விக்னர் விளைவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

விக்னர் விளைவு (Wigner effect) அல்லது அணுஇடப்பெயர்வு விளைவு (discomposition effect) என்பது திண்மம் ஒன்றை நியூத்திரன் கதிர்வீச்சிற்கு உட்படுத்தப்படும் போது அப்பொருளின் அணுக்கள் இடப்பெயர்ச்சிக்குள்ளாதல் ஆகும். அங்கேரிய இயற்பியலாளரும் நோபல் பரிசு பெற்றவருமான யூஜின் விக்னர் என்பவர் இதனைக் கண்டுபிடித்தார்.[1]

எந்த ஒரு திண்மமும் விக்னர் விளைவிற்கு உட்படலாம், ஆனால் இதனால் ஏற்படும் தாக்கம் விரைவு நியூத்திரன்களின் வேகத்தைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் கடுங்கரி போன்ற நியூத்திரன் மட்டுப்படுத்திகளில் பொதுவாக அதிகமாகவுள்ளது. இவற்றின் படிகத்தளம் (lattice) இதன் போது மாறுபடுகின்றது. இதனால் இயற்பியல் வடிவம் மாற்றமடைகிறது.

விக்னர் ஆற்றல்[தொகு]

விக்னர் விளைவு காரணமாகப் படிக நிலையிலுள்ள பொருட்களில் சேமிக்கப்படும் ஆற்றல் விக்னர் ஆற்றல் (Wigner energy) எனப்படும். அணு உலைகளில் கரியினை மட்டுப்படுத்தியாகப் பயன்படுத்தும் போது, நியூட்ரான்களால் இழக்கப்படும் சிறிதளவு ஆற்றல் கரியில் சேமிக்கப்படுகிறது. இவ்வாறு சேமிக்கப்பட்ட ஆற்றலே விக்னர் ஆற்றலாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Wigner, E. P. (1946). "Theoretical Physics in the Metallurgical Laboratory of Chicago". Journal of Applied Physics 17 (11): 857. doi:10.1063/1.1707653. Bibcode: 1946JAP....17..857W. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்னர்_விளைவு&oldid=2223121" இருந்து மீள்விக்கப்பட்டது