விசாகப்பட்டினம் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை


விசாகப்பட்டினம் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை (Visakhapatnam Refinery), இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவத்திற்கு சொந்தமான பாறைநெய் தூய்விப்பாலைகளில் ஒன்றாகும்..இது ஆந்திரா மாநிலத்தின் விசாகப்பட்டினம் நகர்புறத்தில் அமைந்துள்ளது.
1985ஆம் ஆண்டின் துவகக்த்தில் இவ்வாலையை நவீனப்படுத்தியப் பின் ஆண்டிற்கு 4.5 மில்லியன் டன் பெட்ரோலியப் பொருட்களை உற்பத்தி செய்தது. 1999ஆம் ஆண்டில் இதன் உற்பத்தி 7.5 மில்லியன் டன்னாக உயரந்தது. 2010ஆம் ஆண்டு முதல் இதன் ஆண்டு பெட்ரோலியப் பொருட்களில் உற்பத்தி 8.3 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது.
விசாகப்பட்டினம் பாறைநெய் தூய்விப்பாலை திரவ பெட்ரோலிய வாயு, நெய்தை, கற்கரி, எரிநெய், நேப்தா, அசுபால்ட்டு, கந்தகம், வானூர்தி எரிபொருள், எரிநெய் (fuel oil), மசகுநெய் (Lubricant Oil) செயற்கை உரங்கள் தார், மெழுகு, மற்றும் நெகிழி தயாரிக்க தேவையான பெட்ரோலியப் பொருட்களை உற்பத்தி செய்கிறது
விரிவாக்கம்
[தொகு]விசாகப்பட்டினம் பாறைநெய் தூய்விப்பாலையில் கூடுதலாக ஆண்டிற்கு 3 மில்லியன் டன் பெட்ரோலியப் பொருட்களை இன்னும் மூன்றாண்டுகளில் உற்பத்தி செய்வதற்கு இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது.[1]