விக்ரம் பொறியியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
விக்ரம் பொறியியல் கல்லூரி
உருவாக்கம்2001
முதல்வர்முனைவர் டி. அறிவொளி
அமைவிடம்சிவகங்கை, தமிழ்நாடு, இந்தியா
வளாகம்80 ஏக்கர், குடைசாய்
இணையதளம்http://www.vickramce.org

https://m.facebook.com/Vickramce/

https://www.facebook.com/vickramcollege/

விக்ரம் பொறியியல் கல்லூரி (Vickram College of Engineering) என்பது பொறியாளர்களால் நிறுவப்பட்டு நிர்வகிக்கப்படும் ஒரு தொழில்முறை கல்லூரியாகும். விக்ராம் கல்லூரியானது புதுதில்லியின் அகில இந்திய தொழில்நுட்பக் குழுவின் ஒப்புதல் பெற்றுள்ளது. இது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

இக்கல்லூரியானது கணினி அறிவியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பில், தகவல் தொழில்நுட்பம் ஆகிய மூன்று பிரிவுகளுடன் 2001 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2002 இல், மின் முற்றும் மின்னணுவியல் பிரிவு சேர்க்கப்பட்டது. 2004 ஆம் ஆண்டில், குடிசார் பொறியியல் மற்றும் இயந்திரப் பொறியியல் சேர்க்கப்பட்டது. தற்போது, இந்த கல்லூரியியல் சுமார் 1450 மாணவர்கள் பொறியியல் படிக்கின்றனர்.

இருப்பிடம்[தொகு]

இந்த கல்லூரி மதுரை- சிவகங்கை சாலையில் மதுரையில் இருந்து சுமார் 19 கிலோமீட்டர் தொலைவில் இல் அமைந்துள்ளது. இது சிவகங்கையில் இருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ளது. இக்கல்லூரி வளாகமானது 80 ஏக்கர் பரப்பளவில் உள்ளது.

படிப்புகள்[தொகு]

இக்கல்லூரியானது இளநிலை மற்றும் முதுநிலையில் பொறியியல் மற்றும் அறிவியல் பட்டப்படிப்புகளை வழங்குகிறது.

இளநிலை படிப்புகள்

  • பி.இ. - குடிசார் பொறியியல்
  • பி.இ. - கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
  • பி.இ. - இயந்திரப் பொறியியல்
  • பி.இ. - மின்னணு மற்றும் தொடர்பியல் பொறியியல்
  • பி.இ. - மின் மற்றும் மின்னணு பொறியியல்
  • பி.இ. - தகவல் தொழில்நுட்பம்

முதுநிலை பட்டப்படிப்புகள்

  • எம்.இ. - கணினி அறிவியல் மற்றும் பொறியியல்

வளாகம்[தொகு]

கல்லூரி வளாகமானது மதுரை சிவகங்கை நெடுஞ்சாலையில் 40 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. கல்வியகமானது 2,50,000 சதுர அடியில் உள்ளது. கோவில் நகரமான மதுரையிலிருந்து இந்த கல்லூரி 20 நிமிட பயணத் தொலைவில் உள்ளது.

நூலகம்[தொகு]

இக்கல்லூரி ஒரு நூலகத்தைக் கொண்டுள்ளது. கணினிமயமாக்கப்பட்ட இந்த நூலகத்தில் 12000 தலைப்புகளில் 20,000 நூல்கள் உள்ளன. கல்வி மற்றும் உலாவல் நோக்கங்களுக்காக இந்த நூலகத்தில் 12 கணினிகள் பொருத்தப்பட்டுள்ளன.

இணைய வசதி[தொகு]

கல்லூரிக்கு பிரத்தியேகமாக அகண்ட அலைவரிசை இணைய இணைப்பு 8 Mbit / s (1: 1) உள்ளது. ஒய்-ஃபையால் வளாகத்தில் உள்ள அனைத்து கணினிகளும் இணைக்கப்பட்டுள்ளன. விடுதிகளில் உள்ள கணினிகளும் இதில் இணைக்கப்பட்டுள்ளன.

விடுதிகள்[தொகு]

இங்கு மாணவர், மாணவியருக்கு தனித்தனியாக விடுதிகளானது வளாகத்திற்குள் அமைந்துள்ளன. ஒவ்வொரு விடுதிக்கும் ஒரு உணவக அலகு உள்ளது. விடுதியியல் தங்கியுள்ள மாணவர்கள் அவர்களுக்கான உணவை விடுதி உணவகத்திலிருந்தே பெற வேண்டும்.

மாணவர்களின் பொழுதுபோக்குக்காக, ஒவ்வொரு விடுதியிலும் தொலைக்காட்சி, நூலகம், உடற்பயிற்சிக் கூடம் மற்றும் இணைய உலாவல் வசதிகள் உள்ளன. அந்தந்த விடுதிகளுக்கு தனித்தனி தொலைபேசி இணைப்புகள் உள்ளன. உடற்கல்வி மற்றும் விளையாட்டுத் துறையால் வழங்கப்படும் வசதிகளையும் மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம்.

ஒய்-ஃபை இணைய அணுகல் கொண்ட கணினிகள் விடுதியில் உள்ளது.

வேலைவாய்ப்பு[தொகு]

இந்த கல்லூரி மாணவர்களின் வேலைவாய்ப்புக்காக ஆங்கில பேச்சுப் பயிற்சி, இயங்கலைத் தேர்வுகள், ஆளுமை மேம்பாட்டு பயிற்சிகள் போன்றவை வழங்கப்படுகிறன்றன.

மேலும் காண்க[தொகு]

அண்ணா பல்கலைக்கழகம்

வெளி இணைப்புகள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

https://www.annauniv.edu/cai/District%20wise/district/Madurai.php