விசயலட்சுமி (கவிஞர்)
தோற்றம்
விஜயலக்ஷ்மி | |
|---|---|
| பிறப்பு | ஆகத்து 2, 1960 எர்ணாகுளம், கேரளா, இந்தியா |
| மொழி | மலையாளம் |
| தேசியம் | இந்தியன் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | ' |
| துணைவர் | பாலசந்திரன் சுள்ளிக்காடு |
விஜயலஷ்மி ( ஆங்கிலம்: Vijayalakshmi) மலையாள மொழிக் கவிஞர் ஆவார். இவர் இந்தியாவின் கேரளாவைச் சார்ந்தவர். இவர் 1960 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 2 ஆம் நாள் பிறந்தார். இவர், 1980க்கும், 2010க்கும் இடைப்பட்ட காலத்தில் சுமார் 199 கவிதைகளை இயற்றியுள்ளார்.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]விஜயலட்சுமி 1960 ஆகஸ்ட் 2 அன்று குழிக்காட்டில் ராமன் வேலாயுதன், காமாட்சி இணையருக்கு மகளாகப் பிறந்தார். இவர், சோற்றானிக்கரை அரசு உயர்நிலைப்பள்ளி, எர்ணாகுளம் புனித தெரசா கல்லூரி, எர்ணாகுளம் மகாராஜாவின் கல்லூரி ஆகிய நிறுவனங்களில் தனது படிப்பை நிறைவு செய்தார். இவர் உயிரியல் பாடத்தில் பட்டத்தையும், மலையாள இலக்கியத்தில் முதுநிலை பட்டத்தையும் கேரள பல்கலைக்கழகத்தில் முதல் தரத்தில் பெற்றார். இவர் புகழ் பெற்ற மலையாள கவிஞரான பாலச்சந்திரன் சுள்ளிக்காடு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "എന്റെ കവയിത്രി". Indian Express Malayalam (in மலையாளம்). 2018-07-26. Retrieved 2019-03-25.
வெளி இணைப்புகள்
[தொகு]- Vijayalakshmi: A devout feminist (Unnikrishnan Atiyodi in Kerala Calling March 2014)
- "Deshabhimani Weekly - ഫാഷിസത്തിന്റെ വെളുത്ത താടി". archive.is. 2013-10-23. Archived from the original on 23 October 2013. Retrieved 2019-03-25.
{{cite web}}: CS1 maint: bot: original URL status unknown (link) - Saccidānandan (2001). Indian Poetry: Modernism and After : a Seminar. Sahitya Akademi. pp. 75–. ISBN 978-81-260-1092-9.