set To Fight For Justice Jan 03, 2017, 19:43 IST, Times Now". Timesnow.tv. பார்க்கப்பட்ட நாள் 2017-05-19.
 21. "Ministry of sports served notice on Santhi Soundarajan's complaint". espn.in. பார்க்கப்பட்ட நாள் 2017-05-12.
 22. "Santhi's plea". The Hindu (Chennai, India). 21 December 2014. http://www.thehindu.com/todays-paper/tp-miscellaneous/tp-others/santhis-plea/article6711959.ece. 
 23. "Why We Should Join The Campaign Seeking Justice For Runner Shanthi Soundarajan". huffingtonpost.in. பார்க்கப்பட்ட நாள் 2017-05-12.
 24. "Santhi set to rebuild life as official athletic coach - The Hindu". thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 2017-05-12.
 25. Bollywood (2013-08-08). "'Fukrey' girl Vishaka Singh's next to be a supernatural thriller | CanIndia NEWS". Canindia.com. Archived from the original on 2013-11-05. பார்க்கப்பட்ட நாள் 2013-11-05.
 26. "'I have a karmic connection with Tamil films'". The New Indian Express. Archived from the original on 27 செப்டம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 27 January 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 27. "KLTA trio comes together for family entertainer - Times Of India". Timesofindia.indiatimes.com. 2013-06-12. பார்க்கப்பட்ட நாள் 2013-11-05.
 28. "Vishakha Singh to act with Manoj Bajpayee - Times Of India". Timesofindia.indiatimes.com. 2013-07-26. பார்க்கப்பட்ட நாள் 2013-11-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விசாகா_சிங்&oldid=3578737" இலிருந்து மீள்விக்கப்பட்டது