விக்ரம் சந்திர தாக்கூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விக்ரம் சந்திர தாக்கூர் (Vikram Chandra Thakur) இந்தியாவைச் சேர்ந்த ஒரு புவியியலாளர் ஆவார். இவரது பணிகள் இமயமலையின் பிராந்திய புவியியல் கண்டத்தட்டு இயக்கவியல் மற்றும் பூகம்ப புவியியல் போன்ற புவியியல் துறைகளில் கவனம் செலுத்துகின்றன.

இந்தியாவின் டேராடூனிலுள்ள வாடியா இமயமலைப் புவியியல் நிறுவனத்தின் இயக்குநராக முனைவர் தாக்கூர் பணிபுரிந்துள்ளார். இந்திய அறிவியல் அகாதமியின் உறுப்பினர் என்ற சிறப்பும் இவருக்கு உண்டு. 1983-1984 ஆம் ஆண்டிற்குரிய இந்திய அரசின் தேசிய கனிம விருதும் 2018 ஆம் ஆண்டு இந்திய அரசின் நான்காவது உயரிய குடிமை விருதான பத்மசிறீ விருதும் தாக்கூருக்கு வழங்கப்பட்டுள்ளன. [1][2]

கல்வி[தொகு]

இந்தியாவில் இமயமலை மாநிலமான இமாச்சலப் பிரதேசத்திலுள்ள தர்மசாலாவில் பிறந்தார். சண்டிகரிலுள்ள பஞ்சாப் பல்கலைக்கழகம் மற்றும் இசுக்காட்லாந்திலுள்ள அபெர்தீன் பல்கலைக்கழகங்களில் படித்து முதுநிலை அறிவியல் பட்டம் பெற்றார். இலண்டனின் இம்பீரியல் கல்லூரியில் முனைவர் பட்டத்தை முடித்தார்.

தொழில்[தொகு]

1962 ஆம் ஆண்டு முதல் 1965 ஆம் ஆண்டு வரை விக்ரம் சந்திர தாக்கூர் ஆசிரியராகப் பணியாற்றினார். 1972 ஆம் ஆண்டு வாடியா இமயமலை புவியியல் நிறுவனத்தில் சேர்ந்து அதன் இயக்குநராக ஓய்வு பெற்றார். 1972 ஆம் ஆண்டு முதல் 1986 ஆம் ஆண்டு வரை இந்நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானியாக பணியாற்றி பின்னர் அதன் இயக்குநராக 13 ஆண்டுகள் பணியாற்றினார். இமயமலை புவியியல், கட்டமைப்பு புவியியல் மற்றும் கண்டத்தட்டு இயக்கவியல் ஆய்வுகள்ளில் இவரது சிறப்பு கவனம் இருந்த்து.

சான்சுகர், லடாக், கர்வால், சம்பா, குமாவூன் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகியவற்றின் நிலப்பரப்புகளில் விரிவான ஆய்வு நோக்குடன் பணியாற்றினார். இந்திய அறிவியல் அகாடமியின் சக உறுப்பினரான இவர் 130 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். [2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Rashtrapati Bhavan witnessed a congregation of talents as President Kovind gave away Padma Awards: See Pics | India News" (in en-GB). https://www.timesnownews.com/india/photo-gallery/president-ram-nath-kovind-padma-bhushan-padma-shri-awards-2018-rastrapati-bhavan-april-2-ms-dhoni-pankaj-advani-manoj-joshi-photos/213347. 
  2. 2.0 2.1 "Dr. Thakur Gets Padma Sri". https://www.tribuneindia.com/news/uttarakhand/dr-thakur-gets-padma-shri/535092.html. 
  3. "पद्मश्री अवार्ड से नवाजे गए हिमाचल के डॉ. विक्रम चंद्र ठाकुर– News18 हिंदी". News18 India. பார்க்கப்பட்ட நாள் 2018-11-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்ரம்_சந்திர_தாக்கூர்&oldid=3079998" இலிருந்து மீள்விக்கப்பட்டது