விக்ரம்கோல் குகைக் கல்வெட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விக்ரம்கோல் கல்வெட்டு

விக்ரம்கோல் அல்லது பிக்ரம்கோல் குகை என்பது, வரலாற்றுக்கு முந்தைய கல்வெட்டுகளுக்காக (prehistoric inscriptions) அறியப்பட்ட, ஒரு வரலாற்றுக்கு முந்தைய தொல்லியல் களமாகும் (Prehistoric archaeological site).

அமைவிடம்[தொகு]

விக்ரம்கோல் குகை, இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் ஜார்சுகுடாவிற்கு அருகில் ஒதுக்கப்பட்ட பெல்பகார் வனவரம்புப் பகுதியில், பெல்பகாரிலிருந்து 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

கல்வெட்டுகள்[தொகு]

விக்ரம்கோல் குகையில் உள்ள கல்வெட்டுகள், சிவப்பு ஓச்சர் வண்ணத்தைப் பயன்படுத்தி, இயற்கையான பாறை வாழிடத்தில், சமமற்ற பாறை மேற்பரப்பில் எழுதப்பட்டு, பின்னர் செதுக்கப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுகள் 1930 ஆம் ஆண்டுகளில் கண்டறியப்பட்டன. இதனை முதன்முதலில் முனைவர் கேபி ஜெயஸ்வால் ஆய்வு செய்தார்.[1] இதன் காலம் கி.மு. 1500 ஆம் ஆண்டாகலாம் என்று கால அளவீடு செய்தார்.

இக்கல்வெட்டைப் பற்றி இரண்டு கோட்பாடுகள் உள்ளன: ஒரு சாரார் அதை ஒரு எழுத்தாகக் கருதி அறிவித்துள்ளனர். மற்றொரு சாரார் இதை ஒரு பாறை ஓவியமாகவோ (rock art) படிக்க இயலாத பாறை கிறுக்கல்களாகவோ (nonliterate rock carvings) இருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள்.

படிக்கத்தக்க வரிவடிவக் கோட்பாடு[தொகு]

விக்ரம்கோலில் உள்ள வரலாற்றுக்கு முந்தைய காலத்து எழுத்துக்கள், ஹாரப்பான் மற்றும் பிராமியின் கலவையை குறிக்கும், ஒரு சித்திர வடிவ எழுத்து முறையை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன என்பது ஜெயஸ்வாலின் கருத்தாகும். ஹாரப்பன் மற்றும் பிராமி ஆகிய இரண்டிற்கும் இடையே ஒரு தொடர்பை இக்கல்வெட்டு உருவாக்குகிறது என்றும் இவர் கருதுகிறார். கல்வெட்டு பொறிக்கப்பட்ட பகுதி 35 அடிக்கு 7 அடி பரப்பளவைக் கொண்டுள்ளது. அதை எழுதும் அமைப்பு (Writing system) என ஆதரிக்கும் சான்றுகள் இவை:

  • எழுத்துக்கள் கவனமாக வண்ணம் பூசப்பட்ட பின்னர் பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றை பிராமி பாறைக் கல்வெட்டுகளுக்கு இணையாக கருதலாம்
  • எழுத்துகள் வழக்கமான வரிகளில் உள்ளன (கரடுமுரடான பாறை மேற்பரப்பு காரணமாக சற்று சீராக இல்லை)
  • குறியீடுகள் வடிவங்களை அமைத்துள்ளன.சொற்றொடராக எழுதும் பழக்கத்தை காட்டுகின்றன. எழுத்துக்களை முதலில் வரைந்த பின்னர், பேனாவில் எழுதியது போலவே கல்வெடைப் பொறித்துள்ளனர்.
  • பிறையின் மேல் புள்ளி வைக்கும் (Bindu and Visarga) அமைப்பு அறிமுகமாகியுள்ளது. சில எழுத்துக்களுக்கு கீழே புள்ளிகள் வைக்கப்பட்டுள்ளன, சில சமயங்களில் புள்ளிகள் செமிட்டிக் எழுத்தைப் போலவே தோன்றுவது உண்மை.
  • வலது மூலையின் மேல் கோடு, ஒரே குறியீடு ஒன்றுக்கு மேற்பட்ட முறை மீண்டும் மீண்டும் வருவதால் இவை எண்களைச் சுட்டிக்காட்டலாம்.
  • சில எழுத்துக்கள் ஒலிப்பை வெளிப்படுத்துவது தெளிவாகிறது. ஒரே எழுத்தை இரண்டு முறை திரும்பத் திரும்பக் கூறுவது, மெய்யெழுத்து நகல் அல்லது இணைவுகளைக் குறிக்கும்.
  • அசையெழுத்து syllabary (alphabetic) என்பது அசைகளைக் குறிக்கும் குறியீடுகளைக் கொண்ட ஒலிப்பு எழுத்து முறையாகும். குறியீடுகளைக் கொண்ட ஒலிப்பு எழுத்து முறை என்ற நிலைக்கு வந்துவிட்டதாக கருதலாம்.

நரேஷ் பிரசாத் ரஸ்தோகி போன்ற பிற அறிஞர்கள், விக்ரம்கோல் கல்வெட்டின் தேதி இன்னும் விவாதத்திற்குரியதாக உள்ளது என்றும் அதன் எழுத்துக்கள் வாதவிவதங்களுக்கு உட்பட்டது என்றும் கூறுகிறார்கள் [2]

பொருள்விளங்கா குறியீட்டு அமைப்பு[தொகு]

ரிச்சர்ட் சாலமன் (Richard Solomon) போன்ற அறிஞர்கள் விக்ரம்கோல் குகைக் கல்வெட்டுகளை போலிக் கல்வெட்டுகள் (pseudo inscriptions) என்று முற்றிலுமாக நிராகரித்துள்ளனர் [3] இவை மேலோட்டமான செதுக்கப்பட்ட குறியீடுகள் என்றும், பிராமி எழுத்துக்களுடன் இவை சில ஒற்றுமைகளைக் கொண்டிருக்கலாம் என்றும் சி.எல். ஃபேப்ரி (C.L Fabri) கூறியுள்ளார்.எனினும் எழுத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாமல் ஒரு பண்படாத நாட்டுப்புற எழுத்துக்கான சாத்தியக்கூறுகளை மறுக்க முடியாது.[4]

புறக்கணிப்பு[தொகு]

அரசாங்க அமைப்புகளின் அலட்சியம் மற்றும் அக்கறையின்மை காரணமாக, கல்வெட்டுகள் அழிந்து வருவதாகவும், விசமிகளால் சேதப்படுத்தப்படுவதாகவும் சில வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். சுற்றியுள்ள மலைகளில் நிலக்கரி சுரங்கங்களின் செயல்பாடுகள், தேனிரும்பு (sponge iron) போன்ற தொழில்கள் இந்த வரலாற்று காலத்திற்கு முந்தைய தொல்லியல் களத்தில் சுற்றுச்சூழல் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. கல்வெட்டுகள் காணப்படும் குகைப் பாறை, முழுமையாகப் பாதுகாக்கப்படவில்லை. திறந்த நிலையில் உள்ள இக்குகைத்தளம் காற்றுச்சூழலால் சேதமடையலாம்.[5] கல்வெட்டுகளை சிதைப்பவர்களுக்கும் இச்சூழல் வாய்ப்பளிக்கிறது. இது பெல்பஹார் வரம்பில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் அமைந்திருப்பதால், இந்த இடத்தை அரசாங்க நிறுவனங்கள் புறக்கணிக்கும் வாய்ப்புள்ளது .

மற்ற கல்வெட்டுகள்[தொகு]

சுந்தர்கர் மாவட்டத்தில் (Sundergarh district) உள்ள கர்ஜன் டோங்கர் (Garjan Dongar) மற்றும் ஒரிசாவின் சம்பல்பூர் மாவட்டத்தில் உள்ள உஷாகோதி (Ushakothi) ஆகிய இடங்களில் பிராமி அல்லது வரலாற்றுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. Jayaswal, K.P (1933). "The Vikramkhol inscription". Indian Antiquary a Journal of Oriental Research 62: 58-60. https://archive.org/details/in.ernet.dli.2015.537235. 
  2. Rastogi, N.P. Origin of Brāhmī script: The Beginning of Alphabet in India. பக். 89. 
  3. Salomon, Richard (1998). Indian Epigraphy. Oxford University Press. பக். 20. https://archive.org/details/indianepigraphyg0000salo. 
  4. Fabri, C.L (1934–35). Latest Attempts to Read the Indus Script". In: Indian Culture. பக். 51–56. 
  5. "Rock Art Shelter of Vikramkhol - Vikramkhol - Jharsuguda". Indira Gandhi National Center for Archeology. பார்க்கப்பட்ட நாள் 4 November 2014.
  6. "Ushakothi". ஒடிசா அரசு. பார்க்கப்பட்ட நாள் 3 February 2015.