விக்ரம் 3201
தோற்றம்
| General information | |
|---|---|
| Launched | 2025 |
| Designed by | இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் |
| Common manufacturer |
|
| Max. CPU clock rate | to 100 MHz |
| Architecture and classification | |
| Application | Designed for launch vehicle avionics and space missions |
| Instructions | Proprietary/custom instruction set (designed by ISRO) |
விக்ரம் 3201 (Vikram 3201) என்பது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் (ISRO) உருவாக்கப்பட்ட, இந்தியாவின் முதல் முழு உள்நாட்டு 32-பிட் விண்வெளி தர நுண்செயலி ஆகும். சண்டிகரில் உள்ள செமிகண்டக்டர் ஆய்வகத்தின் (SCL) உதவியுடன் உருவாக்கப்பட்ட இந்த செயலி, விண்வெளிப் பயணங்களில், செயற்கைக்கோள்களில் பயன்படும். இந்தியாவின் குறைக்கடத்தி தொழில்நுட்ப சுயசார்பு வரலாற்றில் இது முக்கியமான வெற்றியாகக் கருதப்படுகிறது.
- இது இந்தியாவின் 'ஆத்மநிர்பார் பாரத்' திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டு, செமிகான் இந்தியா 2025 நிகழ்வில் இந்த செயலி வெளியிடப்பட்டது.
- இது 2009 முதல் இஸ்ரோவால் பயன்படுத்தப்படும் விக்ரம் 1601 இன் மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும்.
- இந்த செயலி, விண்வெளி அமைப்புகளில் பயன்படும் அடா (Ada) நிரலாக்க மொழியையும், சி மொழியையும் ஆதரிக்கிறது.[1]
- இது 32-பிட் தகவல்களைச் செயலாக்கும் திறனையும், மேம்பட்ட கணக்கீடுகளுக்கும் உதவுகிறது.
- இது விண்வெளியின் கடுமையான சூழலைத் தாங்கும் வகையில், -55°C முதல் +125°C வரையிலான வெப்பநிலையைத் தாங்கும் திறன் கொண்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "ISRO, SCL develops 32-bit Microprocessors for space applications". Deccan Herald (in ஆங்கிலம்). Retrieved 2025-09-03.