விசயபாலன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விசயபாலன்
பரம-பட்டாரக மகாராசாதிராச பரமேசுவரன்
சந்தேல அரசன்
ஆட்சிக்காலம்சுமார். பொ.ச.1035-1050
முன்னையவர்வித்யாதரன்
பின்னையவர்தேவவர்மன்
துணைவர்புவனதேவி
அரசமரபுசந்தேலர்கள்
தந்தைவித்யாதரன்

விசயபாலன் (Vijayapala ; ஆட்சிக் காலம் பொ.ச. 1035-1050 ) மத்திய இந்தியாவை ஆண்ட சந்தேல வம்சத்தின் அரசனாவான். செகசபுக்தி பிராந்தியத்தின் (இன்றைய மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் உள்ள புந்தேல்கண்ட்) ஆட்சியாளராக இருந்தான்.

விசயபாலன், சந்தேல மன்னன் வித்யாதரனுக்குப் பிறந்தவன். இவரது ஆட்சிக் காலத்து கல்வெட்டு எதுவும் கிடைக்கவில்லை.[1] பல சந்தேல கல்வெட்டுகளில் இவன் குறிப்பிடப்பட்டுள்ளான். ஆனால் இவற்றில் பெரும்பாலானவை தெளிவற்ற புகழ்ச்சிகளை மட்டுமே கொண்டிருக்கின்றன. எடுத்துக்காட்டாக, மவூ கல்வெட்டு, இவன் எல்லா பொல்லாத மனிதர்களையும் கொன்று கலியுகத்திற்கு முடிவு கட்டினான் என்று அறிவிக்கிறது.[2]

வித்யாதரனது ஆட்சியின் முடிவில், கசனவித்துகளின் படையெடுப்புகள் இராச்சியத்தை பலவீனப்படுத்தியது. இதை சாதகமாக பயன்படுத்தி, காலச்சூரி மன்னன் கங்கேயதேவன் இவர்களின் இராச்சியத்தின் கிழக்கு பகுதிகளை கைப்பற்றினான். [3] விசயபாலன் ஒரு போரில் கங்கேயனின் பெருமையை உடைத்ததாக ஒரு உடைந்த மஹோபா கல்வெட்டு கூறுகிறது.[4]

விசயபாலனின் ஆட்சியின் போது குவாலியரின் கச்சப்பகதாக்கள் சந்தேலர்களுக்கு தங்கள் விசுவாசத்தை கைவிட்டிருக்கலாம். சாஸ்-பாகு கல்வெட்டில் கச்சப்பகதா ஆட்சியாளன் மூலதேவனுக்கு அதிக ஒலி கொண்ட தலைப்புகள் பயன்படுத்தப்பட்டதன் மூலம் இது சுட்டிக்காட்டப்படுகிறது.[5]

விசயபாலனின் ஆட்சிக் காலத்தில் சந்தேல இராச்சியத்தின் வீழ்ச்சி தொடங்கியது.[6] இவனது வாரிசான தேவவர்மன் இராணி புவனதேவியின் மகனாவான். [5] தேவவர்மனின் பொ.ச.1051 தேதியிட்ட நன்யயுரா செப்புத் தகடு விசயபாலனின் ஆட்சி இவ்வருடத்திற்கு முன்னரே முடிவடைந்ததை சுட்டிக்காட்டுகிறது.[2] இவனுக்குப் பின்னர் கிருத்திவர்மன் ஆட்சிக்கு வந்தான்.[5]

சான்றுகள்[தொகு]

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விசயபாலன்&oldid=3387028" இலிருந்து மீள்விக்கப்பட்டது