உள்ளடக்கத்துக்குச் செல்

விக்ரமாதித்ய சிங் (அரசியல்வாதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விக்ரமாதித்ய சிங் (Vikramaditya Singh ; பிறப்பு: அக்டோபர் 17, 1989) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தற்போது சிம்லா கிராமப்புற தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றுகிறார்.[1][2][3] இவர் ஹிமாச்சல பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் மறைந்த வீரபத்ர சிங்கின் மகனவார். இவரது தாயார் பிரதீபா சிங், மண்டி மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராவார் .

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

விக்ரமாதித்ய சிங் 1989 அக்டோபர் 17 அன்று சிம்லா மாவட்டத்தில் புஷாஹர் சமஸ்தானத்தின் அரச குடும்பத்தில் பிறந்தார். இவர் ஆறு முறை இமாச்சலப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வாராக இருந்த வீரபத்ர சிங் மற்றும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரதிபா சிங் ஆகியோரின் மகனாவார்.

விக்ரமாதித்ய சிங் சிம்லாவில் உள்ள பிஷப் காட்டன் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். டெல்லி பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

அரசியல்[தொகு]

விக்ரமாதித்யனின் தீவிரமான மாநில அரசியல் பயணம் 2013 இல் தொடங்கியது. இவர் இவர் இமாச்சலப் பிரதேச காங்கிரசு கட்சியில் இணைந்தார். 2013 ஆம் ஆண்டு முதல் 2017 [4] ஆண்டு வரை மாநில இளைஞர் காங்கிரசின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2017 இல், இவர் ஹிமாச்சல பிரதேச சட்டமன்றத்திற்கான சட்டமன்ற உறுப்பினராக சிம்லா கிராமப்புற தொகுதியில் இருந்து வெற்றி பெற்றார்.

சான்றுகள்[தொகு]

  1. "Details of MLA Vikramaditya Singh". hpvidhansabha.nic.in.
  2. "Vikramaditya Singh won from Shimla Rural in Himachal Pradesh Legislative Assembly election results live". https://www.thehindu.com/elections/himachal-pradesh-2017/live-updates-himachal-pradesh-legislative-assembly-election-results/article21830225.ece. 
  3. "Pdf ― list of Himachal Pradesh 2017 Legislative election winning candidates".
  4. "Vikramaditya Singh was not nominated but elected as president of state youth congress via democratic means says CM Virbhadra Singh". https://indianexpress.com/article/india/vikramaditya-singh-was-not-nominated-but-elected-via-democratic-means-himachal-cm-virbhadra-singh-4866211/.