விக்டோரியா அமேசானிகா

விக்டோரியா அமோசானிகா (தாவரப்பெயர்:Victoria amazonica, Victoria regia) என்பது விக்டோரியா நீர் அல்லி இனத்தாவரங்களில் ஒன்று இதன் மலர், தென்அமெரிக்கா கரிபியன் கடல் பகுதி நாடான கயானாவின் தேசியமலர் ஆகும்.[1] உலகிலே பெரிய இலைகளை உடைய நீர் தாவரமாக உள்ளது. நன்கு வளர்ந்த இந்த தாவரத்தின் இலையின் விட்டம் 3 மீட்டர் அதாவது 10 அடிகள் வரை இருக்கும். இதன் தண்டு 8 மீட்டர் வரை நீருக்குள் நீண்டிருக்கும். நன்கு வளர்ந்த இலை, 40 முதல் 45 கிலோ வரை எடையைத் தாங்கும் திறனுடையது. இந்தியாவில் கல்கத்தா நகர தாவரவியல் பூங்கா ஏரிகளில் ஒன்றான, 'லேராம்' ஏரியில் இந்த தாவரம் பாதுகாக்கப்படுகிறது.[2]
பெயர் முழுமை
[தொகு]தென் அமெரிக்க நாடான பெருவில் விக்டோரியா அமெசானிகா தாவரம் முதன் முதலில் அறிவியல் தகவல் அறிதல் அடிப்படையில் கண்டறியப்பட்டது. ஐரோப்பிய நாடான ஜெர்மனியை சேர்ந்த தாவரவியலாளர் எட்வார்ட் பிரிடிரிக் பேப்பிக்யால் (Eduard Friedrich Poeppig) கண்டறியப்பட்டது. அதை கிழக்காசியாவில் காணப்படும் நீர் தாவரத்துடன் தொடர்புடையதாக கணித்தன் அடிப்படையில் Euryale amazonica என்ற பெயர் 1836ல் சூட்டப்பட்டது. ஜெர்மனி தாவரவியலாளர் ராபர்ட் ஹெர்மன் ஷொம்பர்க், அதே காலகட்டத்தில் பிரிட்டிஷ் கயானா பகுதியில் தாவர சேகரிப்பில் ஈடுபட்ட போது, இதை மீண்டும் கண்டறிந்து விரிவான குறிப்பு, வரைவுகள் மற்றும் தாவர மாதிரி சேகரிப்புகளை இங்கிலாந்து ராயல் போட்டானிக் கார்டன் நிறுவனத்துக்கு அனுப்பினார். அதை ஆராய்ந்த தாவரவிலாளர் ஜான் லிண்ட்லி 1837ல் ஆண்டு இதற்கு விக்டோரியா ரிஜிகா Victoria regia என 1837ல் பெயர் சூட்டினார். இது இங்கிலாந்து ராணி பெயருடன் அமைந்தது. பின் தாவரவியல் பெயராக விக்டோரியா அமேசானிகா என 1850ல் தாவரவிலாளர் ஜேம்ஸ் சவெர்பியால் [3]சூட்டப்பட்டது.