விக்ரம் குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விக்ரம் கே. குமார்
தாய்மொழியில் பெயர்விக்ரம் குமார்
பிறப்புவிக்ரம் குமார்
1975
(வயது 43)
திருச்சூர்,
கேரளம்,
இந்தியா[1]
தேசியம்இந்தியா
பணிஇந்தியா
திரைக்கதை ஆசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
1998–தற்போது
வாழ்க்கைத்
துணை
ஸ்ரீனிநி வெங்கடேஷ்

விக்ரம் கே. குமார் என்பவர் இந்தியத் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் தெலுங்கு,தமிழ், இந்தி திரைப்படத்துறைகளில் படங்களை இயக்கியுள்ளார்.[2]

சென்னை கிறித்துவக் கல்லூரியில் பட்ட படிப்பை முடித்தார். 1997 இல் இயக்குனர் பிரியதர்சன் என்பவரிடம் துணை இயக்குனராக இணைந்தார். சந்திரலேகா என்ற திரைப்படத்திலும், டோலி சஜா கி ரக்னா. ஹேரா ஃபெரி திரைப்படத்திலும் துணை இயக்குனராக பணியாற்றினார்.

1998 இல் சைலண்ட் ஸ்க்ரீம் என்ற திரைப்படத்தினை முதன்முதலாக இயக்கினார். இத்திரைப்படம் சிறந்த சுயமுன்னேற்றத்திற்கான திரைப்படத்திற்கான தேசிய விருது பெற்றது.[3]

2001 இல் பெரியதிரை திரைப்படமாக தெலுங்கில் இஸ்டம் திரைப்படத்தினை இயக்கினார். இப்படத்தில் சிரேயா சரன் அறிமுகமானார்.யாவரும் நலம் (13பி) என்ற திகில் திரைப்படத்தினை நடிகர் மாதவனை நாயகனாக வைத்து இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் தந்தார்.

யாவரும் நலம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதிர்ஸ்டசாலி என்ற பெயரில் அதன் தொடர்ச்சியை எடுக்க திட்டமிட்டார். அப்படத்தின் நாயகனாக மாதவன் தேர்வு செய்யப்பட்ட போதும், கைவிடப்பட்டது.[4]

திரைப்படங்கள்[தொகு]

Key
Films that have not yet been released Denotes films that have not yet been released
ஆண்டு படம் மொழி குறிப்பு
1998 சயிலனட் ஸ்கீம் ஆங்கிலம்
2001 இஸ்டம் தெலுங்கு
2003 அலை தமிழ்
2009 யாவரும் நலம் தமிழ்
யாவரும் நலம் இந்தி
2012 இஸ்க் Telugu
2014 மனம் தெலுங்கு
2016 24 தமிழ்
2017 ஹலோ தெலுங்கு

விருதுகள்[தொகு]

தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா
  • சிறந்த தன்னம்பிக்கை திரைப்படத்திற்கான தேசிய விருது (இயக்குனர்) சயிலன்ட் ஸ்கீம் (1998)
தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்

ஆதாரங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்ரம்_குமார்&oldid=3681880" இருந்து மீள்விக்கப்பட்டது