உள்ளடக்கத்துக்குச் செல்

விக்ரம் சுகுமாரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விக்ரம் சுகுமாரன்
இறப்புசூன் 1, 2025
மதுரை
பணிதிரைப்பட இயக்குநர், நடிகர்

விக்ரம் சுகுமாரன் (Vikram Sugumaran, இறப்பு: ஜூன் 1, 2025) என்பவர் இந்தியத் தமிழ்த் திரைப்பட இயக்குநர், நடிகர், எழுத்தாளர் ஆவார். இவர் விமர்சன நோக்கில் பாராட்டைப் பெற்ற மதயானைக் கூட்டம் என்ற படத்தை இயக்கியவர். பொல்லாதவன், கொடிவீரன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.[1]

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

விக்ரம் சுகுமாரன் தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடியைச் சேர்ந்தவர். நடிகராகும் ஆசையில் சென்னைக்கு வந்து பாலு மகேந்திராவிடம் உதவியாளராக இணைந்தார்.[2] பாலுமகேந்திரா இயக்கத்தில் 1999 முதல் 2000 வரை வெளியான கதை நேரம் என்கிற தொலைக்காட்சித் தொடரில் வெளியான 56 குறும்படங்கள், ஜூலி கணபதி திரைப்படம் ஆகிவற்றில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தார்.[3] வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார். பின்னர் கொடிவீரன் படத்திலும் நடித்தார். மதுரையைக் களமாக கொண்ட ஆடுகளம் படத்திற்கு உரையாடல் எழுதினார். மதயானைக் கூட்டம் படத்தின் வழியாக இயக்குநராக அறிமுகமானார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தன் இரண்டாவது படமாக இராவண கோட்டம் என்ற படத்தை இயக்கினார். அடுத்து ஏறுதழுவலை மையமாகக் கொண்ட தேரும் போரும் என்ற படத்தை இயக்கி வந்தார்.

இறப்பு

[தொகு]

விக்ரம் சுகுமாரன் 2025 சூன் 1 அன்று மாரடைப்பு காரணமாக மதுரையில் இறந்தார்.[4][5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ஆனந்தப்பிரியா,தி.ஹரிஹரன், (in ta). ```மதயானைக் கூட்டம்'க்கு ரெண்டு க்ளைமாக்ஸ் யோசிச்சேன்; அது என்னன்னா?!" - விக்ரம் சுகுமாரன். https://cinema.vikatan.com/kollywood/director-vikram-sugumaran-interview. பார்த்த நாள்: 2023-02-25.
  2. ஜீவகணேஷ்.ப (2025-06-02) (in ta). Vikram Sugumaran: "'ஆடுகளம்' படத்தின் மதுரைத்தன்மைக்குக் காரணம் விக்ரம் சுகுமாரன்" - வெற்றிமாறன். https://cinema.vikatan.com/kollywood/director-vetrimaaran-about-vikram-sugumaran-contribution-to-aadukalam-movie. பார்த்த நாள்: 2025-06-03.
  3. "வெயில் மனிதர்களின் வாழ்க்கை! - விக்ரம் சுகுமாரன் நேர்காணல்". இந்து தமிழ் திசை. Retrieved 2023-02-25.
  4. "இயக்குநர் விக்ரம் சுகுமாரன் காலமானார்.". தினமணி. https://www.dinamani.com/cinema/cinema-news/2025/Jun/01/director-vikram-sugumaran-has-passed-away. பார்த்த நாள்: 2 June 2025.
  5. மலர், மாலை (2025-06-02). "இயக்குநர் விக்ரம் சுகுமாரன் மறைவு: திரைப்பிரபலங்கள் நேரில் அஞ்சலி - Director Vikram Sukumaran passes away: Film luminaries pay tribute in person". www.maalaimalar.com. Retrieved 2025-06-03.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்ரம்_சுகுமாரன்&oldid=4285886" இலிருந்து மீள்விக்கப்பட்டது