விசன்சர் ஏரி

ஆள்கூறுகள்: 34°23′17″N 75°07′08″E / 34.388119°N 75.11875°E / 34.388119; 75.11875
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விசன்சர் ஏரி
விசன்சர் ஏரியின் காட்சி
ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஏரியின் அமைவிடம்
ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஏரியின் அமைவிடம்
விசன்சர் ஏரி
ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஏரியின் அமைவிடம்
ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஏரியின் அமைவிடம்
விசன்சர் ஏரி
அமைவிடம்காந்தர்பல், காஷ்மீர் பள்ளத்தாக்கு
ஆள்கூறுகள்34°23′17″N 75°07′08″E / 34.388119°N 75.11875°E / 34.388119; 75.11875
வகைதாவர ஊட்டச்சத்துக்கள் குறைவாக உள்ள ஏரி
முதன்மை வரத்துகிருஷண்சர் ஏரி
முதன்மை வெளியேற்றம்நீலம் ஆறு
அதிகபட்ச நீளம்1 கிலோமீட்டர் (0.62 mi)
அதிகபட்ச அகலம்0.6 கிலோமீட்டர்கள் (0.37 mi)
கடல்மட்டத்திலிருந்து உயரம்3,710 மீட்டர்கள் (12,170 அடி)
உறைவுதிசம்பர் முதல் ஏப்ரல் வரை

விசன்சர் ஏரி (Vishansar Lake) என்பது இந்தியாவின் ஜம்மு மற்றும் காஷ்மீரின் காந்தர்பல் மாவட்டத்தில் சோன்மார்க் அருகே 3,710 மீட்டர் (12,170 அடி) உயரத்தில் பனி சூழ அமைந்துள்ள தாவர ஊட்டச்சத்துக்கள் ஒப்பீட்டளவில் குறைவாக உள்ள ஏரியாகும். இதன் அதிகபட்ச நீளம் 1 கிமீ மற்றும் அதிகபட்ச அகலம் 0.6 கிமீ. ஆகும்.

சொற்பிறப்பியல், புவியியல்[தொகு]

காஷ்மீரி மொழியில் விசன்சர் என்றால் விஷ்ணுவின் ஏரி என்று பொருள். இந்த ஏரி காஷ்மீரி பண்டிதர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இது பல வகையான மீன்களுக்கு தாயகமாகவும் உள்ளது. [1] அவற்றில் பழுப்பு டிரௌட் மீன்கள் அதிகளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஏரியானது குளிர்காலத்தில் உறைந்தும், கோடை காலத்தில், பசுமையான புல்வெளிகளால் சூழப்பட்டும் காணப்படுகிறது. இங்கு உள்ளூர் மேய்ப்பர்கள் தங்கள் செம்மறி ஆடுகளை மேய்ப்பார்கள். காஷ்மீர் பள்ளத்தாக்கில் மலையேற்றப் பயணிகளை ஈர்க்கும் ஏரியானது இது, அதன் இயற்கை அழகு, பனி படர்ந்த மலைகள், சிறிய பனிப்பாறைகள், புல்வெளிகள், அல்பைன் மலர்கள் போன்றவற்றால் நிரம்பியுள்ளது. இது கிருஷண்சர் ஏரி மற்றும் பனியாறுகளால் சூழப்படுகிறது. இந்த ஏரியானது நீலம் ஆற்றின் ஆதாரமாக உள்ளது இது வடக்கு நோக்கி பதோப் வரை பாய்கிறது. பின்னர் மேற்கு நோக்கி குரேஸ் பள்ளத்தாக்கு வழியாக கட்டுப்பாட்டு கோடு வழியாக பாய்கிறது. ஏரிக்கு மேற்கேயுள்ள கட்சர் கண்வாய்க்கு 9 கிமீ தொலைவில் கட்சர் ஏரி உள்ளது.

அணுகல்[தொகு]

சிறிநகரிலிருந்து 115 கி.மீ தூரத்தில் வடகிழக்கிலும், சோன்மார்க்கிலிருந்து 35 கி.மீ தூரத்திலும் ஏரியானது அமைந்துள்ளது. சிறீநகர் வானூர்தி நிலையத்திலிருந்து 80 கிமீ சாலை வழியாக தேசிய நெடுஞ்சாலை 1 வழியாக சிட்காடி கிராமம் வரை செல்லல்லாம். அதில் இருந்து குதிரைவண்டிகளை அமர்த்தி 35 கிமீ நீளமுள்ள அல்பைன் மலையேற்றத்தை கடக்க முடியும். இதற்கு ஒரு முழு நாள் தேவைப்படும். மேலும் ஒருவர் கடல் மட்டத்திலிருந்து 4100 மீட்டர் உயரமுள்ள நிச்னாய் கணவாயைக் கடக்க வேண்டும். சூன் முதல் செப்டம்பர் வரை ஏரியைப் பார்வையிட சிறந்த காலமாகும். இங்கு எந்த தொலைதொடர்பு இணைப்புகளும் வேலை செய்யாது. அதன் பிறகு, அழகான இயற்கைக்காட்சிகளையும் ஏரிகளையும் பார்க்கலாம்.

புகைப்படங்கள்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "Fishes and Fisheries in high altitude lakes, Vishansar, Gadsar, Gangabal, Krishansar". Fao.org.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விசன்சர்_ஏரி&oldid=3507501" இலிருந்து மீள்விக்கப்பட்டது